திருமணம் முடிந்த அடுத்த நாளே மகாலட்சுமி வெளியிட்ட பீலிங்கான பதிவு.. சோகத்தில் 90ஸ் கிட்ஸ்
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தற்போது தன்னுடைய காதல் கணவரான ரவீந்திரனை நினைத்து உருக்கமான பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலில் மஞ்சள் தாலியோடு முகத்தில் புன்னகை தழுவ மகாலட்சுமி வெளியிட்ட போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக லைக் செய்யப்பட்டு வருகிறது.
திருமணம் முடிந்த அடுத்த நாளில் கணவரை நினைத்து கணவருக்காக சமூக வலைத்தளத்தில் மகாலட்சுமி போஸ்ட் வெளியிட்டது தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

தொகுப்பாளராக அறிமுகம்
ஒரு தொகுப்பாளராக அறிமுகம் ஆகி ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த மகாலட்சுமி சீரியல்களில் குணச்சித்திர வேடங்களிலும், நெகட்டிவ் கேரக்டர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 90ஸ் ஹிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக இப்ப வரைக்கும் இருந்து வரும் மகாலட்சுமி தற்போது இரண்டாம் திருமணம் செய்து 90ஸ் கிட்ஸ்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார் .

சர்ச்சைகளில் சிக்கல்
ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்து அது விவாகரத்து ஆகியிருக்கும் நிலையில் தற்போதைய திருமணத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அவருடைய ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மகாலட்சுமி சமூக வலைத்தளத்தில் அதிகமான வதந்திகளுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார். பல நேரங்களில் சர்ச்சைகளில் இவருடைய பெயர் சிக்கிக்கொண்டிருந்தாலும் எதற்குமே வாயை திறக்காமல் மௌனமாக தான் இருந்து வந்துள்ளார்.

மகாலட்சுமியின் பதில்
மகா லட்சுமிக்கும் அவர் கூட நடித்த நடிகர் ஒருவருக்கும் தொடர்பு என்று அந்த நடிகரின் மனைவி போலீசில் கம்பளைண்ட் கொடுத்து சமூக வலைத்தளத்தில் இவருடைய பெயரை அதிகமாக அசிங்கப்படுத்தி இருந்தார். ஆனால், நாங்கள் நட்பாக தான் பழகுகிறோம் என்று அதற்கு மேல் எதையும் சொல்லத் தேவையில்லை என்று மகாலட்சுமியின் தரப்பிலிருந்து கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மகாலட்சுமி வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

செம ஃபீலிங் தான்
மகாலட்சுமி, விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரான ரவீந்திரனோடு தற்போது இவருக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. திருமண செய்தியை சமூக வலைத்தளத்தில் இருவரும் தெரிவித்திருந்தனர். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருமணம் முடிந்த மறுநாளான இன்று மகாலட்சுமி தன்னுடைய கணவருக்காக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். அதில், வாழ்க்கை அழகாக இருக்கிறது. அதை நீ செய்தாய் என் புருஷா!! என்று ரவீந்திரனை டேக் செய்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications