சிறகடிக்க ஆசை: பார்வதி வீட்டுக்கு ரோகிணி வந்தாளே? அண்ணாமலை கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா மீது விஜயா சந்தேகப்பட்டதற்கு அண்ணாமலை கோபப்பட்டு திட்டுகிறார். அதே நேரத்தில் ரோகிணி பற்றி அண்ணாமலை சொன்ன வார்த்தையை கேட்டு விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா முத்து மீனாவிற்கு பணத்தை கொடுக்கவில்லை என்றால் நான் வேலைக்கு போகிறேன் என்று அண்ணாமலை சொன்னதும், முத்துவும், மீனாவும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் விஜயாவும் மனோஜும் அண்ணாமலைக்கு வேலைக்கு போனால் பரவாயில்லை என்பதுபோல பேசுகிறார்கள்.

அடுத்ததாக ரோகிணி பார்வதி வீட்டிற்கு சென்று பணம் காணாமல் போனதால் வீட்டில் ஒரே பிரச்சனையா இருக்கு. அதை என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியல. அதனால நகைகளை விற்று விட்டேன் என்று சொல்லி ரெண்டு லட்சம் ரூபாய் கொடுத்து பணம் திருட்டு போகல அங்கதான் இருந்தது என்று அத்தை இடம் சொல்லி விடுங்கள் என்று சொல்கிறார்.
இதனால் பார்வதி ரோகிணி ரொம்ப நல்ல பொண்ணு என்று நினைத்து பாராட்டுகிறார். அதோடு நான் கொண்டு வந்த மருமகள் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ரோகிணி வீட்டிற்கு வந்து மனோஜிடம் மூன்று லட்சம் பணத்தை கொடுக்கிறார்.

அதற்கு மனோஜ் உனக்கு பணம் ஏது என்று கேட்கிறார். தாலி செயினை விற்றுட்டேன் என்று என்று சொல்கிறார். அடுத்ததாக அந்த பணத்தை மனோஜ் விஜயாவிடம் கொடுக்க விஜயா அதை முத்துவிடம் கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து பார்வதி போன் போட்டு பணம் தொலைந்து போகல இங்கே தான் இருக்கு என்று சொன்னதும் விஜயா வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார்.
உடனே முத்து அப்போ மீனாவை பார்த்து திருடி என்று அவளை அசிங்கப்படுத்துனது என்று கேள்வி கேட்கிறார். நான் என்ன கொலையா பண்ணிட்டேன்? என்று விஜயா கேட்க, மத்தவங்க மனச கஷ்டப்படுத்துவது கொலைக்கு சமம் தான், மீனா ஏழை வீட்டு மருமகள் என்பதால உன்னால பழி போட முடிந்தது.. நான் சொல்றதை தப்பா நினைச்சுக்காத அன்னைக்கு பணம் தொலைந்த போது ரோகிணி ஏதோ சாப்பாடு வாங்கிட்டு வந்தான்னு சொன்ன அப்போ உனக்கு ஏன் ரோகினி மேல சந்தேகம் வரல என்று அண்ணாமலை கேட்க, விஜயா எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.

இதுவரைக்கும் மீனா ஏன் அத்தை என்ன அப்படி சொன்னீங்க என்று கேட்டிருப்பாளா? மற்ற மருமகள்கள் அப்படி இருக்க மாட்டாங்க. என்மேல ஏன் பழி போட்டிங்க என்று சொல்லி சண்டை போட்டு இருப்பாங்க என்று சொல்லி, ஸ்ருதி என்ன பண்ணி இருப்பமா? என்று கேட்டதும் நான் செய்யாத தப்புக்கு யாராவது என் மேல பழி போட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லி சொல்கிறார்.
அதோடு மீனாவுக்கு அப்பா இல்லை.. அந்த இடத்தில் நான் இருப்பேன் என்று சொல்ல, மீனா அண்ணாமலை காலில் விழுந்து அழுகிறார். பின்பு கிடைத்த மூன்று லட்சத்தில் அண்ணாமலையின் காசை கொடுத்துவிட்டு மீதியை மீனாவின் அம்மா வைத்த நகைகளை திருப்பி எடுக்குமாறு முத்து கொடுக்க அதற்கு மீனா வேண்டாம் அதை அவங்க பாத்துக்குவாங்க நீங்க வண்டிக்கு டியூ கட்டி முடிங்க என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications