Abhinay: கடைசியாக அபிநய் சொன்னது போலவே ஆகிடிச்சே! 44 வயதில் மறைந்த துள்ளுவதோ இளமை நடிகர்
சென்னை: (Thulluvadho Ilamai Actor Abhinay Dies) 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் அபிநய், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். சில மாதங்களுக்கு முன்பு அவர் சிகிச்சைக்காக நிதி உதவி கோரி வீடியோ வெளியிட்டதுடன், KPY பாலா அவருக்கு உதவிக் கரம் நீட்டிய உருக்கமான வீடியோ தற்போது திரையுலகினரைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வறுமையின் பிடியில் அபிநய்
நடிகர் அபிநய் 2002-ல் தனுஷுடன் இணைந்து 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானார். தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளில் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், 'துப்பாக்கி' பட வில்லன் வித்யூத் ஜம்வாலுக்குப் பின்னணிக் குரல் கொடுத்ததுடன், சிலப் படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
வாழ்க்கை சவால்
ஒருசிலப் படங்களில் நடித்த பிறகு, சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் வருமானமின்றி வறுமையில் சிக்கினார். இதன் உச்சமாக, அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியது. சில மாதங்களுக்கு முன்பு வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது புகைப்படம் வெளியாகி, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் மாறியிருந்ததைக் கண்டு திரையுலகினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஒன்றரை வருஷம்தான் டைம்
உடல்நல குறைவால் அவதிப்பட்ட அபிநய், சிகிச்சைக்கு பணம் கோரி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அப்போதுதான், நடிகர் KPY பாலா அவருக்கு உதவி கரம் நீட்டிய சம்பவம் நடந்தது. நடிகர் KPY பாலா, அபிநய்க்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியதுடன், விரைவில் அவர் பழையபடி படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆறுதலும், நம்பிக்கையும் தெரிவித்திருந்தார்.
உருக்கமான வார்த்தைகள்
இந்தக் காட்சிகளின் போது பதிவான வீடியோவில், அபிநய் மிகவும் உருக்கமாக, "எனக்கு ஒன்றரை வருஷம்தான் நேரம் கொடுத்ததாகவும், தான் விரைவில் போய்விடுவேன் என்றும்" கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் திறமையாக இருந்த ஒரு கலைஞர், உடல்நல பாதிப்பாலும், வறுமையாலும் இப்படி சவால்களைச் சந்தித்து, தானே தனது மரண காலத்தை நிர்ணயித்து பேசிய இந்த வீடியோ, ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சோகத்தில் திரையுலகம்
44 வயதான அபிநய், சில மாதங்களுக்கு முன்புத் தானே சொன்னது போலவே, உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை 4 மணிக்குக் காலமானார். சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் தனுஷ் கூட 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து அவருக்கு உதவி செய்திருந்தார். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும், ஒரு திறமையானக் கலைஞர் தனது இளம் வயதில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தது ஒட்டுமொத்தச் சினிமாவையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications