ரஜினி, விஜய் மட்டுமல்ல! அந்த வரிசையில் இணைந்த சூர்யா! கைகோர்க்கும் ஹிந்தி நடிகர்! மாஸ் அப்டேட்
சென்னை: ஒரு மொழியில் உருவாகும் திரைப்படம் மற்ற மொழிகளிலும் வெளியாகி ஹிட் அடிக்கும். இதை துவங்கி வைத்தது 'பாகுபலி' திரைப்படம். அந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 4 மொழியிலும் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. இப்போது நடிகர் சூர்யாவும் இந்த பான் இந்தியா கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இப்போது முன்னணியில் இருக்கும் ரஜினி, விஜய் போன்றோர் இதை பாலோ பண்ணி வரும் நிலையில் இப்போது அந்த வரிசையில் சூர்யாவும் இணைந்து இருக்கிறார்.

பான் இந்தியா சினிமா
பாகுபலி படத்திற்கு பிறகு கே.ஜி.எப், கே.ஜி.எப் 2, காந்தாரா, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, புஷ்பா 2 போன்ற படங்களும் பான் இந்தியா படமாக வெளியாகி வசூலை அள்ளியது. பான் இந்தியா நடிகராகிவிட்டால் சம்பளத்தை பல மடங்கு ஏற்றி விடலாம் என கணக்கு போட்ட கோலிவுட் நடிகர்களும் தங்கள் படங்களில் பல மொழிகளில் இருந்தும் நடிகர்களை களம் இறக்கி நடிக்க வைத்து வருகிறார்கள். தனுஷ் கூட தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவான 'குபேரா' படத்தில் நடித்தார்.
ரஜினியின் பார்முலா
இதையெல்லாம் எப்போதும் செய்யாத ரஜினி கூட 'ஜெயிலரில்' மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரை நடிக்க வைத்தார். அதனால் அப்படம் ₹650 கோடி வரை வசூல் செய்தது. அதே பார்முலாவைத்தான் இப்போது 'கூலி' படத்திலும் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நாகார்ஜுனா சௌபின் சாகிர் உபேந்திரா ஆகியோர் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் இருந்து அமீர்கானையும் கொண்டுவந்து ஒரு கேமியோ வேடத்தில் நடிக்க வைத்தார்கள்.
சூர்யாவின் முயற்சி
நடிகர் சூர்யாவும் இதை செய்ய தொடங்கிவிட்டார். 'கருப்பு' படத்திற்கு பின் சூர்யா இப்போது தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் ஹிந்தி நடிகர் அனில் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதை பார்க்கும்போது இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.
கங்குவா ஏமாற்றம்
சூர்யா தனது 'கங்குவா' படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோலை வில்லனாக நடிக்க வைத்தார். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. இந்நிலையில்தான் புதிய படத்தில் அனில் கபூரை களம் இறக்க திட்டமிட்டு இருக்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது. வெங்கி அட்லூரி துல்கர் சல்மானை வைத்து இயக்கிய 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக சூர்யாவை பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். அவருடைய திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர் அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். கதை மற்றும் நடிப்பு பற்றி கூட பலர் கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் சமீபத்தில் அவர் நடத்திய அகரம் பவுண்டேஷனின் வெற்றி விழாவில் அவரால் பயன்பெற்ற மாணவர்கள் பேசியது பலரையும் வியக்க வைத்தது. சூர்யா செய்யும் நல்ல செயல்கள் பலருக்கு தெரியவந்தது. இதனால் சூரியாவிற்க்கு நன்மதிப்பு உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக இனி அவருடைய படங்களுக்கு விமர்சனம் நெகட்டிவ் விமர்சனங்கள் குறையுமா என்று எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications