மகள் பிறந்தநாளில் புகழ் பகிர்ந்த நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் வாழ்த்து.. நயன்தாராவுக்கு போட்டியா?
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் அந்த பதிவிற்கு என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ. நீ வந்த நாளிலிருந்து எங்கள் வாழ்க்கை வசந்தமாய் மாறியது என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் எல்லாம் வெள்ளி திரையில் வாய்ப்புகள் குறைந்த பிறகு தான் பல நடிகைகள், நடிகர்கள் சின்னத்திரைக்கு வருவார்கள். ஆனால் இப்போதுள்ள பல நடிகர்கள், நடிகைகள் சின்னத்திரையில் இருந்து தங்களுடைய திறமையின் மூலமாக வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து அங்கு புகழின் உச்சத்தில் வலம் வருகிறார்கள். அதில் ஒருவர் தான் புகழ்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பிரபலமாகி இருந்தாலும் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் சின்ன கதாபாத்திரத்தில் வந்து தன்னுடைய கடின உழைப்பால் இன்று பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பெண் வேடம் போட்டு பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் தன்னுடைய நிஜ முகத்தை உலகத்திற்கு காட்டியிருந்தார்.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் காதலித்து வந்த தன்னுடைய காதலியான பென்ஸி ரியா என்பவரை திருமணம் செய்து இருந்தார். அவர்களுக்கு அண்மையில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த மகளுக்கு ரித்தன்யா என்ற பெயர் வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக சினிமாக்களில் சின்னத்திரையிலும் கலந்து கொண்டிருக்கும் புகழ் இன்று தன்னுடைய மகளின் பிறந்த நாளில் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்து அழகிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த பதிவுக்கு கீழே "என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ. நீ வந்த நாளில் இருந்து எங்கள் வாழ்க்கை வசந்தமாய் மாறியது. முதல் முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியதை என்னால் மறக்கவே முடியாது. இனிவரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்க போகிறோம். மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே நடிகை நயன்தாராவின் இரண்டு மகன்களுக்கும் பிறந்தநாள் என்று அவர் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு போட்டியாக புகழ் அவருடைய மகள் முகத்தை காட்டி இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். புகழ் மகளின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் சொன்னாலும் அவருடைய மகள் அவரைப் போலவே ஹேர் ஸ்டைலில் இருக்கிறார் என்பது பலருடைய கமெண்டாக இருக்கிறது.
புகழ் நடிப்பில் உருவாகியுள்ள ஜூ கீப்பர் படம் விரைவில் வெளியாக உள்ளது. அதோடு அவர் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் காமெடியனாக நடித்த புகழ் இப்போது வில்லனாக கோலிசோடா ரைசிங் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இது ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications