சுட்டித்தனமான வீடியோவால் அள்ளும் சிவாங்கி - எப்படிப்பட்ட காதலர் வேணுமாம் தெரியுமா
அடடா... அடடா... எனை ஏனோ செய்கிறார் என்று எல்லோரையும் பாட வைத்து விடுவார் போல சிவாங்கி. அந்த அளவிற்கு குறும்புத்தனமான வீடியோவை ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்.
சென்னை: சிவாங்கிக்கு நன்றாக பாடத்தான் வரும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் தன்னால் நடனமாடவும் முடியும் என்று ரீல்ஸ் போட்டிருகிறார். அதைப்பார்த்து பலரும் சோ... ஸ்வீட் என்று கொஞ்சத் தொடங்கியுள்ளனர். தனக்கு எப்படிப்பட்ட காதலர் வேண்டும் என்று கூறியுள்ளார் சிவாங்கி.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கரில் பாட வந்து பலராலும் அறியப்பட்டவர் சிவாங்கி. சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வருவர் என்று எதிர்பார்த்திருக்க... குக் வித் கோமாளியில் களமிறங்கினார்.
குக் வித் கோமாளியில் சில சீசன்கள் தொடர்ந்து கோமாளியாக வருகிறார். இவரது குறும்புத்தனத்திற்கும், சின்னச் சின்ன க்யூட்டான சேட்டைகளுக்கும் பாடலுக்கும் பலரும் ரசிகர்களாக உள்ளனர். அதுவும் அஸ்வினுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகளுக்காகவே நிறைய ரசிகர்கள் அந்த சீசனை தொடர்ந்து பார்த்தனர்.

சிவாங்கியின் சினிமா பயணம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பால் தமிழ் சினிமாவிலும் தற்போது நடிகையாக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் வெளியாகியுள்ள சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்திலும் நடித்துள்ளார்.
அதில் கொஞ்சலாக பேசும் தமிழ் பலரையும் கவர்ந்துள்ளது.

இன்ஸ்டாவில் ரீல்ஸ்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் மாடர்ன் உடை அணிந்து இவர் நடத்திய போட்டோ சூட் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. 1 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

நீல நிற ஆடையில் க்யூட் நடனம்
சந்தோஷ் சுப்ரமணியம் ஹீரோயின் ஹாசினியாக மாறி அந்த பாடலுக்கு நீல நிற உடை அணிந்து சின்னதாக ஆடிய நடனம் பலராலும் ரசிக்கப்பட்டுள்ளது. அடடா... அடடா... அடடா... எனை ஏனோ செய்கிறாய்... என்ற அந்த பாடலுக்கு சின்னதாக போட்ட ஒரு ஸ்டெப் அவரது ரசிகர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

சிவாங்கியின் காதலர்
குக் வித் கோமாளியின் லேட்டஸ்ட் எபிசோடில் ஷிவாங்கி பேசியது ரசிகர்களால் பகிரப்பட்டது. அந்த எபிசோடில் ஷிவாங்கியிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட காதலர் வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனக்கு விஜய் தேவரகொண்டா போல ஒருவர் காதலராக கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போ அஸ்வின் என்னாச்சு என்றும் பலரும் கேட்டு வருகின்றனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications