அப்போ "மரு” வச்சா வில்லன்.. இப்போ "திருநீறு” வச்சாதான் வில்லனா? சீரியல்களில் தொடரும் பாகுபாடு
சென்னை: தற்போதைய சூழ்நிலையில் சினிமாக்களை தொடர்ந்து சீரியல்களிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும், சமயத்தினரையும் தவறான கண்ணோட்டத்தில் காட்டி வருவதை காண முடிகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் சினிமாக்களிலும், சீரியலிலும் வில்லன்கள் என்றால் பெரிய மீசை வைத்துக்கொண்டு ஆஜானுபாகுவான உடல் அமைப்பை வைத்துக்கொண்டு இருந்தால் அவர்தான் வில்லன் என்று காட்டுவார்கள்.
ஆனால் இப்போது பல முன்னணி சீரியல்களில் கூட "நெற்றியில் திருநீறும், குங்குமப்பொட்டும்" வைத்திருந்தால் அவர்தான் வில்லன் என்று காட்டுகின்றனர்.
முன்னணி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற பல சேனல்களிலும் வில்லன்கள் என்றால் நெற்றியில் திருநீறு வைப்பது கட்டாயம் ஆகியிருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு அதிகமாக திரைப்படங்களில் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவே காட்டப்பட்டு கொண்டிருந்தனர். அது குறித்து நடிகர் சிம்பு நடித்த "மாநாடு" திரைப்படத்தில் கூட பதிலடி கொடுக்கம் வகையில் வசனங்கள் அமைந்திருக்கும்." ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இப்படித்தான் என்று தமிழ் சினிமாக்கள் முத்திரை குத்துவதாலே, பலருடைய பார்வையும் அவர்கள் மீது அப்படித்தான் இருக்கிறது".
செய்யாத தப்புக்கு கூட பல பேர் நீங்கள் இப்படித்தான் என்று பலரால் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். இந்த நிலை சமூகத்தில் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சீரியல்களில் புது கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக சீரியல்களில் கதாநாயகிக்கு எதிரியாக ஒரு வில்லி தான் இருப்பார். ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் அங்கே ஒரு வில்லன் இருந்தால் அந்த வில்லனின் நெற்றியில் குங்குமம் அல்லது திருநீறு இப்போது தவறாமல் இடப்பிடித்துக் கொண்டிருக்கிறது.

நெற்றியில் திருநீறு அணிந்து இருக்கும் இருக்கும் கேரக்டர் தான் சீரியலின் வில்லனாக இப்போது காட்டப்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக சன் டிவியில் டிஆர்பியில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கும் "கயல்" சீரியலையும் சொல்லலாம். கயல் சீரியலில் கயலுக்கு பெரியப்பா தான் எதிரி. அவர் நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக்கொண்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து "எதிர்நீச்சல்" சீரியலில் ஆதிகுணசேகரன். அவரும் அப்படித்தான் நெற்றியில் குங்குமமும் திருநீறும் மறக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் தான் வில்லனாக ஆரம்பத்தில் இருந்து காட்டப்பட்டு கொண்டிருக்கிறார். அவரும் நெற்றியில் எப்போதும் திருநீறு வைத்துக் கொண்டிருக்கிறார். இப்படி பல சீரியல்களை சொல்லிக் கொண்டே போகலாம் இது குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான கேள்விகளும் எழுந்து வருகிறது.
அதிலும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தினமும் சாமி கும்பிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு கறாராக இருக்கும் நபராக காட்டப்படுகிறது. அதே நேரத்தில் எல்லோருக்கும் உதவி செய்யும் ஜீவானந்தம் கம்யூனிஸ்ட் தோழராகவும், அவருக்கு உதவியாளராக பர்ஹானா கேரக்டரில் ஒரு இஸ்லாமிய பெண் புரட்சியாளராக இருக்கிறார். இப்படியாக இருக்கும் நிலையில் வில்லன் மட்டும் திருநீறு வைத்துக்கொண்டு இருப்பது குறித்து பலர் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் திருநீறு வைத்துக் கொண்டு இந்துக்களாக இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா? இல்ல என்ன மாதிரி நீங்கள் இந்த சீரியல் மூலமாக கருத்து சொல்ல வரீங்க? என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாக்களை தொடர்ந்து சீரியலிலும் "மத அடையாளங்களை" பயன்படுத்தி ஒருவர் இப்படித்தான் இருப்பார் என்று காட்டாமல் அந்த கேரக்டருக்குரிய நடிப்பை மட்டும் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். இல்லையேல் இது ஒரு "தவறான" வழிகாட்டுதலாக மாறிவிடும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications