ஜெயிலர் 2 புரமோஷனில் விஜய் சேதுபதி மிஸ்ஸிங்! இதுதான் காரணமா? ரகசியமாக நடந்த சம்பவம்!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜெயிலர் 2' படத்தைப் பற்றித்தான் இப்போது கோலிவுட்டில் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். படம் எப்போது வெளியாகும், முதல் பாகத்தைப் போலவே இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்கிறது. இன்னொரு பக்கம், படத்தில் சில முக்கிய நடிகர்களின் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி ஏன் படத்தின் புரமோஷனில் தலைகாட்டவில்லை என்ற கேள்விக்கு இப்போது ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

ஜெயிலர் 2 எதிர்பார்ப்பு
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி காட்டிய மாஸ், அனிருத்தின் இசை, படத்தில் இடம்பெற்ற அதிரடி காட்சிகள் என எல்லாமே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதனால் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தது.
இப்போது அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் 'ஜெயிலர் 2' உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற மோகன்லால், சிவராஜ்குமாரரின் கேரக்டர்கள் இரண்டாம் பாகத்தில் வருகிறார்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இதனுடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அனிருத் இசையமைத்திருப்பதால் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
விஜய் சேதுபதி எங்கே போனார்
இவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், விஜய் சேதுபதி படத்தில் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்வி மட்டும் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கிறது. படத்தின் ஆரம்பகட்டத் தகவல்கள் வெளியானபோது விஜய் சேதுபதியும் சந்தானமும் 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதாகப் பேசப்பட்டது. விஜய் சேதுபதியும் தான் இதில் இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால், இப்போது படத்துக்காக நடக்கும் புரமோஷனில் அவரை காணவில்லை.
நீக்கப்பட்ட காட்சிகள்
இதனால் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. விஜய் சேதுபதியும் படத்தில் நடித்திருந்தால் புரமோஷனில் ஏன் கலந்துகொள்ளவில்லை? அவருடைய கதாபாத்திரம் படத்தில் இருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று பலரும் கேட்கத் தொடங்கினார்கள். இந்தச் சூழலில்தான் மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் நடித்த காட்சிகள் பைனல் ஸ்டேஜில் டெலிட் செய்யப்பட்டதாக கூறியிருக்கிறார். படத்தின் நீளம் அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறி இரக்கிறார். அதனால் தான் விஜய் சேதுபதி பிரமோஷனுக்கு வரவில்லையா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.




Click it and Unblock the Notifications
