கர்ப்பிணிப் பெண்ணின் தாலியை காப்பாற்ற நடுரோட்டில் விஜயகாந்த் செய்தது தெரியுமா? மிரள வைத்த செயல்
சென்னை: நடிகர் விஜயகாந்த் இன்று டிசம்பர் 28ஆம் தேதி உடல் நல குறைவால் காலமாகி இருக்கிறார். அவருடைய உடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் நடிகர் விஜயகாந்த் பற்றி அவருடைய நண்பர்கள், ரசிகர்கள் பலரும் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் விஜயகாந்தின் நண்பரான தியாகு பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார்.
அதில் தானும் தன்னுடைய நண்பர் விஜயகாந்த்தும் காரில் போய்க்கொண்டிருக்கும் போது கர்ப்பிணி பெண் ஒருவரின் தாலியை விஜயகாந்த் காப்பாற்றி கொடுத்தது பற்றி பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்ப்போம்.

இன்று விஜயகாந்தின் திடீர் மறைவால் உலக தமிழ் சினிமா ரசிகர்களும் தமிழ்நாட்டு மக்களும் மீளா துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். நடிகர் விஜயகாந்த் இன்று மறைந்து விட்டார் என்ற செய்தியை நம்ப முடியாமல் இப்போதும் பல ரசிகர்கள் இது மட்டும் கனவாக இருக்கக் கூடாதா என்று கதறி வருகிறார்கள்.
ஏற்கனவே விஜயகாந்த் ஒரு சில வருடங்களாகவே உடல் நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் சினிமா மற்றும் அரசியலில் இருந்து விஜயகாந்த் விலகி இருந்தார். ஆனாலும் தொடர்ந்து பலருக்கும் உதவிகளை மட்டும் செய்து வந்தார். இந்த டிசம்பர் மாதம் வந்தாலே மக்களுக்கு பெரும் பயம் வந்து விடுகிறது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பல இயற்கை சீற்றங்களும் பல முக்கிய பிரபலங்களின் மரணங்களும் பலரையும் கலங்க வைத்து விடுகிறது. பெரியார், எம்ஜிஆர் வரிசையில் இப்போது விஜயகாந்த் இதே டிசம்பர் மாதத்தில் மறைந்திருக்கிறார். அவருடைய மறைவு ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் துக்கத்தில் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் நண்பர்களும் அவருடைய ரசிகர்களும் பல நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான தியாகு கண்ணீரோடு விஜய்காந்தின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கிருந்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் எல்லோரும் என்னை பார்த்து நீ மட்டும் எப்படி விஜயகாந்த் கூட இத்தனை வருஷம் நண்பரா இருக்கேன்னு கேட்பாங்க.

ஏன்னா விஜயகாந்துக்கு டக்கென்று கோபம் வந்துவிடும். ஆனால் அவன் ஒரு குழந்தை மாதிரி தான். அவனை மாதிரி யாராலும் யாருக்கும் உதவி செய்ய முடியாது. அதுக்கு உதாரணமா நான் பல சம்பவங்களை சொல்லலாம்... ஒரு முறை நானும் விஜயகாந்த்தும் அவசரமா மனோரமா வீட்டுக்கு காரில் போயிட்டு இருந்தோம். அப்போது திடீர்னு ரோட்டுல காரை நிறுத்தி காரில் இருந்து தடதடன்னு இறங்கி ஓடுனார்.
நான் என்னன்னு பார்க்கும்போது அங்கு ஒரு கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடன் ஒருவர் அத்துக்கொண்டு ஓடுனான் அந்த நேரத்தில் தான் ஒரு நடிகன் என்பதை துளி கூட நினைக்காமல் டக் என்று ஓடி சென்று திருடனுக்கு பளார் என்று கன்னத்தில் அறைந்து அவன் கையில் இருந்த தாலியை பிடுங்கி அந்த பெண்ணிடம் கொடுத்தார். அந்த பொண்ணு நடு ரோட்டிலே விஜயகாந்த் காலில் விழுந்துட்டு....
அண்ணே என் தாலியை காப்பாற்றி தந்துட்டீங்க என்று அந்த பொண்ணு அழுதுகிட்டே சொல்லுச்சு. அவன் அந்த பொண்ணை சமாதானம் செஞ்சிட்டு அந்த திருடனை ரெண்டு மூணு அடி போட்டான். நான் அதை தடுத்து நிறுத்துனேன் ஆனால் அவனை இப்படி எல்லாம் இனி பண்ணுன தொலைச்சு புடுவேன் என்று சொல்லி விரட்டி விட்டான்.

அந்த நேரத்தில் அந்த திருடர்களால் நமக்கு எதுவும் நடந்திடும்னு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல. நான் அப்போ விஜயகாந்தை பார்த்து வியந்து போனேன் என்று கண்கலங்கி கதறி அழுதபடி நடிகர் தியாகு இந்த நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
-
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications