சிறகடிக்க ஆசை: முத்துவின் போனை எடுத்ததும் ரோகிணி செய்த செயல்.. ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 29ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி முத்துவின் ஃபோனை எடுத்து விடுகிறார். அதே நேரத்தில் மனோஜ்க்கு வீட்டிற்கே தேடிவந்து சிலர் மாலை மரியாதை செய்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா வாசலில் கோலம் போடுவதற்காக எழுந்து செல்கிறார். அப்போது அண்ணாமலை வீட்டு வாசலில் அண்ணன் தம்பி மூன்று பேரும் படுத்திருப்பதைப் பற்றி சொல்ல, அண்ணாமலை அவர்கள் 3 பேரையும் வீட்டிற்குள் அழைத்து அட்வைஸ் பண்ணுகிறார். அதோடு இனிமேல் இதுபோல குடிக்க கூடாது என்று வார்னிங் கொடுத்து அனுப்புகிறார்.

அப்போது விஜயா இவங்க ரெண்டு பேரையும் கெடுத்தது நீதான் என்று முத்துவை திட்ட உடனே மீனா அவரு ஒன்னும் யாரு குடும்பத்தையும் கெடுக்கல என்று சண்டைக்கு போக அதற்கு விஜயா அவன் எப்படி போனா எனக்கு என்ன சொல்கிறார். உடனே ஸ்ருதி ரவி மீது கோபப்பட்டு பேசுகிறார். பிறகு ரவியை ஸ்ருதி இழுத்து செல்ல ரோகிணி மனோஜை கூட்டி சென்று விடுகிறார். அந்த நேரத்தில் நீ மட்டும் என்ன சும்மா இருக்குற என்று முத்து கேட்க, அதற்கு மீனா இதுக்கு தான் நான் பல தடவை சொல்றேன் எல்லா பழியும் நீங்க வாங்கிக்கிறீங்க என்று கோபப்பட்டு திட்டி விட்டுப் போகிறார்.
அந்த நேரத்தில் ரோகிணி மனோஜின் கோட்டில் இருந்து முத்துவின் போனை எடுத்து பார்த்து சந்தோஷப்படுகிறார். மறுபக்கத்தில் முத்து ரூமிற்குள் வந்ததும் மீனா காபி கொண்டு வந்து கொடுக்க அதனை குடித்து பார்த்த முத்து இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்து இருக்கலாம் என்று கேட்டதும் அதான் நேத்து நைட்டு நல்லா ஸ்ட்ராங்கா போட்டிங்களோ என திட்டுகிறார்.

அந்த நேரத்தில் ரவி வந்து தலைவலிக்குது என்று சொல்ல அதற்கு முத்து ஃபர்ஸ்ட் அப்படித்தான் இருக்கும் போக போக சரியாயிடும் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும். இனிமே இப்படி குடிச்சா ரோட்ல தான் படுக்கணும் என்று சொல்லி மிரட்டுகிறார். இதைத் தொடர்ந்து மனோஜை பார்ப்பதற்கு நான்கு பேர் வருகிறார்கள். அவர்கள் மாலை போட்டு மரியாதை செய்கின்றனர்.

யாராலும் செய்து முடிக்க முடியாத ஒரு காரியத்தை நீங்க செஞ்சுட்டீங்க என்று மனோஜ்க்கு கிடைத்த புது பிசினஸ் பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள். பிறகு அவர்கள் போனதும் இனி என்னை பார்ப்பதற்கு இப்படி பல பேர் வருவார்கள் அவர்கள் முன்னாடி என்னை வாடா போடான்னு கூப்பிடாதீங்க என்று விஜயாவிற்கு கண்டிஷன் போடுகிறார்.
ஆனாலும் அவர் உன்னுடைய அம்மா தானே என்று முத்து சொல்லிருந்தாலும் நான் அப்படித்தான் சொல்லுவேன் என்று மனோஜ் சொல்லி விடுகிறார். இதைக் கேட்ட முத்து கழுத்துக்கு மாலை வந்ததும் ஓவரா பண்ணாத எல்லாருடைய நிலைமையும் ஒருநாள் மாறும்.. இதுகூட உண்மையான பிசினஸ்மேன் தான் வந்து மாலை போட்டாங்களா இல்ல இதுவும் காசு கொடுத்து நீ செட் பண்ண ஆளா என்று சொல்ல விஜயா அவன் பொறாமையில் பேசுறான் என்று சொல்கிறார்.

அதற்கு மீனா இந்த பிசினஸ் கிடைத்ததற்கு முத்து தான் காரணம் என்று சொல்ல வர முத்து அவருடைய கையை பிடித்து தடுத்து விடுகிறார். கடைசியாக முத்து சவாரிக்கு போகணும் என்று போனை தேட மீனாவும் சேர்ந்து தேடுகிறார். ஆனால் போனை காணவில்லை இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications