அப்பாவை அம்மி கல்லாக நினைத்தேன்..உருகும் அபிஷேக்..கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் தன்னுடைய கதையில் தன்னுடைய தந்தையை பற்றி பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமென்றால் ஒரு வரைமுறை இல்லையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அப்பாவை இந்த மாதிரி ஒரு வார்த்தை சொல்லலாமா என அபிஷேக்கை ரசிகர்கள் வாரி வருகின்றனர்.

யூடியூப்பர் அபிஷேக்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் அபிஷேக் என்னும் ஒரு பெயருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான கமெண்டுகள் குவிந்து வருகிறது. காரணம் இவர் ஒரு யூடியூபர் ஆக இருந்து சினிமா நட்சத்திரங்களை மட்டுமல்லாமல் திரைப்படங்களையும் விமர்சித்து நெகட்டிவ் கமெண்ட்டுகளால் பிரபலமடைந்தவர். இந்த ஐந்தாவது சீசனில் ஒரு யூடியூபர் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததும் பலரும் ஜிபி முத்து தான் கலந்துகொள்வார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இவருடைய என்ட்ரி சமூக வலைத்தளத்தில இவருடைய நெகட்டிவ்வர்களுக்கு என்ஜாய்மென்ட் ஆகத்தான் இருந்திருக்கிறது.

தொடர்ந்து வரும் பழக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசன் நாம் கடந்து தற்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. காலம் காலமாக தொன்றுதொட்டு வரும் வழக்கம் போல இந்த ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதையை சொல்லி ரசிகர்களின் அனுதாப ஓட்டுகளை பெற்று வருகின்றனர். அதேபோலத்தான் தற்போதைய சீசனிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி பத்து நாட்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு போட்டியாளர்கள் வீதம் தங்களுடைய கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய கதைகளை கேட்டு பலர் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
Recommended Video

கிடைத்த வாய்ப்பை விடலையே
சீரியலில் தான் இப்படி அழ வைக்கிறார்கள் என்று ஒரு ரியாலிட்டி ஷோ பக்கம் திரும்பலாம் என்று பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அடிமைகளாக மாறி இருக்கும் நேரத்தில் இங்கேயும் நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று போட்டியாளர்களை விட்டு ரசிகர்களை அழவைத்து வருகின்றனர். இவர்களின் அழுகாச்சி சீன்களை பலர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அனைத்து போட்டியாளர்களின் கதைகளையும் பின்னுக்குத் தள்ளும் வகையில் வேற லெவலில் அபிஷேக் கதை சொல்லியிருக்கிறார். ஏற்கனவே பேச சொல்லி கொடுக்க வேண்டாம்...இப்போ அவருக்கான நேரம் வந்து விட்டால் சும்மா விடுவாரா? ?

அப்பாவும், அம்மிக்கல்லும்
தன்னுடைய ரசிகர்களுக்காக தன்னுடைய சோகக் கதையை கூறிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தான் வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தன்னுடைய தந்தை பலருக்கும் பரிச்சயமான பண்ணையார் போலதான் வாழ்ந்து கொண்டிருந்தார். அனைவருக்கும் உதவி செய்தே..தங்களுடைய வீட்டை அடமானம் வைத்து விட்டார் என்றும் அவருடைய மரணம் தனக்கு பெரிய ஒரு வலியை கொடுத்திருப்பதாகவும் கூறிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் வீட்டில் இருந்தாலே போதும் என்று நினைத்த தாகவும் அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு "அம்மிக்கல் போல தான் எங்க அப்பாவை நினைத்து இருந்தேன் அதை வைத்து ஒன்றும் செய்ய வேண்டாம் என்றாலும், வீட்டில் வேஷ்டியை காயப் போடுவதற்காக அத அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்" ஆனால் அவருடைய இறப்பு தனக்கு பெரிய வேதனையை கொடுத்திருக்கிறது என்று கூறி இருக்கிறார். இதைக்கேட்டதும் ரசிகர்கள் இவரை எப்படி அப்பாவை ஒரு அம்மிக்கல்லு என்று சொல்வது சரியா என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications