நடந்து முடிந்தது வெண்பாவின் திருமணம்.. "கடைசி முடிவை” யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவிற்கு ரோகித்தோடு திருமணம் முடிந்துவிட்டது

முதல் பாகம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களில் இருக்கும் நிலையில் வெண்பாவின் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஆயுதத்தை எடுத்து ஷர்மிளா

ஆயுதத்தை எடுத்து ஷர்மிளா

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், வெண்பாவின் கழுத்தில் ரோஹித் தாலி கட்ட இருக்கும்போது ஸ்டாப்பிட் என்று சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து வெண்பா என்னால் ரோஹித்தை திருமணம் செய்து கொள்ள முடியாது ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சி அழுது கொண்டிருக்கிறார். அருகில் இருந்த வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா கோவிலில் இருந்த அருவாளை எடுத்து வெண்பாவின் கழுத்தில் வைத்து நீ இப்போ கல்யாணம் முடிக்கவில்லை என்றால் இப்படியே உன்னை கொன்னுடுவேன் என்று மிரட்டுகிறார்.

ஒரு வழியாக திருமணம் முடிந்தது

ஒரு வழியாக திருமணம் முடிந்தது

ஷர்மிளாவின் செயலை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வெண்பா பயந்தபடியே ரோஹித்தின் கழுத்தில் மாலையை போட்டு போடுகிறார். அடுத்ததாக ரோஹித் வெண்பாவின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு எனக்கும் வெண்பாவுக்கும் திருமணம் முடிந்து விட்டது என்று சந்தோசமாக கத்தி சொல்கிறார். வெண்பா அழுது கொண்டே இருக்க ஷர்மிளா, ரோஹித், ரோஹித்தின் அம்மா அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர் .அதே நேரத்தில் கண்ணம்மாவின் வீட்டில் கண்ணம்மா பாரதியை பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார்.

உண்மையை சொல்ல வந்த லட்சுமி

உண்மையை சொல்ல வந்த லட்சுமி

உங்க பிள்ளை நல்லவேளை வெண்பாவை திருமணம் செய்து கொள்ளவில்லை. வெண்பா கழுத்தில் தாலியை மட்டும் கட்டி இருந்தார்னா? நான் செஞ்சிருக்கற வேலையே வேற. போலீஸ் ஸ்டேஷனில் தான் இருந்திருப்பார். நீங்க செஞ்ச புண்ணியத்தினால தான் கடைசி நேரத்தில் அவர் தாலி கட்டாமல் இருந்து விட்டார் என்று கூறிக் கொண்டிருக்கிறார் .அகிலன் பாரதி ஒரு படித்த முட்டாள் என்று திட்டுகிறார். அதே நேரத்தில் ஹேமா, லட்சுமியிடம் நான் ஒரு அனாதை லட்சுமி, என்னை ஆசிரமத்தில் இருந்து தான் எடுத்து வந்தார்களாம் .எனக்கு அப்பா, அம்மா, சித்தப்பா யாருமே கிடையாது என்று அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்தால் லட்சுமி உண்மையை அவரிடம் என்று ஹேமா நீ அனாதை இல்லை உனக்கு என்று சொல்லவும் சௌந்தர்யா வந்து இருவரையும் நிறுத்தி லட்சுமியை சொல்ல வேண்டாம் என்று மறைமுகமாக கூறுகிறார்.

சொத்து பத்திரம்

சொத்து பத்திரம்

அடுத்ததாக வெண்பாவின் வீட்டில் வெண்பா ரோஹித்திற்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கின்றனர். உள்ளே வந்ததும் ஷர்மிளா சாந்தியிடம் பூஜை அறையில் இருக்கும் அந்த பைலை எடுத்து வா என்று கூறுகிறார். சாந்தி எடுத்து வந்து கொடுத்ததும், இதில் என்ன இருக்கு தெரியுமா என்று கேட்கிறார். என்னவென்று அனைவரும் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, இதில் என்னுடைய மொத்த சொத்துக்களையும் எனக்குப் பிறகு யாருக்கு என்பதை எழுதி வைத்துவிட்டேன். இது உயில் பத்திரம் என்று கூறுகிறார்.

கடைசியில் வெண்பாவுக்கு ஆப்பு

கடைசியில் வெண்பாவுக்கு ஆப்பு

இனி என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் ரோகித்துக்கு தான் என்று சொன்னதும் வெண்பா அதிர்ச்சி அடைகிறார். அது மட்டும் இல்லாமல் வெண்பா ரோகித்தோடு வாழாமல் விவாகரத்து செய்தால் அவருக்கு ஒரு பிரசண்டேஜ் கூட சொத்து கிடையாது, பணமும் கிடையாது. அவரோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் தான் சொத்தை அனுபவித்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறார். இதைக் கேட்ட வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. வெண்பாவின் திருமணம் முடிந்துவிட்டது என்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் கடைசியில் ஷர்மிளா கொடுத்த அதிர்ச்சி தான் அனைவருக்கும் பெரியது. இதுவரைக்கும் ஆட்டம் போட்டு வந்த வெண்பாவிற்கு கடைசியில் ஆப்பு கிடைத்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+