சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி எடுத்திருக்கும் புது முயற்சி.. திறமைக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான்
Rajalakshmi, who is a folk music singer, has now sung an album song. Seeing her talent, many fans are congratulating her. Her husband Senthil Ganesh congratulated Rajalakshmi for her new venture and requested fans to sha
சென்னை: மக்கள் இசை பாடகி ஆன ராஜலட்சுமி தற்போது ஆல்பம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவருடைய திறமையை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
ராஜலட்சுமியின் புது முயற்சிக்கு அவருடைய கணவர் செந்தில் கணேஷ் வாழ்த்துக்கள் கூறி அவர் பாடிய பாடலை பகிர்ந்து ரசிகர்களிடம் ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.

மக்கள் இசை பாடகர்கள் ஜோடி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை மட்டுமல்லாமல் உலக தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் பரிசயமான மக்கள் இசை பாடகி ஆன ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடி தற்போது பின்னணி பாடகர்கள் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று பாடல்கள் பாடி வரும் நிலையில் தற்போது ராஜலட்சுமி புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் .அதற்கு அவருடைய கணவர் வாழ்த்து கூறி ரசிகர்களிடம் ஆதரவு தெரிவிக்க வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

எளிமையாக தொடங்கிய வாழ்க்கை
கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு சிலரை தான் கூற முடியும் அந்த மாதிரி தான் மக்கள் இசை பாடகர்களாக ரசிகர்களுக்கு தெரிந்தவர்களான ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் இருந்து வருகின்றனர் .இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து தங்களுடைய பாடலின் திறமையின் மூலமாக பல கிராமங்களிலும் மேடைகளில் இவர்களுடைய பாடல்கள் ஒலித்து வந்துள்ளது.

கணவன் மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமை
கணவன் மனைவி இருவரும் ஒரே துறையில் இருந்தால் அவர்களுக்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும் ஆனால் இவர்கள் இருவரும் பாடவர்களாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாகவும் ஆறுதலாகவும் இருந்து மோட்டிவேஷன் கொடுத்து வருகின்றனர். ராஜலட்சுமி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு பின்னணி பாடகி ஆக பல்வேறு திரைப்படங்களில் பாடி வருகிறார். அதுபோல செந்தில் கணேசனும் பாடல்கள் பாடி வருகிறார் .ஒரு சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று பாட்டு பாடி தற்போது தான் சொந்த ஊருக்கு திரும்பி இருந்தனர்.

கணவர் கொடுக்கும் ஆதரவு
ராஜலட்சுமி நடிகர் கூல் சுரேஷ் உடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். ஓகே...லா சந்தே...லா என எந்த பாடல் தொடங்குகிறது. அதைக் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவை பகிர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும்படி கேட்டுக் கொண்டனர். இவர்களுடைய இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கூல் சுரேஷின் வழக்கமான வெந்து தணிந்தது காடு என்ற டயலாக் அந்த பாடலில் இடம் பெற்று இருக்கிறது. இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி பகிர்ந்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications