Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயோ.. என்ன கொலை பண்ண பார்க்குறாங்க.. கதறி அழுத நடிகை தீபா.. காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தீபா சீரியல் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்துவரும் நிலையில் தனியார் சேனல் ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில் அவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபாவிற்கு அவருக்கு பிடிக்காத காபியை கொடுத்து அவரை புலம்ப வைத்திருக்கின்றனர்.

Tamizha Tamizha Show August 15th Episode Actress Deepa to cry

இந்த நிலையில் என்ன நடந்தது எதற்காக நடிகை தீபா பிரச்சனை செய்தார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்ததை விடவும் இப்போது விறுவிறுப்பு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் சில நேரங்களில் கலகலப்பாகவும் சில நேரங்களில் உணர்வு பூர்வமான தலைப்புகளில் விவாதங்கள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இப்போது பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த வாரம் சமைக்க தெரிந்த பிரபலங்கள் VS ரசித்து ருசித்து சாப்பிட மட்டும் தெரிந்த பிரபலங்கள் என்ற தலைப்பில் விவாதங்கள் நடைபெற்றது. அந்த வகையில் பல பிரபலங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்களுக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் மற்றும் சாப்பாடு குறித்து பேசி பலரையும் வியக்க வைத்திருந்தனர். அதே நேரத்தில் சாப்பாடு சாப்பிட மட்டுமே தெரிந்த பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் தாங்கள் என்னென்ன சாப்பாடு எல்லாம் விரும்பி சாப்பிடுவோம் என்பதை பற்றியும் பகிர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் சீரியல் நடிகர் ஒருவர் நான் ரொம்ப ரசிச்சு ட்ரை பண்ணுனது என்றால் பாலியில் பூனையின் புழுக்கையில் இருந்து செய்யப்படும் காபியை தான் என்று சொல்ல ஆவுடையப்பன முகம் அதிர்ச்சியாகி மாறிவிடுகிறது. ஆனாலும் விடாத அந்த சீரியல் நடிகர் அந்த காபி பாலியில் 50,000 ரூபாய் என்று சொல்ல, நான் ஏண்டா அத குடிக்க அவ்வளவு செலவழிச்சு போகணும் என்று கேட்கிறார்.

அதற்கும் விடாத அந்த சீரியல் நடிகர் நான் சீரியஸா சொல்றேன். அந்த காபி அவ்ளோ அருமையா இருக்கும் என்று சொல்ல அதைக் கேட்டு அங்கிருக்கும் சாப்பிட மட்டுமே தெரிந்த அணியில் இருந்த நடிகை தீபா வாயை மூடி மூடி சிரிக்கிறார். அதைப் பார்த்த தொகுப்பாளர் ஆவுடையப்பன் தீபாக்கா ரொம்பவே சிரிக்கிறாங்க. நீங்க அதை ட்ரை பண்றீங்களா என்று கேட்கிறார்.

அதோடு ஆவுடையப்பன் அவர் என்ன சொன்னார் என்று உங்களுக்கு புரிஞ்சுதா? என்று கேட்க ஆமா ஐயா அது பூனையோட புழுக்கையில் இருந்து செஞ்ச காபின்னு சொல்றாங்க என்று விழுந்து விழுந்து தீபா சிரித்துக்கொணடு, என் உயிர் போனாலும் இதை மட்டும் நான் சாப்பிடவே மாட்டேன் என்று கதறுகிறார்.

பிறகு நான் உங்களுக்கு காபி கொண்டு வர சொல்றேன். நீங்க அதை குடிங்க என்று ஆவுடையப்பன் சொல்ல வேண்டாம் இது தமிழா தமிழா ஷோ தான ஐயா? நீங்க எவ்வளவோ அறிவாளி நீங்க இத செய்ய சொல்லலாமா? என்று கேட்க, அதனால் தான் உங்களை குடிக்க சொல்றேன் என்று ஆவுடையப்பன் பதில் கொடுத்து காபி கொண்டுவரப்படுகிறது. பிறகு இது உங்களுக்காக கஷ்டப்பட்டு கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று சொல்லி தீபாவை குடிக்க வைக்க முயற்சி செய்கிறார்.

அதற்கு நடிகை தீபா நான் உங்களை எவ்வளவு பெரிய தமிழ் அறிவாளி என்று நினைத்து கொண்டு இருக்கேன் நீங்க இத குடிக்க சொல்லாதீங்க என்று சொல்ல, அங்கு இருக்கும் பெசென்ட் ரவி தீபாவின் கழுத்தைப் பிடித்து அந்த காபியை குடிக்க வைக்க அப்போது நடிகை தீபா ஐயோ என் கழுத்தை பிடித்து நெறிக்கிறாங்க. என்னை கொலை பண்ண பார்க்குறாரு. நான் ஜீ தமிழ் மேலேயே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திடுவேன் என்று கதற, ஆனாலும் நடிகர் பெசன்ட் ரவி அவருடைய வாயில் அந்த காபியை ஊற்று விடுகிறார். அதை குடித்த தீபா ஐயோ எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு என்று விழுகிறார்.

இப்படியாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த அதிகமான ரசிகர்கள் எனது பூனை புழுக்கையில் காப்பியா அட பாவமே அதையும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வேற வாங்கி குடிக்கிறாங்களாமே என்று சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+