தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணம்.. அதுவும் எப்போ தெரியுமா? திரை உலகமே களைகட்ட போகுது
சென்னை: வேல்ஸ் யுனிவர்சிட்டியின் சேர்மன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தாவிற்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என்று ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்தியேகமாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதுவும் வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் சென்னையில் வைத்து தான் அவருடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறதாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐசரி கணேஷை தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். அதிலும் சினிமாவில் மட்டுமல்லாமல் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் வேந்தர் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை உள்ள ஐசரி கணேஷ் சமீபத்தில் தான் தன்னுடைய வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான பூஜையை பிரமாண்டமாக போட்டிருந்தார்.

மூத்த மகள் ப்ரீத்தா
இது பெரிய அளவில் சினிமா பிரபலங்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிக்காத நடிகர்கள், இயக்குனர்கள் கூட இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு இருந்தார்கள். அதுபோல ஐசரி கணேசுக்கு பிரீத்தா, குஷ்மிதா என்ற இரண்டு மகள்களும் சர்வேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். அதில் மூத்த மகள் பிரீத்தா தான் வேல்ஸ் யுனிவர்சிட்டியின் வைஸ் பிரின்ஸ்பலாக இருக்கிறார்.
ஐசரி கணேஷ் குடும்பம்
அதுபோல ஐசரி கணேஷுக்கு மூத்த மகள் பிரீத்தா தான் ஸ்பெஷல் என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார். பிரீத்தாவும் தன்னுடைய அப்பா போல தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல சோஷியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் கூட மகளிர் தினத்தில் பல பெண்களுக்கு விருது வழங்கி இருந்தார்.
ஐசரி கணேஷின் வருங்கால மருமகன்
அந்த விழாவில் பிரீத்தாவிற்கும் விருதுகள் வழங்கப்பட்டிருந்தது. அதை பெருமையாக தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில்தான் ப்ரீத்தாவிற்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. பிரீத்தாவின் வருங்கால கணவர் ஆர்டிடெக்டாக இருக்கிறாராம். ஆனால் இது காதல் திருமணமா? அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை.
ஐசரி கணேஷ் மகள் திருமணம்
வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் பிரீத்தாவின் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் ஐசரி கணேஷ் வீட்டு பங்க்ஷனில் அதிகமான பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications