குலசை கோவிலில் ஆடிய சீரியல் நடிகைகள்.. முத்தாரம்மனிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறியது என உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா என்றாலே பக்தர்கள் பலரும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விதவிதமான வேடங்களை அணிந்து வருவது வழக்கம். அப்படி வரும் பக்தர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சீரியல் நடிகைகள், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் மேடைகளில் நடனமாடுவதும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

ஆனால் இந்த வருஷம் சீரியல் நடிகைகளை வைத்து நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், சில இடங்களில் நடிகைகள் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன. இதைப் பார்த்த சிலர் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு இது வெறும் மேடை நிகழ்ச்சியாக மட்டும் இருப்பதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

குலசை முத்தாரம்மனிடம் வேண்டுதல்

இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்த எனக்கு, கேரளாவில் இருந்து குலசைக்கு வந்து ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

முதன்முதலில் இங்கு வந்தபோது கோவிலின் வரலாற்றை தெரிந்துகொண்டு, எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று முத்தாரம்மனிடம் வேண்டிக்கொண்டேன். அதன்பிறகு இந்த வருஷம் இந்த நிகழ்ச்சியில் நடனமாட ஒப்பந்தமான அடுத்த நாளே சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது, என்று அவர் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

Kulasai Mutharamman Kulasai Dasara Tamil Television Serial Actresses Alya Manasa Tamil Cinema

மக்களின் அன்பு

இதனால் குலசைக்கு வந்து நடனமாடுவதை தனக்கு கிடைத்த வேலைவாய்ப்பாக மட்டும் பார்க்கவில்லை என்றும், அம்மனிடம் வேண்டிக்கொண்டு வரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக பேசியிருக்கிறார். இங்கு வரும் கலைஞர்களை மக்கள் அன்புடன் நடத்துவதால், ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு வருவதை போல இல்லாமல் சொந்த ஊருக்கு திரும்பி வருவது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் சொல்கிறார்.

Kulasai Mutharamman Kulasai Dasara Tamil Television Serial Actresses Alya Manasa Tamil Cinema

சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்பு

குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் நடனமாடிய பிறகு சின்னத்திரையில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். மைனா நந்தினி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகைகளும் இந்த நிகழ்ச்சியில் நடனமாடி இருக்கிறார்கள். இவர்களில் சிலர் பின்னாளில் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தங்களுக்கென ஓர் இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

நடிகை ஆல்யா மானசாவும் இதற்கு முன்பு ஒரு பேட்டியில் குலசை முத்தாரம்மன் கோவில் நிகழ்ச்சிகளில் நடனமாட சென்ற அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அங்கு நடனமாடியதன் மூலம் தனக்கு சின்னத்திரையில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பும் வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

Kulasai Mutharamman Kulasai Dasara Tamil Television Serial Actresses Alya Manasa Tamil Cinema

இப்படி பல கலைஞர்களுக்கு குலசை நிகழ்ச்சிகள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான மேடையாக இருந்திருக்கின்றன. அதே நேரத்தில், இங்கு வந்து ஆடுவது தங்களுடைய வேண்டுதலுடன் தொடர்புடையது என்றும் சிலர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

Kulasai Mutharamman Kulasai Dasara Tamil Television Serial Actresses Alya Manasa Tamil Cinema

பேசப்படும் குலசை நிகழ்ச்சி

இந்த ஆண்டு சீரியல் நடிகைகளின் நடன நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை மீறி சில இடங்களில் நடனங்கள் நடைபெற்றதாக வெளியாகும் வீடியோக்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒருபக்கம் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தாலும், மறுபக்கம் இந்த நிகழ்ச்சிகள் சில கலைஞர்களின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்த அனுபவங்களும் பேசப்படுகின்றன.

Kulasai Mutharamman Kulasai Dasara Tamil Television Serial Actresses Alya Manasa Tamil Cinema

குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா பக்தர்களின் நேர்த்திக்கடனுக்கும் நம்பிக்கைக்கும் பெயர் பெற்றது. அந்த திருவிழாவில் நடனமாடும் சிலருக்கு அது தொழில் வாய்ப்பாகவும், மற்றவர்களுக்கு அம்மனை வேண்டிக்கொள்ளும் ஒரு அனுபவமாகவும் இருக்கிறது. இதனால்தான் இந்த ஆண்டு நடன நிகழ்ச்சிகள் குறித்த சர்ச்சைக்கு மத்தியிலும், குலசையில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளையும் அனுபவங்களையும் கலைஞர்கள் பகிர்ந்து கொள்வது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+