Lockdown: ஞாயிறு டபுள்ஸ்...சனி டபுள்ஸ்.. இனி நாளெல்லாம் டபுள்ஸ்தானா!?!
சென்னை: சன் டிவி கடந்த வருடம் மே மாதம் முதல் விடுமுறையில் மக்களை கட்டிப்போடும் விதமாக ஞாயிறு டபுள்ஸ் என்று பேக் டு பேக் இரண்டு திரைப் படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தது.
இன்றுவரை அப்படி ஞாயிறு டபுள்ஸ் என்று இரண்டு படங்களை ஒளிபரப்பி வரும் சன் டிவி கடந்த இரண்டு வாரங்களாக சனிக்கிழமையும் சனிக்கிழமை டபுள்ஸ் என்று பேக் டு பேக் இரண்டு படங்களை ஒளிபரப்பி வருகிறது.
கொரோனாவைரஸ் பீதி கிளம்பி மக்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தான் சன் டிவி சனிக்கிழமையும் சனிக்கிழமை டபுள்ஸ் என்று படங்களை ஒளிபரப்பத் துவங்கியது.

சன் டிவி சீரியல்கள்
fசன் டிவி சீரியல்களில் கடந்த பல வருடங்களாக முன்னிலை வகித்து வருகிறது. காலை 9:30 மணிக்கு சீரியல் ஆரம்பித்தால் பிற்பகல் 3:30 மணி வரை வரிசையாக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மாலை 6:30 மணிக்கு மீண்டும் சீரியல்கள் ஒளிபரப்பாக ஆரம்பித்தால் இரவு 11 மணி வரை வரிசையாக சீரியல்கள் என்று சன் டிவியில் ஒரே சீரியல் மயம்தான்.

லாக்டவுன் அமல்
லாக்டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் சினிமா ஷூட்டிங்.. சீரியல் ஷூட்டிங் என்று எதுவும் இல்லை. இதனால், இருக்கும் நடிகர்களை வைத்து அப்படி இப்படி என்று சில சீரியல்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டு இன்றுவரை அது ஒளிபரப்பாகியும் வருகிறது.

ஒரே குரல் டப்பிங்
அப்படி கொஞ்ச நஞ்சம் ஷூட்டிங் எடுக்கப்பட்ட சீரியல்களில் டப்பிங் கொடுக்க ஆட்கள் கிடைக்காமல் ஒரே குரலில் ஒரே காட்சியில் இருவருக்கும் மேற்பட்ட நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து, அந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் அவலமும் நேர்ந்து வருகிறது.

நாளெல்லாம் டபுள்ஸா
இந்த நிலையில் இப்படியே சீரியல்களை ஒப்பேற்றி ஒளிபரப்ப முடியாமல் போகும்போது சன் டிவி நாளெல்லாம் டபுள்ஸுன்னு பேக் டு பேக் படங்களை ஒளிபரப்பி வியூவர்ஸை தன் வசம் தக்க வச்சுக்குமா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications