தமிழை அடித்து விரட்டிய அர்ஜுன்.. ராகினியால் வரும் புது பிரச்சனை.. கோதை எடுத்த அதிரடி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் 12ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் தமிழ் தன்னிடம் பிரச்சனை செய்து அவமானப்படுத்திய அர்ஜுனை நடுரோட்டில் வைத்து அடித்து ஓட விடுகிறார்.

அதற்காக கோபத்தில் ராகினி தமிழ் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அபி தன்னை ராகினி கண்டு பேசியது பற்றியும், தன்னை அவர்களோடு இருக்க சொன்னது பற்றி சொல்ல, அதைக் கேட்டு நடேசன் நீ அங்கெல்லாம் போகக்கூடாது. அவ கிட்ட யாரும் பேசக்கூடாது என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து சரஸ்வதி, வசு, நடேசன், கோதை என எல்லோரும் கோவிலுக்கு போகின்றனர். அந்த நேரத்தில் ராகினியும் அதே கோவிலுக்கு வருகிறார்.
கோவிலில் ராகினி," தமிழ் அண்ணா தப்பே பண்ணல. ஆனால் நான் அவர் மேல பழி போட்டு எப்படி எல்லாம் திட்டி இருக்கேன். இப்ப அவர் முகத்தை என்னால பாக்க கூட முடியல. அம்மா, அப்பா என்னை தனியா விட்டுட்டு போவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல. அர்ஜுன் பக்கம் நியாயம் இருப்பதால்தான் அவருக்கு சப்போர்ட் பண்றேன் என்று கடவுளிடம் புலம்பி விட்டு திரும்பி வருகிறார். அப்போது கோதையை கண்டு விடுகிறார்.

அதேபோல கோதையும் ராகினியை கண்டுவிட ராகினி இடம் பேசப்போகிறார். அதை பார்த்த நடேசன் இவா கிட்ட எதுக்கு பேச போற? கையில கழுத்துல போட்டு இருக்கிறது மிச்ச சொத்தையும் வாங்கிட்டு வா என்று அவன் சொல்லி இருப்பான். அதான் இவன் வந்திருக்கா இவா கூட யாரும் பேசக்கூடாது என்று திட்டி விட்டு ராகினியை பார்த்து உன்னை அன்னைக்கே நாங்க தலை முழுகிட்டோம். எனக்கு ரெண்டு பையன்கள் மட்டும் தான் என்று திட்ட ராகினியை அழுகிறார்.
அதைத்தொடர்ந்து தமிழும் நமச்சியும் அர்ஜுன் பிரிண்ட் ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அர்ஜுனும் அவருடைய மாமாவும் வந்து தமிழை வம்பு இழுக்கின்றனர். அதனால் அந்த இடத்தை விட்டு போக வேண்டும் என்று தமிழ் நமச்சி இடம் பைக்கில் யாருடா போகலாம் என்று சொல்கிறார். இருந்தாலும் தமிழில் போக விடாமல் அர்ஜுனுடைய மாமா கோதை பற்றி தவறாக பேசுகிறார்.
அந்த தகர கொட்டகைக்குள் எப்படி எல்லாரையும் வச்சிருக்கீங்க? எல்லாத்தையும் இழந்துட்டு பிச்சைக்காரங்க மாதிரி கோதை அம்மா வெளியே போறது பார்க்க நல்லா இருந்துச்சு என்று பேச, அதை கேட்டு கோபமான தமிழ் அர்ஜுனுடைய மாமாவை அடித்து வெளுத்து வாங்குகிறார். அதை தடுக்க வந்த அர்ஜுனையும் அடித்து ஓட விடுகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த நமச்சி அங்கு நடந்ததை பற்றி சொல்ல அதற்கு சரஸ்வதி எதற்காக அடித்தீங்க பொறுமையா இருந்திருக்கலாம் தானே என்று கேட்கிறார். அதைத்தொடர்ந்து ராகினி கோவிலில் பேச வந்த விஷயத்தை சரஸ்வதி சொல்ல, அவகிட்ட எதுக்காக நீ பேசுன, உனக்கு அவ கிட்ட என்ன பேச்சு வேண்டிட்டு இருக்கு? என்று தமிழ் திட்டுகிறார்.
அப்போது ராகினி தனியாய் இருக்கிறாரே என்று கோதை பீல் பண்ண அதற்கு கார்த்தி இது அவளா தேடிக்கிட்டது தானே? இனி அவளை பத்தி பேச என்ன வேண்டியது இருக்கு? நம்ம சொத்தை எப்படி மீட்கலாம் என்று பார்ப்போம் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் போனதும் கோதையும் சரஸ்வதியும் அபியை ராகினியுடன் போய் இருக்க சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications