ஆரம்பம் முதல் சிரிக்க வைத்த உமாபதி...கடைசி நாளில் அனைவரையும் அழவைத்த தருணம்
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சி முடிந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கடைசிநேர தருணம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
ஜாலியாகவும் கலகலப்பாகவும் இருந்த உமா பதிக்கும் கண்கலங்கவைக்க தெரியும் என்பதை நிரூபித்துவிட்டார்.
உமாபதியின் செய்கையை பார்த்து பல ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த சர்வைவர்
ஜீ தமிழ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக ரியாலிட்டி ஷோ ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றிருக்கிறது. டிஆர்பி யிலும் சரி, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதிலும் சரி, இந்த சர்வைவர் நிகழ்ச்சி அனைவரையும் வசீகரித்து உள்ளது என்று கூறி வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது. 90 நாட்கள் சிறப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் தங்களுடைய திறமையாலும், குணத்தாலும் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டனர்.

மனதைக் கவர்ந்த கதாநாயகன்
திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், ஆக்சன் நடிகராகவும், மிரட்டிக் கொண்டிருக்கும் இளம் நடிகர் உமாபதி. இந்த நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுவிட்டார். இவர்தான் இந்த சீசனின் வெற்றியாளராக வரவேண்டும் என்று ஆரம்பம் முதலே அவருடைய ரசிகர்கள் கூறிவந்தனர். நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூட்டுவதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பதில் இவரும் ஒருவர். அதனாலேயே இவருக்கு பெண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆண் ரசிகர்களும் அதிக அளவில் அதிகரித்து வருகின்றனர்.

டாஸ்க்கில் விரக்தியா
போட்டியாளர்களுக்குள் பல்வேறு நேரங்களில் ஏற்பட்ட மனக்கசப்புகள் அனைத்தும் கடைசி நாளில் காணாமல் போய்விட்டது. ஆனாலும் ரசிகர்களுக்கு கடைசி நாளில் உமாபதி நடவடிக்கைகள்தான் பீலிங்கை கொடுத்துவிட்டது. எந்த போட்டியிலும் தன்னுடைய திறமையை காட்டி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் உமாபதி கடைசி நாளான நேற்று அவருக்கு நன்றாக தெரிந்த தீ பற்ற வைக்கும் டாஸ்க்கில் தோற்றுவிட்டதை பார்த்ததும் ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் ஆகிவிட்டனர்.
Recommended Video

என்ன ஒரு பெருந்தன்மை
அர்ஜுனை அனைவருக்கும் எவ்வளவு பிடிக்கும் என்று முதல் நாளிலிருந்து சக போட்டியாளர்கள் கூறிக் கொண்டிருக்கும் போது, இவர் மட்டும் கடைசி நாளான நேற்று தன்னுடைய ரோல்மாடல் அர்ஜுன் தான் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் நான் இதை முதல் நாளில் சொல்லியிருந்தால் ஐஸ் வைத்தது போல இருக்கும் என்று தனக்கே உரிய நக்கலோடு கூறியிருந்தார். விஜி இவருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தால் தான் இவரால் கடைசியில் நன்றாக செயல்பட முடியவில்லை என்று ரசிகர்கள் பலர் கூறிக் கொண்டிருக்கும் போது, பைனல் ஆக வந்திருக்கும் மூன்று போட்டியாளர்களில் யார் ஜெயித்தாலும் எனக்கு சந்தோஷம்தான் என்று தனது பெருந்தன்மையை வெளி காட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications