Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தி வில்லேஜ் திரை விமர்சனம்.. எதில் சறுக்கியது.. எதில் மிரட்டியது?.. ஹாலிவுட்டை மிஞ்சிய “அந்த” சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி வில்லேஜ் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் டைமில் வெளியாகி இருக்கும் நிலையில் இதில் ஆறு எபிசோடுகள் இருக்கிறது. மொத்தமாக இந்த திரைப்படம் நான்கு மணி நேரம் 15 நிமிடங்கள் ஒளிபரப்பாகிறது.

இந்த வெப் சீரிஸில் நடிகர் ஆர்யா,, திவ்யா பிள்ளை, ஆலியா, ஆடுகளம் நரேன், சார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார், கே. கலைவாணி, எஸ் எஸ் ஜான், கோக்கன், ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், தலைவாசல் விஜய் என பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

The Village Web Series Complete Story and Review

ஒரு காட்டுப் பகுதிக்குள் ஒரு நாள் இரவு நேரத்தில் நடக்கும் ஒரு திகிலூட்டும் சம்பவம் முழுமையாக பார்க்கலாம்.

தி வில்லேஜ் வெப் சீரிஸின் கதை: முதல் பாகத்தின் ஆரம்பமே திகிலோடுதான் உள்ளது. ஒரு வேனில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை கூட்டிக்கொண்டு ஒரு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அப்போ மழை பெய்து கொண்டிருக்கிறது. வேன் வேகமாக போய்க் கொண்டிருக்கும் போது அங்கு ஒரு பாலம் வருகிறது. அந்த பாலத்தில் ஒரு மரம் விழுந்து கிடக்க வேனில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் இறங்கி அந்த மரத்தை அப்புறப்படுத்த பார்க்கின்றனர்.

ஆனால் மரம் பெரியதாக இருப்பதால் அவர்களால் அசைக்கக்கூட முடியாமல் இருக்கிறது. அப்போது வேனுக்குள் இருக்கும் பெண்ணிற்கு பிரசவ வலி வந்து விடுகிறது. இதனால் இனி இங்கேயே நேரத்தை செலவழிக்க வேண்டாம் திரும்ப வேறு வழியாக தூத்துக்குடி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய்விடலாம் என்று வேனை திருப்பிக் கொண்டு போகின்றனர்.

The Village Web Series Complete Story and Review

அப்போது அங்கு ஒரு சிலர் இருட்டுக்குள் நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (அதை பார்க்கும்போது மிரட்டலாக இருக்கிறது). அதைத் தொடர்ந்து கார் கட்டியல் என்ற ஒரு கிராமத்தை கடந்து காட்டுப்பகுதிக்குள் வருகிறது. அப்போது அங்கு ஒரு கோவில் இருக்கிறது கோவில் பக்கத்தில் வரும்போது ஒரு நபர் வேகமாக வந்து வேனில் மோதி கீழே விழுந்து விடுகிறார்.

அதனால் வேனுக்குள் இருக்கும் நபர் அது யார் என்று பார்க்க வேண்டும் என்று சொல்ல டிரைவர் எவ்வளவோ தடுக்கிறார் வேண்டாம் என்று, ஆனாலும் கேட்காமல் அவர் கீழே இறங்கி போய் பார்க்க அந்த நபரின் முகத்தில் எல்லாம் கொப்புளங்களாக இருக்கிறது. அவரைப் பார்த்ததும் நீங்க எல்லாம் இன்னும் உயிரோட இருக்கீங்களா? என்று அந்த நபர் கேட்கும் போது அங்கு அந்த வேனை ஓட்டி வந்த டிரைவர் கீழே இறங்கி வந்து நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது எங்கிருந்தோ வரும் ஒரு ஈட்டி டிரைவருடைய தலையை இரண்டு துண்டாக வெட்டிக்கொண்டு போகிறது. அதை பார்த்து அந்த நபர் அதிர்ச்சியாக, வேனிற்குள் இருந்தவர்களும் அதிர்ச்சியாகி கத்துகின்றனர்.. அப்போது அங்கு ஒரு மேடு பகுதியில் இருந்து மனித உருவத்தை போன்று ஒரு சிலர் நிற்பது போன்று காட்டப்படுகிறது.

பிறகு தொடர்ச்சியாக நடப்பது திகில் அனுபவம். இப்படியாக முதல் பாகம் முடிவடைகிறது. (முதல் பாகத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவரையும் திகழோடு காத்திருக்க வைத்தது.) அதைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் இருக்கும் ஆரியா அவருடைய மனைவி மற்றும் மகளோடு சென்னையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார்.

The Village Web Series Complete Story and Review

அப்போது பைபாஸில் ஒரு ஆக்சிடென்ட் ஆகி இருப்பதால் காட்டு வழியாக சென்று விடலாம் என்று கூகுள் மேப்பை பார்த்து அவர் அதே காட்டுப்பகுதிக்கு வருகிறார். வேனில் இருந்த நபர்கள் கொல்லப்பட்ட இடத்தில் இவர்களுடைய கார் பஞ்சர் ஆகிறது. இறங்கிப் பார்க்கும் ஆர்யா மனைவி மற்றும் குழந்தையை காரில் பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு பக்கத்தில் ஏதாவது ஆட்கள் இருந்தால் உதவிக்கு கூட்டிட்டு வருகிறேன் என்று கிளம்பி போகிறார்.

அப்போது பல கிலோமீட்டர் தாண்டி இருக்கும் பாரில் ஜார்ஜ் மரியான் (பீட்டர்), ஆடுகளம் நரேன் (சக்திவேல்), முத்துக்குமார் (கருநாகம்) என்ற மூன்று பேரும் குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு வரும் ஆர்யா அவர்களிடம் என்னுடைய கார் கட்டியல் என்ற காட்டுப் பகுதியில் நிற்கிறது. என்னுடைய மனைவியும் குழந்தையும் அங்கே தனியா இருக்காங்க யாராவது உதவிக்கு வாங்க என்று சொல்ல அங்கு பாரில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த ஊர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாகின்றனர்..

அந்த காட்டுப்பகுதி ரொம்ப மோசமானது அதனால் வரவே முடியாது என்று எல்லாரும் சொன்னதால் ஆர்யா எல்லாரையும் திட்டிக்கொண்டு கோபத்தோடு மீண்டும் காட்டுக்குள் தனியாக போய்க்கொண்டிருக்கிறார்.. அதே நேரத்தில் காட்டுக்குள் ஆர்யாவின் மனைவியும் மகளும் காருக்குள் இருந்தபோது அவர்களோடு வந்த நாய் அங்கு ஒரு திசையை பார்த்து கத்திக் கொண்டே இருக்க ஆரியாவின் மனைவியும் மகளும் முதலில் பயப்படுகின்றனர்.

பிறகு ஆர்யாவின், மனைவி என்னவென்று பார்க்கலாம் என்று காரை விட்டு இறங்க அப்போது நாய் காரில் இருந்து ஒரு திசையை நோக்கி குறைத்துக் கொண்டே ஓடுகிறது. அந்த நாயை தேடி ஆர்யாவின் மனைவி போக அவரை தேடி குழந்தையும் பின்னாடியே போகிறது. அப்போது ஒரு கட்டத்தில் ஆர்யாவின் மனைவி காலில் ஒரு இரும்பு பிடி வந்து வேகமாக விழுந்து அவரை தரதரவென்று இழுத்துக் கொண்டு போக, பின்னாடியே அம்மா என்று அழைத்தபடி ஆர்யாவின் மகளும் போகிறார்.

அவருடைய கையில் இருந்த புத்தகம் அங்கேயே விழுந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் ஆர்யா காட்டுக்குள் தனியாக நடந்து வந்து கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் ஒரு கட்டை தட்டி கீழே விழுந்து விட அவர் அப்படியே மயக்கம் போட்டு கிடக்கிறார். (அப்போது அந்த இடத்தில் ஒரு உருவம் வந்து நிற்கிறது பார்ப்பவர்களுக்கு இப்போ ஆர்யாவையும் அந்த உருவம் தூக்கிட்டு போகப் போகிறது என்று தோன்றும்) ஆனால் அங்கு ஒரு ட்விஸ்ட். கட்டியல் குறித்து ஒரு பிளாஸ் பேக் விரிகிறது.

அதில் கருநாகம் குவாரியில் குடும்பத்தோடு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு ஜமீன்தார் போல இருப்பவர்கள் வேலைக்கு இருப்பவர்களை அடிமையாக நடத்துகின்றனர். அதில் கருநாகத்தின் சகோதரியை ஜமீன்தாரின் மகன் தன்னை எதிர்த்து பேசியதற்காக புடவையை உருவி அசிங்கப்படுத்த, அதனால் கருநாகத்தின் சகோதரி தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் கோபத்தில் கருநாகம் தன்னுடைய ஊர்காரர்களை கூட்டிக்கொண்டு போய் அந்த ஜமீன்தாரின் மகனின் ஆணுறுப்பை வெட்டி விடுகிறார். இதைத் தொடர்ந்து சில காட்சிகளுடன் கிராமத்தின் பிளாஷ்பேக் முடிகிறது.

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த காட்சிகள் பிறகு கொஞ்சம் ஒரு விறுவிறுப்பும் திகிலும் குறைய தொடங்கி இருந்தது. அதற்கு பிறகு ஆர்யா தன்னுடைய மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்று ஒரு பக்கம் கதை விரிகிறது.

அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் ஒரு சயின்டிஸ்ட் கதை வருகிறது. அதில் படுத்த படுக்கையாக இருக்கும் சயின்டிஸ்ட் தன்னுடைய மகனிடம் சில ரகசியத்தை சொல்கிறார். அதாவது கால் செயல் இழந்த தன்னுடைய மகனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக கட்டியல் என்ற ஊரில் இடத்தை வாங்கி அங்கு ஒரு கம்பெனியை கட்டி அதில் ஆராய்ச்சி செய்து வந்ததாகவும், அந்த ஆராய்ச்சி முடிவு எல்லாமே தனக்கு ஃபெயிலியர் ஆகி விட்டதாகவும் அங்கு அந்த ஆராய்ச்சி கூடத்தில் தான் இருக்கும்போது சுனாமி வந்ததால் அதை அப்படியே போட்டு விட்டு தான் வெளியே தப்பி வந்து விட்டேன்.

ஆனால் அதை நீ போய் நோண்டக்கூடாது என்று தன்னுடைய மகனுக்கு சொல்லிக் கொண்டிருக்க, ஆனால் எனக்கு கால் மீண்டும் வந்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அந்த வக்கிரமான மகன் தன்னுடைய அப்பாவை கொலை செய்து அந்த கம்பெனியில் இருக்கும் சேம்பிளை கண்டுபிடித்து கொண்டு வருவதற்காக சில ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆர்யா வந்திருக்கும் அதே காட்டுப்பகுதிக்குள் வேறு பக்கமாக உள்ளே வருகின்றனர்.

ஏற்கனவே இதற்கு முன்பு ஆராய்ச்சிக்கு வந்த இரண்டு பேருடைய உடம்பை பார்த்ததும் இப்போது ஆராய்ச்சிக்கு வந்தவர்கள் கதி கலங்கி போயிருக்கின்றனர். ஒரு வழியாக அவர்கள் அந்த ஃபேக்டரிக்குள் நுழைந்து அங்கு இருக்கும் சாம்பிளை எடுத்தார்களா இல்லையா என்று அந்த கதை விரிகிறது.

தி வில்லேஜ் வெப் தொடரின் நிறை/குறை: மூன்று விதமாக பயணித்த இந்த திரைப்படத்தின் கதை முதல் பாகத்தில் வேகமும் விறுவிறுப்பும் திகிலுமாக இருந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் ஓரளவு இருந்த வேகம் மூன்றாவது நான்காவது பாகத்தில் ஜவ்வாக இழுத்து விடுகிறது. சுற்றி சுற்றி ஒரே போல அந்த காட்டு மிருகங்களில் உருவத்தில் இருக்கும் நபர்கள் வந்து தாக்குவது அலுப்பை தட்டுகிறது.

அதுபோல வேட்டையன் பிரம்மாண்டமான உருவத்தில் இருப்பதை பார்க்கும் போது மனதிற்கு லேசான பயம் வருகிறது .. ஆனால் வேட்டையனை துப்பாக்கி குண்டுகள் துளைத்தாலும் அசராமல் அவர் நடப்பதை பார்க்கும்போது பெரிய அளவில் திகில் இல்லை. அதே நேரத்தில் உதவி செய்யும் நோக்கில் வந்து படம் முழுக்க அதிரடியாக சக்திவேல் மற்றும் கருநாகம் கேரக்டர் வாழ்ந்திருக்கின்றனர்.

அதிலும் சக்திவேலின் நடிப்பு அருமையாக இருந்தது. தன்னுடைய மகள் நிலைமையை பார்த்து கதறி அழுதது, நண்பனுடைய இறப்பு என்று பல இடங்களில் பலரையும் ஃபீல் பண்ண வைத்திருந்தார். அதிரடியான ஆக்சன் திரைப்படங்களில் ஆர்யாவை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்திருக்கும்.

இந்த படத்தில் பெரிய அளவில் ஆர்யாவுக்கு சண்டைக் காட்சிகள் இல்லை. அதுபோல இந்த வெத்தொடரின் மிகப்பெரிய மைனஸ் என்றால் பிளாஷ்பேக் மற்றும் மேக்கப் பெரிய அளவில் நெகிழ வைக்கவில்லை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+