குடும்பத்தில் நடந்த சோகம்! தற்கொலை பண்ண போனேன்.. நயன்தாரா தான் தடுத்தது! தம்பி ராமையா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தம்பி ராமையா சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை பண்ண முயற்சி செய்தபோது நயன்தாரா தான் போன் செய்து அதை தடுத்தது என்று தற்போது பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

நடிகர் தம்பி ராமையா பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அதுபோல திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்டும் எழுதி இருக்கிறார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் வெளியே சொல்லாத பல சோகங்கள் இருந்திருக்கிறது. அதை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

television nayanthara thambi ramaiah

பொதுவாக மனிதர்கள் எல்லோருக்கும் அட்வைஸ் செய்வார்கள். ஆனால் தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது தன்னை அறியாமல் தவறு செய்ய முயற்சி செய்வார்கள். அதுபோல்தான் தம்பி ராமையாவும் தன்னுடைய வாழ்க்கையில் பெரிய தவறு செய்ய இருந்திருக்கிறார். அதாவது தம்பி ராமையாவிற்கு அவருடைய அம்மா தான் ரொம்பவும் பிடிக்கும். அவருடைய குடும்பத்தில் எல்லோருக்குமே அது தெரியுமாம்.

கர்மா.. எல்லாம் வட்டியுடன் திரும்ப வரும்.. நயன்தாரா போட்ட போஸ்ட்.. தனுஷுக்கு தானா?
அம்மா மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பாராம். தம்பி ராமையாவின் தந்தை திமுக-வில் மிகப்பெரிய பற்று கொண்டவராம். கவிதைகள் எல்லாம் தாறுமாறாக எழுதுவாராம். அவரைப்போல தன்னால் கவிதை எழுத முடியவில்லை என்றாலும் கொஞ்சம் என்னால் எழுத முடியும். அதை வைத்து தான் நான் பல படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன், என்னுடைய அம்மாவிடம் கூட நான் கவிதைகள் அடிக்கடி எழுதிக் கொடுப்பேன்.

அதில் உன்னுடைய மூச்சுக்காற்று இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் நான் வாழ்ந்தால் போதும் அம்மா.. என்றுதான் எப்போதும் எழுதிக் கொடுப்பேன். ஆனால் ஒரு நாள் என்னுடைய அம்மா இறந்து போய்விட்டார். எனக்கு அதைக் கேட்டதும் பெரிய அதிர்ச்சியாகிவிட்டது‌ அம்மா இல்லை என்றால் நான் இல்லை என்று தான் நினைத்திருந்தேன்.

அப்போ என்னுடைய மகனுக்கு கல்யாணம் முடியவில்லை. மகளுக்கு மட்டும் கல்யாணம் முடிந்து இருந்தது. ஆனாலும் என்னுடைய குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்து விட்டார்கள் அதனால் என்னுடைய அம்மா போன இடத்திற்கு நானும் போய்விட வேண்டும்... தற்கொலை செய்ய வேண்டும்.. அம்மா இறப்பு செய்தி கேட்டு நானும் இறந்து போய்விட்டேன் என்ற செய்திகள் வந்தால் கூட அது பெருமை தான், தேசிய விருது வாங்கும்போது கிடைக்காத பெருமை அம்மாவோடு மகனும் சேர்ந்து இறந்து விட்டார் என்று செய்தி வரும் போது கிடைக்கும் என்றெல்லாம் என்னுடைய மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது எப்படியாவது நாம தற்கொலை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய மனதில் டக்கென்று இன்னொரு சிந்தனையும் வருகிறது... அதாவது நம் மீது வைத்திருக்கும் பாசத்தால் நாம தற்கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமே நாம இப்போ நான்கு படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கி இருக்கிறோம். நாம் இறந்து போனால் அவர்களுக்கும் சேர்த்து கஷ்டம் தானே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் நடிகை நயன்தாரா எனக்கு போன் செய்தாங்க. அப்போ நான் நயன்தாராவோடு டோரா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். ஒரு நாள் மட்டும் தான் ஷூட்டிங் நடந்திருந்தது. எங்க அம்மாவுடைய இறப்பு செய்தி எப்படியோ அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அவங்க போன் பண்ணி என்னிடம் பேசினாங்க.

நான் மனதில் குழப்பமா இருக்கும்போது நயன்தாரா எனக்கு போன் செய்தது பெரிய திருப்புமுனையாக இருந்தது. பிறகு எதார்த்தத்தை புரிய வச்சாங்க அதற்குப் பிறகு என்னுடைய தற்கொலை சிந்தனையை விட்டேன். தற்கொலை செய்யக்கூடாது என்று இந்திரலோகத்தில் படத்தில் நானே பெரிய வசனம் எழுதி இருந்தேன் ஆனால் எனக்கு ஒரு கஷ்டம் வரும்போது தற்கொலை தான் தீர்வு என்று ஒரு மனநிலை வந்தது.

television nayanthara thambi ramaiah

அந்த நேரத்தில் நயன்தாரா எனக்கு போன் செய்யவில்லை என்றால் நான் என்ன முடிவு எடுத்திருப்பேன் என்று தெரியவில்லை. இப்போ கூட என்னுடைய மகனுக்கு திருமணம் நடக்கும் போது நான் யோசித்துப் பார்த்தேன். அன்னைக்கு நாம் இறந்து போயிருந்தால் இன்னைக்கு என்னுடைய பிள்ளையின் கல்யாணத்தை பார்க்க முடியாமல் போயிருப்பேனே என்று நினைத்து பார்த்தேன் என்று உருக்கமாக தம்பி ராமையா பேசியிருக்கிறார்.

அதனால் நண்பர்களே யாரும் தற்கொலை செய்து கொள்ளும் சிந்தனை வந்தால் தயவு செய்து உங்களுக்கு பிடித்தவர்களிடம் பேசுங்கள். இல்லை என்றால் இருக்கும் இடத்தை விட்டு தூரமாக சென்று நம்மை விட கஷ்டப்படுபவர்களை பாருங்கள். எல்லோருக்கும் கஷ்டங்கள் வரும், தீர்க்க முடியாத பிரச்சனைகள் இந்த உலகத்தில் இல்லை. இந்த உலகத்தில் நம்மை விட வேதனைகளை சுமந்து பலர் வாழ்கிறார்கள்... அதனால் தற்கொலை எதற்கும் தீர்வு கிடையாது. கண்டிப்பாக ஒரு நாள் நம்முடைய வாழ்க்கை மாறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+