பிக்பாஸ் அல்டிமேட்: வனிதா பேசிய அந்த வார்த்தை..தெறித்து ஓடிய சுரேஷ் சக்கரவர்த்தி.. ஆரம்பமே இப்படியா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளில் வனிதா பேசிய பேச்சை கேட்டு சுரேஷ் சக்ரவர்த்தி தெறித்து ஓடி இருக்கிறார்.
சுரேஷ் சக்கரவர்த்தியையே இப்படி ஓட வைத்து விட்டாரே வனிதா அக்கா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சுரேஷ் சக்ரவர்த்தி கதறி ஓடியதைப் பார்த்து அப்படி என்னதான் வனிதா பேசி விட்டார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிக் கொள்கின்றனர்.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி ஏற்கனவே ரசிகர்கள் பலரையும் மிரட்டிய வனிதா தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட மீண்டும் அறிமுகமாகியிருக்கிறார். இவர் வாழ்க்கையிலும், சினிமாக்களிலும் திறந்த புத்தகமாக இருந்து வருவது பலருக்கும் தெரிந்திருந்தாலும், இவருடைய அடாவடியான கேரக்டரை ரசிகர்கள் பலர் வெறுத்து கொண்டிருந்தாலும், அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் தான் இவரால் பல நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது.

முதல் போட்டியாளராக அறிமுகம்
பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் அறிமுகமானதும் 27 நாட்களில் இவர் வெளியே வந்தாலும், மீண்டும் ரீ-என்ட்ரி மூலம் 50 நாட்களில் இருந்து 84 நாட்கள் வரைக்கும் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக இவருடைய அறிமுகம் பலரையும் வியக்க வைத்துள்ளது. டான்ஸில் பட்டையைக் கிளப்பிய இவர் இந்த வீட்டிற்குள் வந்தாலும் உள்ளே நுழைந்ததும் தான் பிக்பாஸ் வீட்டில் உரிமையாளர் போல ஒய்யாரமாக படுத்துக் கொண்டு அனைவரையும் அதிகாரம் செய்தது வேற லெவல் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வனிதா செய்த அந்த செயல்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவருடைய கம்பேக் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு முதல்நாளே மிரட்டல் கொடுத்து இவர் செய்த செயல் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விட்ட இடத்தை பிடிக்க போகிறேன் என்று இவர் எடுத்திருக்கும் உறுதி மொழியில் ஜெயிப்பாரா?? இல்லையா?? என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் என்று இருக்கும் நிலையில், இன்று காலை வேக்கப் சாங் டான்ஸ் ஆடி முடித்ததும் கேமரா முன்னாடி வனிதா பேசியதை கேட்டு அருகில் இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி பதறியடித்து ஓடி இருக்கிறார். சுரேஷ் சக்கரவர்த்தி அடுத்தவர்களை கலாயப்பதில் கைதேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இப்போ வேற லெவல் என்று பலரும் கூறி வருகின்றனர்.
Recommended Video

பதறி ஓடிய சுரேஷ் சக்கரவர்த்தி
தன்னுடைய செருப்புகள் இன்னும் வராததால் தான் வீட்டிற்குள் செருப்பு இல்லாமல் நடந்து கொண்டிருப்பதாகவும், அதனை உடனே அனுப்பி வைக்கும்படி வனிதா பிக் பாஸ் கேமரா விடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அருகில் இருந்த சுரேஷ் சக்கரவர்த்திக்கு வனிதா பேசிய ஒத்த செருப்பு எனும் வார்த்தை எப்படி என்று தெரியவில்லை..ஆனால் அவர் பதறி அடித்து விட்டு ஓடி, பின்பு மீண்டும் வந்து வனிதாவை கலாய்த்திருக்கிறார். இந்த க்யூட்டான வீடியோவை ரசிகர்கள் மீம்ஸ்கள் போட்டு பகிர்ந்து வருகின்றனர். அதில் பலர் எங்களுக்கும் அந்த வார்த்தை வேற மாதிரி தான் கேட்டது என்று கூறி வருகிறார்கள்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications