என்னைப் பற்றி பேசுபவர்களின் வீட்டில் என்னை போல பெண் இருந்திடக் கூடாது..தீபிகா உருக்கம்
சென்னை: சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது கூட விஜே தீபிகா இவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிந்த பிறகுதான் பெரும் பிரபலமாக மாறிவிட்டார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவரை ஐஸ்வர்யாவாக நடித்துக் கொண்டிருக்கும்போது இவரைப் பற்றி குறை கூறியவர்கள் எல்லாம் தற்போது நாம் பேசியதால் அடுத்தவர்களின் மனதை எந்த அளவில் பாதித்திருக்கும் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
விஜே தீபிகா தற்போது பலருடைய ரோல்மாடலாக மாறிவிட்டார். தன்னுடைய தன்னம்பிக்கையையாலும் மன தைரியத்தாலும் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறாராம்.

கேட்கும்போதே பீலிங்கா இருக்கு
போகப்.. போக.. பழகிடுங்க.., என்று விஜே தீபிகா தன் ஜாலியான சிரிப்புடன் இன்ஸ்டாவில் போட்டுள்ள வீடியோ செம ...ஃபீலிங் ஆக இருப்பதாக இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். யப்பா!! ...என்ன பொண்ணு யா!!! என்று ஆச்சரியத்துடன் அவரது கருத்துகளுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.விஜய் டிவியின் டிஆர்பி குறையாமல் பார்த்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆகும்.

போரடிக்காத குடும்ப கதை
ஆனந்தம், சமுத்திரம் போன்ற படங்களை கொஞ்சம் உல்டா செய்து ரீமேக் பண்ணது போன்று இருக்கும் இந்த சீரியலுக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. அதுவும் குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ் களை ஈர்த்த சீரியலாக இருக்கிறது. ஒரு மிகப் பெரிய சின்னத்திரை நட்சத்திர பட்டாளமே இந்தத் தொடரில் நடித்து வருகிறார்கள். அண்ணன் தம்பி உறவு முறைகளுக்கு உள்ளே உள்ள பாசப் போராட்டத்தை மையக்கருவாக வைத்து கொண்டு செல்லப்படும் இந்த சீரியலில், கதைப்படி கடைசி தம்பி 'கண்ணனாக' சரவண விக்ரம் நடித்து வருகிறார். இவருடைய காதல் மனைவியாக தான் 'ஐஸ்வர்யா' என்கின்ற ரோலில் விஜே தீபிகா நடித்து வந்தார்.

குறை சொல்லாத மனசு
ஷுட்டிங்குக்காக மேக்கப் போடுவதால் ஏற்பட்ட சைட் எஃபெக்ட் காரணமாக முகத்தில் வந்த பருக்களை காரணம் காட்டி விஜே தீபிகா சீரியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.அவருக்கு பதிலாக இப்பொழுது சாய் காயத்ரி அந்த ரோலில் நடித்து வருகிறார்.சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சீரியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து.. 'தான் யாரையும் குறை சொல்லவில்லை என்றும், தனக்கு ஏற்பட்ட முகப்பரு பிரச்சனையை நீக்குவதற்கு சீரியல் குழுவினர் தனக்கு அவகாசம் தந்ததாகவும், தன்னால் அந்த குறிப்பிட்ட அவகாசத்திற்குள் சிகிச்சை மூலம் பருக்களை நீக்க முடியவில்லை என்றும் அதனால்தான் நீக்கி விட்டதாகவும் கூறினார்'...

இன்ஸ்டாகிராம் வைரல் வீடியோ
அந்த நேர்காணலின் போது.. தான் பேசிய சில கருத்துக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோவாக தற்பொழுது அப்லோட் செய்து இருக்கிறார். ஏன்? இந்த முகத்தோடு போட்டோக்கள் போடுகிறேன் என்று நிறைய பேர் தன்னை கேட்பதாகக் கூறியுள்ளார். அவர்களுக்கான பதிலாக 'தன்னால் மேக்கப் போட்டு பருக்களையும் மறைத்து போட்டோ போடமுடியும், இருந்தாலும் தனக்கு அதில் விருப்பமில்லை என்றும், 'நான் இப்படித்தான்'.. என்று வெளிப்படையாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை என்றும் தனக்கு அதுவே மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி இந்த சாதாரண முகப்பரு பிரச்சனையை ஏதோ மிகப்பெரிய குறையாக நினைக்கும் மனப்பாங்கு உள்ளவர்கள் வீட்டில் தன்னைப்போன்ற பெண்கள் இருக்கவே கூடாது என்று இறைவனை வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

திருநெல்வேலிக்கார பொண்ணுனா சும்மாவா!!
யூடியூப் மூலம் தன் மீடியா வாழ்க்கையை துவங்கிய விஜே தீபிகா, படிப்படியாக தன் திறமையால் சீரியலில் நுழைந்தார். இந்த நேரத்தில் இப்படி இவருக்கு ஏற்பட்ட பிரச்சனை ஒரு சின்ன சறுக்கல் தானே தவிர... சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது... என்று இவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் இவரே இதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தனது அடுத்த வேலையை பார்க்க துவங்கி விட்டார். "திருநெல்வேலிகார பொண்ணுனா சும்மாவா!!!." சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சரவணா விக்ரமுடன் இணைந்து ஓரு யூடியூப் சேனலை துவங்கியிருக்கிறார்.தமிழ் நாட்டு ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு தந்து.. அவரது மன தைரியத்திற்கு அரணாக இருக்க வேண்டுமெனறு இணையத்தில் பிரச்சாரமே நடக்கிறது....
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications