பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போகும் ரேஷ்மா.. களம் இறங்கும் பிரபல நடிகை? இனி அதிரடி தான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து இருக்கும் ரேஷ்மா சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ராதிகா கேரக்டரில் ஆரம்பத்தில் ஜெனிபர் நடித்து வந்தார்.
தற்போது ரேஷ்மாவுக்கு புதிய வாய்ப்பு வந்த நிலையில் அவர் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் ரேஷ்மாவுக்கு பதிலாக நடிகை வனிதா நடிப்பதற்கு பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அடுத்தடுத்த ராதிகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலில் சாதாரண ஒரு குடும்பத்தை பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக குடும்பத்தில் நடக்கும் போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளை பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஆரம்பத்தில் தோழியாக தற்போது எதிரியாக ராதிகா கேரக்டரில் ரேஷ்மா நடித்து வருகிறார். இதே கேரக்டரில் ஆரம்பத்தில் ஜெனிபர் நடித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இந்த சீரியலில் கதையில் ஏற்படும் ட்விஸ்ட் காரணமாக தான் இந்த சீரியலை விட்டு விலகுவதாக கூறி திடீரென விலகி இருந்தார்.

குறைவான வில்லத்தனம்
இந்த நிலையில் இந்த சீரியலுக்கு ராதிகா கேரக்டரில் தற்போது ரேஷ்மா பசுபுலெட்டி செட் ஆகிவிட்டார். இதற்கு முன்பு ரேஷ்மா பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தாலும் அதிகமாக இவர் வில்லி கேரக்டரில் நடித்து வந்தார். இந்த சீரியலிலும் இவர் வில்லியாக தான் இருப்பார் என்று நினைத்திருந்தாலும் இவர் கொஞ்சம் காட்டம் குறைவான வில்லியாகத்தான் இருந்து வருகிறார். இதனாலேயே இவரை திட்டுவதா ஆதரிப்பதா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். பல நேரங்களில் இவர் பாவமாக இருப்பதாகவும் சில நேரங்களில் இவர் செய்யும் வில்லத்தனங்கள் இதுவெல்லாம் தேவையா ராதிகா என்று சொல்லும் வகையில் இருக்கிறது என்று ரசிகர்கள் இருதரப்பட்ட கருத்துக்களை இவருக்காக அனுப்பி வருகிறார்கள்.

புதிய வாய்ப்பு
இந்த நிலையில் ரேஷ்மா ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய சீரியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. அதற்கு பிறகு அதிகமானோர் சமூக வலைத்தளத்தில் நாங்கள் இந்த ராதிகாவை மிஸ் பண்ணுவோம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இப்ப வரைக்கும் ரேஷ்மா எந்த பதிலையும் கூறாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் சில வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். குறிப்பாக இனிவரும் எபிசோடுகளின் வீடியோவாக அது இருக்கிறது. அதில் எழிலுடைய திருமணத்திற்கு ராதிகாவாக ரேஷ்மா தான் அதில் கலந்து கொண்டிருக்கிறார்.

புது ராதிகா யார்
இந்த நிலையில் ரேஷ்மா இந்த சீரியலை விட்டு விலகி இருந்தால் அவருக்கு பதிலாக யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த கேரக்டருக்காக வனிதாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அதற்கான முடிவு செய்து சில நாட்களில் தெரிந்துவிடும் என்ற தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதைக் குறித்து இன்னும் நடிகை வனிதா எந்த ஒரு அதிகாரப்பூர்வமான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அதுபோல பாக்கியலட்சுமி சீரியல் அணியில் இருந்தும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்றாலும், ராதிகாவாக வனிதா வந்தால் டிஆர்பி எகிறிவிடும் அந்த கேரக்டருக்கு வனிதா கேரக்டர் செமையாக இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் பாராட்ட தொடங்கி விட்டார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications