எனக்கும் அதற்கும் சம்மதம் கிடையாது.. கமல் அப்பவே சொல்லி இருக்கிறார்! விஜய் சேதுபதி ஓபன்
சென்னை: விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கடைசி விவசாயி படத்தைப் பற்றி கூலாக பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கடைசி விவசாயி படத்திற்காக வாங்கிய கடனை பற்றி அவர் பெருந்தன்மையாக பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மணிகண்டன் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். படத்தின் மைய கதாபாத்திரமான மாயாண்டியாக நடித்து நல்லாண்டியின் நடிப்பு, மணிகண்டனின் இயக்கமும் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டன. இந்த படம் 2022-ல் வெளியானது. படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும், திரையரங்க வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
விஜய் சேதுபதி விளக்கம்
இந்த படத்திற்கு விஜய் சேதுபதியும் தயாரிப்பாளராக இருந்தார். அதனால் அவருக்கு கடன் ஏற்பட்டது. இது பற்றி பல பேட்டிகளில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது அப்படித்தான் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, நான் இந்த படத்திற்க்கு கோ ப்ரொடியூஸ் செய்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் தான். அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

படம் வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல படத்தை எடுத்திருக்கிறோம் என்ற மன நிறைவு இருந்தது. பல இடங்களில் இந்த படத்தைப் பற்றி என்கிட்ட கேட்கிறாங்க. நான் அதற்கு சொல்கிற ஒரே விஷயம் சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஒரு பேட்டியில் பேசியதை தான்.
கமல்ஹாசன் சொன்ன விஷயம்
ஒரு பேட்டியில் கமல்ஹாசனிடம், நீங்கள் சினிமாவில் ப்ரொடியூஸ் பண்ணி லாஸ் ஆனது உங்களுக்கு எப்படி இருந்தது என்று கேட்டிருந்தார்கள். அதற்கு அவர் பணம் செலவு பண்ணுனது லாஸ் என்று சொல்ல முடியாது. என்னுடைய அம்மா இறந்து போயிட்டாங்க, அவங்க இனி திரும்ப வரவே மாட்டாங்க.. அதுதான் லாஸ். ஆனால் பணம் எப்போது வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம், நான் இந்த சினிமா துறையில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் தான் போடுகிறேன். அதனால் அது லாஸ் என்று நான் சொல்ல முடியாது என்று கமல் சொல்லி இருந்தார்.

தன்னம்பிக்கை
அதுதான் என்னுடைய கருத்தும். இது எனக்கு லாஸ் என்று நானும் சொல்ல முடியாது. நான் இப்ப வரைக்கும் அந்த படத்திற்கு வாங்கிய கடனுக்காக வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது வேற கதை. தொடர்ந்து என்னால் படம் நடிக்க முடியும். அந்த கடனை அடைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
