தமிழ் மீது மீண்டும் கொலை பழியை போட்ட அர்ஜுன்.. மேக்னா எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் சரஸ்வதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜனவரி 5ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மேக்னாவின் கையில் வெட்டிய ரவுடியை அர்ஜுன் ஆக்சிடென்ட் செய்து அந்த பழியை தமிழ் மீது போட்டு இருக்கிறார்.அதே நேரத்தில் தமிழுக்காக மீண்டும் மேக்னா செய்த தியாகத்தை பார்த்து தமிழ் உடைய குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.
அதே நேரத்தில் சரஸ்வதி மேக்னாவின் நடவடிக்கையை பார்த்து குழப்பத்தில் இருக்கிறார்.ஏற்கனவே பலமுறை தமிழிடம் தோற்றுப் போன அர்ஜுனுக்கு இப்போது தன்னுடைய திட்டப்படி தமிழ் ஜெயிலுக்கு போகவில்லையே என்று கோபத்தில் இருக்கிறார். அப்போது அர்ஜுனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ராகினி பேசுகிறார் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அர்ஜுன் ரவுடியை வைத்து தமிழை பழி வாங்குவதற்காக பிளான் போடுகிறார். அதன்படியே தமிழை வெட்ட வந்த ரவுடி மீண்டும் தமிழ் கண்ணில் படும்படி தமிழ் கார் முன்பு நிற்கிறார். அப்போது அதை பார்த்து கோபமான தமிழ் ஆவேசப்பட்டு காரில் அந்த ரவுடியை துரத்தி தெருத்தெருவாக சுற்றுகிறார். ஆனால் ரவுடி எஸ்கேப் ஆகி விடுகிறார்.

அந்த ரவுடி நேராக அர்ஜுனனை சந்திக்க போகிறார். அப்போது அர்ஜுன் பணத்தை கொடுத்து இனிமேல் தமிழ் கண்ணில் படக்கூடாது என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அப்போது இதை எதற்காக அர்ஜூன் இப்படி எல்லாம் செய்கிறான் என்று புரியாமல் தமிழுடைய மாமாவும் குழப்பத்தில் இருக்கிறார். அதற்கு சிறிது நேரத்திலேயே விடை தெரியும் என்று சொல்லி அர்ஜுன் சிரிக்கிறார்.
பிறகு அந்த ரவுடி பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போது அர்ஜுன் காரில் வேகமாக போய் அந்த ரவுடியை காரை வைத்து இடித்து விடுகிறார். அந்த ரவுடி பாறையில் மோதி மயக்கம் அடைந்து இருப்பதால் அவரை சிலர் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அதைத் தொடர்ந்து நமச்சி இடம் ராகினியின் வீட்டில் வேலை செய்யும் அபி அர்ஜுன் ஏதோ பிளான் போடுகிறார். தமிழை சிக்க வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

என்ன பிரச்சனைனு தெரியல்ல ஆனால் கவனமாக இருக்க சொல்லுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதை குறித்து நமச்சி தமிழிடம் சொல்ல வேண்டும் என்று வீட்டிற்கு வேகமாக வருகிறார். அப்போது தமிழும் மேக்னாவும் வீட்டிற்கு காரில் வந்து விடுகின்றனர். ஆனால் வரும் வழியில் மேக்னா அந்த ரவுடியை விடுங்க நீங்க உங்க வேலையில் கவனத்தை செலுத்துங்கள் என்று தமிழுக்கு அட்வைஸ் செய்து கொண்டே இருக்கிறார்.

ஆனால் வீட்டிற்கு வந்ததும் மேக்னாவே பார்த்ததும் கோதை குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக வரவேற்கின்றனர். ஆனால் தமிழ் உடைய முகம் மட்டும் கோபத்தில் இருக்க அதை பார்த்த சரஸ்வதி என்னவென்று விசாரிக்கிறார். அப்போது தமிழ் மேக்னாவின் கையை வெட்டிய அந்த ரவுடியை என் கண்ணு முன்னாடி பார்த்தேன்.
ஆனா அவனை துரத்திட்டு போனப்போ அவன் தப்பிச்சுட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்
அவன் மட்டும் என் கையில் கிடைச்சிருந்தா அவனை போலீசில் பிடித்துக் கொடுத்திருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கு வந்த நமச்சியும் அர்ஜுன் ஏதோ திட்டம் போட்டு இருக்கான்.... பெருசா இந்த முறை கண்டிப்பா நம்ம ஏதாவது பண்ணுவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு போலீஸ் வருகிறார்கள்.
அவர்கள் அந்த ரவுடியை துரத்தி போனது நீங்க தானே? நீங்கதானே அவரை இடிச்சு இருக்கீங்க என்று கேட்க அதற்கு தமிழ் நான் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல, ஊரில் உள்ள பலரும் பார்த்து இருக்காங்க நீங்க அவரை காரில் வேகமாக துரத்திட்டு போனதை என்று சொல்லி உங்களை அரெஸ்ட் பண்ணனும் என்று போலீஸ் சொல்கிறார். அதற்கு மேக்னா நான் தான் கார் ஓட்டினேன். என்று பழியை தூக்கி தன்மீது போட்டு ஜெயிலுக்கு போகிறார்.

மறுபக்கத்தில் அர்ஜுன் மேக்னா ஜெயிலுக்கு போனதால் தமிழ் தப்பித்து விட்டார் என்று புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ராகினி தமிழ் அண்ணனுக்காக மேக்னா ஜெயிலுக்கு போய்விட்டார் தமிழுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்று புலம்பி கொண்டிருக்கும் போது அபி இது யாரோ திட்ட போட்டு செய்து இருக்காங்க என்று சொல்ல அர்ஜுன குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
அடுத்த காட்சியில் தமிழ் வீட்டில் அனைவரும் மேக்னா ஜெயிலுக்கு போனதை நினைத்து சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.. அப்போது இதை அர்ஜுன்தான் செய்திருப்பார் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications