பஞ்சாபி தொழிலதிபருடன் கல்யாணம்? ஹனிமூனுக்காக காத்திருக்கிறேன்! வெளிப்படையாக போஸ்ட் போட்ட த்ரிஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையுலகில், ஹீரோக்களின் ஆதிக்கத்துக்கு மத்தியில், 22 வருடங்களுக்கு மேலாக ஒரு முன்னணி நாயகியாக நிலைத்து நிற்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், அதைச் சர்வ சாதாரணமாக செய்து காட்டியவர் த்ரிஷா கிருஷ்ணன்! இன்றும் இளம் ஹீரோயின்களுக்குப் போட்டியாக, கை நிறையப் படங்களுடன் 'பிக் பாஸ்' போல பிஸியாக வலம் வரும் த்ரிஷாவின் திருமணம் குறித்த பேச்சுகள்தான், இப்போது சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.

Trisha Trisha Krishnan

குந்தவையின் காதல் வாழ்க்கை

1999-ல் திரையுலக பயணத்தைத் தொடங்கிய த்ரிஷா, அழகு, வசீகரம், நடிப்பால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டார். நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் கிசுகிசுக்களால் நிரம்பியதுதான்!

நிச்சயதார்த்தம் ரத்து

2015-ல் தொழிலதிபர் வருண் மணியனுடன் நடந்த நிச்சயதார்த்தம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் வரை செல்லவில்லை. அந்தக் காதல் முறிவுக்குப் பிறகு, திருமணம் குறித்துப் பேசிய த்ரிஷா, "சரியான நபரை சந்தித்தால் மட்டுமே அதைப் பற்றி யோசிப்பேன், ஆனால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை" என்று கூறினார்.

சர்ச்சைகளும் வதந்திகளும்

த்ரிஷாவுக்கு எப்போது திருமணம், யாருடன் காதல் என்ற கேள்விகள் வருடத்துக்கு ஒரு முறையாவது எழுந்து அடங்குவது வாடிக்கை. சக முன்னணி நடிகர்களுடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டது, சில பொதுவெளிக் கருத்துகளால் அவர் சந்தித்த சர்ச்சைகள் என அவருடைய திரை வாழ்க்கை போலவே, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பரபரப்புக்குக் குறைவில்லை.

மீண்டும் கல்யாண கொண்டாட்டம்

42 வயதைக் கடந்துள்ள த்ரிஷா தற்போது மீண்டும் திருமணம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், இந்த முறை ஒரு 'பஞ்சாபி மாப்பிள்ளை' கதை!. சமீபத்திய சமூக வலைதளச் செய்திகளின்படி, த்ரிஷாவின் திருமணம் சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் நிச்சயிக்கப்பட உள்ளது. மேலும், இருவரது குடும்பத்தினரும் நீண்ட காலமாக நட்பில் இருப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் த்ரிஷா குறித்து ஒரு செய்தி வரும்போது, 'இவங்களுக்குக் கல்யாணம் முடியலையே, இவங்க எப்போ செட்டில் ஆவாங்க?' என்று கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் ஒருபக்கம் இருக்கிறார்கள். இந்தக் கிண்டல்களுக்கு மத்தியில், ஒரு நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து, அதிகப்படியான ஆர்வம் காட்டுவது நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது.

த்ரிஷாவின் தக் லைஃப் பதிலடி

தன் மீது வரும் வதந்திகளையும், கிண்டல்களையும் கண்டும் காணாமல் கடந்துபோகும் த்ரிஷா, இந்தத் திருமணச் செய்திகளுக்கு ஒரு ஜாலியான பதிலடி கொடுத்துள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது!

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், த்ரிஷா ஒரு கூலான கருத்தைப் பதிவிட்டுள்ளார்:"எனக்காக என் வாழ்க்கையை மக்கள் திட்டமிடுவது பிடித்திருக்கிறது. அதே மக்கள் என் தேனிலவையும் திட்டமிடுவார்கள் என காத்திருக்கிறேன்!". அடடா! தன்னைச் சுற்றிக் கிண்டலடிப்பவர்களையும், தனக்கு விருப்பமில்லாமல் 'கல்யாண அவசரச் சட்டம்' போடுபவர்களையும், ஒரு 'பஞ்சாபி' ஸ்டைலில் ஜாலியாகத் திருப்பி அடித்திருக்கிறார் த்ரிஷா!

கிண்டல் செய்பவர்களைப் பார்த்து, "சரி, நீங்களேதான் கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. அப்படியே ஹனிமூன் டிக்கெட்டையும் நீங்களே போட்டுக் கொடுங்க!" என்று சொல்வது போல இந்தச் சமயோஜிதப் பதில் அமைந்திருக்கிறது. ஒரு முன்னணி நடிகை மீது வரும் தனிப்பட்ட தாக்குதல்களைப் புறந்தள்ளி, சிரித்த முகத்துடன் அவர் கொடுத்த இந்தப் பதிலடி, அவருக்கு மேலும் ஒரு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்! த்ரிஷாவின் இந்த 'தக் லைஃப்' attitude உண்மையிலேயே பாராட்டத்தக்கது!

த்ரிஷாவின் இந்த ஜாலியான பதிலடி, அவர் மீதான கிண்டல்களைக் குறைக்குமா? அல்லது நெட்டிசன்கள் இன்னும் புதுக் கதைகளுடன் வருவார்களா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+