Super Singer 11 winner: சூப்பர் சிங்கர் 11ல் வின்னரான நிகில், 2வது 3வது யார் தெரியுமா? மொத்த பரிசு தொகை இவ்வளவு!
சென்னை: விஜய் டிவியின் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 11 சீனியரின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்று நிறைவடைந்தது. பல வாரங்களாக நடைபெற்ற கடும் போட்டிகளுக்குப் பிறகு, இந்த சீசனின் டைட்டில் வின்னராக நிகில் தேர்வாகியுள்ளார்.
இசைத் திறமை, மேடை அனுபவம் மற்றும் பாடல் தேர்வுகளில் தொடக்கம் முதலே கவனம் ஈர்த்த நிகில், இறுதி சுற்றிலும் தனது சிறப்பான பாடல்களால் நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து கோப்பையை கைப்பற்றினார். டைட்டில் வெற்றியாளரான நிகிலுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் 11 வெற்றியாளர்கள்
இந்த சீசனில் முதல் ரன்னர்-அப் இடத்திற்கு சரண் மற்றும் திஷாதனா தேர்வாகினர். இருவரும் தங்களது தனித்துவமான குரல் வளம் மற்றும் தொடர்ந்து காட்டிய முன்னேற்றத்தால் ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தனர். இவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை மீனாட்சி பெற்றார். நான்காவது இடத்தில் தவசீலினி, ஐந்தாவது இடத்தில் ஆபிரகாம், ஆறாவது இடத்தில் தர்ஷனா ஆகியோர் தேர்வாகினர்.

வாழ்க்கையை மாற்றும் மேடை
'சூப்பர் சிங்கர்' என்பது ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல; பல இளம் பாடகர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாக அமைந்த ஒரு மேடையாகவும் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இந்த சீசனிலும் பலர் தங்களது திறமையால் கவனம் ஈர்த்து, எதிர்கால இசை பயணத்துக்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இறுதி மேடை நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் வாழ்க்கைப் பயணம், அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் கனவுகள் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டதால், ரசிகர்களிடையே நிகழ்ச்சி மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த வெற்றியின் மூலம் நிகில் மட்டுமல்ல, இந்த சீசனில் பங்கேற்ற அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்க ரசிகர்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications