தேர்தல் ரிசல்ட் நாளில் திருப்பதியில் திரிஷா.. போன வாரமே பிறந்தநாளை கொண்டாட காரணம் இதுதானா? பக்கா பிளான்!
சென்னை: தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் இந்த முக்கிய நாளில், அரசியல் மட்டுமல்ல சினிமா வட்டாரங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக திரிஷா தொடர்பான ஒரு சின்ன சோசியல் மீடியா பதிவு கூட தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.

திரிஷாவின் ரியாக்ஷன்
நடிகை திரிஷாவின் இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நேற்றே திருப்பதியில் தரிசனம் செய்திருந்தார். அப்போது ரசிகர்கள் சொன்ன "ரிசல்ட் பக்கா மனதே" என்ற வார்த்தைக்கு திரிஷா கொடுத்த ரியாக்ஷன் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
இதற்கு முன்பெல்லாம் திரிஷா தன்னுடைய பிறந்தநாளில் தோழிகளுடன் கொண்டாடுவார். ஆனால் இந்த முறை அவர் வித்தியாசமாக பிறந்தநாளில் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பே அவருடைய பிறந்த நாளை தோழிகளுடன் கொண்டாடிவிட்டார். அப்போது பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தாலும் என்ன எவ்வளவு சீக்கிரமாக பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
ஆனால் சில ரசிகர்கள் திரிஷாவின் நெருங்கிய நண்பரான விஜய் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளான மே நான்காம் தேதி தான் தேர்தல் ரிசல்ட் வரும் என்பதால் அன்றைய தேதி தன்னுடைய நண்பர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக திரிஷா கோவிலில் சாமி தரிசனம் செய்கிறாரா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்று திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார். பிறகு கோவில் வளாகத்தை அவர் சுற்றி வந்த போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் "மேடம் ரிசல்ட் பக்கா மனதே" என்று ன்று ரிசல்ட் பக்காவா நம்ம பக்கம் தான் என்பதுபோல சொன்னார். இதை கவனித்ததும் திரிஷா அந்த நபரை பார்த்து சிரித்துவிட்டு சென்றார்.
விஜய் வெல்வாரா?
இதற்கு முன்பு விமான நிலையங்களில் திரிஷா செல்லும்போது கூட அவருடைய ரசிகர்களோ அல்லது செய்தியாளர்களோ ஏதாவது கேள்வி கேட்டால் எதற்கும் கண்டுகொள்ளாமல் திரிஷா நேராக செல்வார். ஆனால் இப்போது தன்னுடைய நண்பர் விஜய்யின் ரிசல்ட் நம்ம பக்கம் வரும் என்று சொல்வது போல சொன்னதும் திரிஷா சிரித்தது கூட சோசியல் மீடியாவில் வைரலாகி பேசப்பட்டு வருகிறது.
திரிஷாவின் 42 வது பிறந்த நாளில் அவருடைய நண்பர் ஜெயித்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறாரா? இல்லையா? என்பது இன்னும் சிறிது நேரத்தில் முடிவு தெரிந்து விடும்.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம்












Click it and Unblock the Notifications