சிறகடிக்க ஆசை: நகை விஷயத்தில் அவமானப்பட்ட விஜயா.. ரோகிணிக்கு விழுந்த அடி! அண்ணாமலை எடுக்கும் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி திருட்டு நகையை வாங்கி விஜயாவுக்கு கொடுத்த விஷயம் விஜயாவிற்கு தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே ரோகிணியின் மீது கோபத்தில் இருக்கும் விஜயா இப்போது ரோகிணியை போட்டு அடித்திருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி பணக்கார வீட்டு மருமகள் இல்லை என்ற விஷயம் குடும்பத்திற்கு முத்து மூலமாக தெரிய வந்தது. அதற்குப் பிறகு விஜயா இன்னும் ரோகிணியை பாடாய்படுத்தி எடுத்து வருகிறார். ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படுத்தி கொண்டிருக்கிறார். அதுபோல ரோகிணி பணக்கார மருமகள் இல்லை என்று தெரிந்ததும் அவரை விவாகரத்து செய்துவிட்டு மனோஜிக்கு ரவியின் ஓனர் நீத்துவை இரண்டாவது கல்யாணம் பண்ணுவதற்காகவும் விஜயா ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணிக்கு சிக்கல்

இப்படியான நிலையில் இப்போது ரோகிணிக்கு மேலும் ஒரு சிக்கல் வந்திருக்கிறது. விஜயாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு சிட்டியிடம் இருந்த திருட்டு நகை ஒன்றை ரோகிணி வாங்கி விஜயாவிடம் கொடுத்து ஐஸ் வைத்திருந்தார். ஆனாலும் அதில் கரையாத விஜயா ரோகிணியிடம் கடுகடுவென பேசிக்கொண்டு இருந்தார். இப்போது ரோகிணி வாங்கி கொடுத்த நகையை போட்டுக்கொண்டு சிந்தாமணியின் பிறந்தநாள் பங்க்ஷனுக்கு பார்வதியுடன் விஜயா போயிருந்த நிலையில் அங்கு சிந்தாமணியின் பிரண்டு ஒருவரும் வந்திருந்தார்.

அசிங்கப்பட்ட விஜயா

அவர் விஜயா போட்டிருந்த நகையை பார்த்து இது என்னுடைய நகை போலவே இருக்கு என்று சொல்ல அதை பார்த்து சிந்தாமணியும் ஆமா இது உன்னுடைய நகை போல தான் இருக்கு என்று சொல்ல, அதற்கு விஜயா ஒரே போல எத்தனையோ நகை இருக்குமே என்று சொல்ல இந்த நகைக்கு பின்னாடி என்னுடைய பெயரும் என் கணவர் பெயரும் இருக்கும் என்று அந்தப் பெண் சொல்ல, விஜயா கழுத்தில் இருந்த நகையில் அதே பெயர் இருக்கிறது.

திருட்டு நகை

இதனால் என்னுடைய திருட்டு போன நகையை தான் நீங்க போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று அந்த பெண் சொல்ல, விஜயா அவமானத்தில் தலை குனிந்து இருக்கிறார். பிறகு வீட்டுக்கு வந்த விஜயா கோபத்தில் இருக்கும்போது ரோகிணி என்ன ஆச்சு என்று விசாரிக்க, இவா எனக்கு அன்னைக்கு வாங்கி தந்த நகை திருட்டு நகை. இப்போ திருடவும் தொடங்கிட்டா என்று ரோகிணியை போட்டு விஜயா அடிக்கிறார். இனி ரோகிணி விஷயத்தில் அண்ணாமலை என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இனி வரும் சம்பவம்

ஏற்கனவே ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்ற உண்மை தெரிந்த பிறகு இதற்கு மேலும் எங்களிடம் எந்த விஷயமும் மறைக்கக்கூடாது என்று சொல்லி இருந்தார். இப்போது திருட்டு நகை விஷயத்தில் ரோகினி மாட்டி இருக்கும் நிலையில் அண்ணாமலை ரோகிணியை வீட்டை விட்டு துரத்த போகிறாரா? அல்லது இந்த நகையை யாரிடம் இருந்து வாங்கினா என்று கேள்வி கேட்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அதே நேரத்தில் விஜயாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக ரோகிணி மனோஜ் உடன் சேர்ந்து சாமியாரிடம் கெஞ்சி பொய் சொல்ல வைத்து விஜயாவுக்கு உயிர் பயத்தை காட்டி இருந்தார். அப்போதே விஜயாவுக்கு சாமியார் சொன்னதே கேட்டு சந்தேகம் வந்தது. இனி நகை விஷயத்தோடு சாமியார் விஷயத்தையும் விஜயா கண்டுபிடிக்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+