Exclusive: சூப்பர் சிங்கர் “சாம் விஷால்” கலக்கும் புது நிகழ்ச்சி.. வாழ்க்கையை மாற்றியதே அவங்க தான், உழைப்புக்கு வெற்றி
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாம் விஷால் மீடியா மேசன்ஸ் யூட்யூப் தளத்தில் வெளியாகும் சாமோடு விளையாடு (samodu vilaiyadu) என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது குறித்து நாம் அவரிடம் பேசினோம். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் சினிமா துறையில் அடுத்தடுத்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் சாம் விஷாலும் பல இண்டிபெண்டன்ட் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறார். அதுபோல பல கான்செர்ட்டில் கலந்து கொண்டு வருகிறார். அதுபோல மீடியா மேசன்ஸ் youtube தளத்தில் சாமோடு விளையாடு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சோசியல் மீடியா பக்கங்களில் பிரபலமாக இருக்கும் பலர் கலந்து கொள்கிறார்கள். அவர்களோடு ஜாலியாக கேள்விகள் கேட்பது மற்றும் சில டாஸ்க் கொடுத்து அவர்களுடைய திறமைகளையும் வெளியே கொண்டு வருகிறார்.

சாம் விஷால் பேட்டி
சாம் விஷாலிடம் அவருடைய சூப்பர் சிங்கர் அனுபவங்கள் பற்றி பேசியபோது நான் ஆடிஷனுக்கு அப்ளை பண்ணலங்க. முறைப்படி நான் மியூசிக் கத்துக்கலங்கிறதால அதில் எப்படி கலந்து கொள்வது என்று தயங்கினேன். அந்த நேரத்தில் என்னுடைய பிரண்ட் தீபக் தான் எனக்கே தெரியாம நான் பாடிய பாடல்களை ஆடிஷனுக்கு அனுப்பி வச்சிட்டார். அது என்னுடைய வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்த சர்ப்ரைஸ் தான். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் ரன்னர் அப் ஆனேன்.

தொகுப்பாளர்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிந்ததும் இனி கான்செப்டில் கலந்து கொண்டு மக்களை நேரடியா சந்திக்கலாம் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கொரோனா வந்துடுச்சு. அந்த சமயம் தான் ரவூஃபா மேம் கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. அவங்க குக் வித் கோமாளி போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறார்கள். அவங்க நாங்க ஒரு நிகழ்ச்சி தொடங்கப்போறோம். அதில் ஆங்கரிங் பண்ணுறியான்னு கேட்டாங்க. எனக்கு பயங்கர அதிர்ச்சியா தான் இருந்தது.
வளர்ச்சி
எனக்கு பேசுவதற்கு அவ்வளவு வராதே என்று யோசித்தேன். ஆனால் அவங்க என்னை கன்வின்ஸ் பண்ணாங்க. பிறகு எப்படி பேசணும், ஒரு பிரபலம் வருகிறார் என்றால் அவரிடம் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று பல விஷயங்களை சொல்லி தந்தாங்க. அவங்க என் மேல வச்ச நம்பிக்கை தான் இப்போ நான்காவது சீசன் வரைக்கும் வந்திருக்கு. சாமோடு விளையாடு நிகழ்ச்சியை ஆரம்பிக்கும்போது விர்ச்சுகளாக தான் ஆரம்பிச்சோம். இப்போ மக்கள் கொடுக்கும் ஆதரவால் தான் இந்த ஷோக்காக செட்டு போட்டு பண்ற அளவுக்கு வந்து இருக்கு.

ரசிகர்களின் வேண்டுகோள்
முதல் சீசனில் கலந்துக்கிட்டவங்க அடுத்த சீசனுக்கும் கூப்பிடு கண்டிப்பா வரும்னு சொல்லிட்டு போறாங்க. அது சந்தோஷமா இருக்கு. சோசியல் மீடியா பிரபலங்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கும் போது அவர்களுடைய ரசிகர்களும் நீங்கள் இந்த கேள்வி கேட்டது சூப்பரா இருந்தது, இன்னும் அந்த கேள்வியை கேட்டு இருக்கலாம் என்று எங்களுக்கு கமெண்ட் கொடுக்கிறார்கள். அதுபோல ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி பிரபலங்களையும் இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட வைக்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
சாம் விஷால் பாடிய பாடல்கள்
நாங்கள் ஓரளவிற்கு சோசியல் மீடியா பிரபலங்களை வைத்து இப்போதைக்கு நிகழ்ச்சி கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். இன்னும் இதை பெருசாக செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று சாம் விஷால் சொல்லி இருந்தார். அவரிடம் நீங்கள் இப்போது எதுவும் ஸ்பெஷலாக பாடி கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டபோது நான் பாடிய இண்டிபெண்டன்ஸ் சாங்ஸ் வரிசையா ரிலீஸ் ஆக இருக்கு, கடைசியா பண்ணிய "ஏங்குகிறேன்" ஆல்பம் பாடல் பலருக்கும் பிடித்திருந்தது.

மக்கள் மீது நம்பிக்கை
அதற்கு எனக்கு ஸ்ரீனிஷா தான் ஹெல்ப் பண்ணுனாங்க. யுவன் சார் மியூசிக்ல பாடுன பாட்டு சீக்கிரமா ரிலீஸ் ஆகப்போகுது. நிம்ஷின்னு தெலுங்கு மியூசிக் டைரக்டருக்கு பாடி இருக்கிறேன். அந்த பாடலும் விரைவில் வரும் அடுத்தடுத்து நான் பல பாடிய பாடல்கள் வரப்போகிறது. ஆனால் அதைப்பற்றி முழுமையாக இப்போது சொல்ல முடியாது என்று சிரித்தபடியே பேசிய சாம் பாடல்கள் வெளியாகும் போது மக்கள் கண்டிப்பாக வரவேற்பு கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய உழைப்புக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நம்முடைய வாழ்த்துக்களை சாம் விஷாலுக்கு சொல்லிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications