Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியங்காவிற்கும், அவருடைய கணவருக்கும் இத்தனை வயது வித்தியாசமா? கடைசியில் ஆசைப்பட்டது நடந்துடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான பிரியங்கா நேற்று வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிர்ந்து வருகிறது. வசியின் தோற்றத்தை பார்த்ததும் பலர் இவருக்கு அதிக வயது இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பிரியங்கா மற்றும் வசி இருவருக்கும் இடையே எவ்வளவு வயது வித்தியாசம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

சமூக வலைதளத்தில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் நபர்களில் ஒருவராக இருக்கும் பிரியங்கா நேற்று மாலை வெளியிட்ட போஸ்ட் தான் இணையத்தில் தீ பொறியாக பரவி வருகிறது. பிரியங்காவிற்கு ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளிலேயே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. ஆனால் இவர்களுடைய விவாகரத்து செய்தி ரகசியமாகவே வைக்கப்பட்டது.

Vijay TV Priyanka

இரண்டாவது திருமணம்

சமீபத்தில் தான் பிரியங்காவிற்கு இரண்டாவது திருமணம் விரைவில் நடைபெறும் என்று அவருடைய அம்மா அறிவித்திருந்தார். இதற்கு பிறகு தான் பிரியங்கா அவருடைய முதல் கணவரை பிரிந்து விட்டார் என்று பலருக்கும் உறுதியாக தெரிய வந்தது. அதே நேரத்தில் பிரியங்கா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் முதல் கணவருடன் எடுத்த புகைப்படங்களையும் டெலிட் செய்திருந்தார்.

குவியும் வாழ்த்து

இந்த நிலையில் நேற்று டிஜே வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இவருடைய புகைப்படங்கள் வெளியானதும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் வசி மற்றும் பிரியங்காவின் டேக் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உருவ கேலி

இந்த நிலையில் வசி உருவத்தை பார்க்கும் போது அவர் வயதானவர் போல இருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. வெள்ளை தலைமுடியுடன் இருப்பதை பார்த்ததும் இவர்களுக்கு வயது அதிகமாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் இப்போது 20 வயது பசங்களுக்கு கூட வெள்ளை முடி வந்து விடுகிறது என்றும் சிலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

Vijay TV Priyanka

வயது வித்தியாசம்

இந்த நிலையில் பிரியங்கா மற்றும் வசி இருவருக்கும் 10 வயது வித்தியாசம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பிரியங்காவிற்கு இப்போது வயது 32 ஆகிறது அதேபோல வசிக்கு இப்போது 42 வயது ஆகிறது. ஏற்கனவே பிரியங்கா சில பேட்டிகளில் தன்னுடைய வாழ்க்கையில் நீண்ட நாட்கள் கனவு என்று சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

Vijay TV Priyanka

பிரியங்காவின் ஆசை கனவு

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டும், அதிலும் நெகட்டிவ் இல்லாமல் வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதேபோல இப்போது நடந்து விட்டது அதுபோல என்னுடைய கணவர் என்னை குழந்தை போல கொஞ்ச வேண்டும். எனக்காக மட்டுமே அன்பை செலுத்த வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்று பேசி இருந்தார். அதுபோல பிரியங்காவின் இரண்டாவது கணவர் அவரை மகிழ்ச்சியாக பார்த்து வருவதாக பிரியங்காவின் நண்பர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

காதல் உருவான இடம்

பிரியங்காவிற்கும் வசிக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பே அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு திருமண நிகழ்ச்சியில் வசி டிஜேவாக வேலை செய்து கொண்டிருந்தபோதுதான் அங்கு பிரியங்கா பாடல் பாடியிருக்கிறார். அந்த நேரத்தில் அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வந்தது. அப்போதுதான் வசி மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே அறிமுகம் ஆகி இருக்கிறது.

எளிமையான திருமணம்

ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களுடைய பயணத்தில் இப்போது காதலித்து திருமணமும் செய்து இருக்கிறார்கள். இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் சென்னையில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+