விஜயகாந்த் பெயரை சொன்னதும் kpyபாலாவிற்கு கிடைத்த சப்போர்ட்.. இனிமே உதவிக்கு பஞ்சமில்லை
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலா தன்னுடைய வருமானத்தில் பலருக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு மேடையில் விஜயகாந்த் பெயரை சொல்லி பேசியதால் அவருடைய மகன் நானும் உங்களோடு உதவுகிறேன் என்று கூறியிருக்கிறார். அந்த மேடையில் என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.
அது வகையில் பாலா விஜய் டிவியில் அறிமுகமான புதியதில் இவருடைய உருவத்தை வைத்து பலர் கிண்டல் செய்து இருந்தனர். ஆனால் தன்னுடைய கவுண்டர் காமெடி மூலமாக விஜய் டிவியில் டாப் காமெடியனாக வளம் வந்தார். அதனாலேயே பாலா இல்லாமல் விஜய் டிவி நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா நிகழ்ச்சியிலும் பாலா தலை காட்டிக் கொண்டிருந்தார்.

சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அடுத்தடுத்து பல திரைப்படங்களில் சின்ன கேரக்டர்களிலும் முக்கிய கேரக்டர்களிலும் பாலா நடித்து வருகிறார். இப்படி ஆன நிலையில் தன்னுடைய வருமானத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு சின்ன சின்ன உதவிகளை செய்து வந்த பாலா இப்போது முகம் தெரியாத பலருக்கும் உதவி செய்து வருகிறார்.
இது பலருடைய பாராட்டுகளை பெற்று வந்தாலும் சிலருடைய விமர்சனங்களையும் பெற்று வருகிறது. புயல், மழை என்று பாதிப்பில் மக்கள் இருக்கும்போது தன்னால் முடிந்த அளவிற்கு தன்னுடைய அக்கவுண்டில் இருந்த எல்லா பணத்தையும் எடுத்துக் கொடுத்த பாலா இப்போது இணையத்தில் வைரலான வீடியோவில் இருந்த ஒரு நபருக்கு பைக் வாங்கி கொடுத்தும் அசத்தி இருக்கிறார்.
அதுபோல ஆட்டோ, ஆம்புலன்ஸ் என்று தினமும் ஒவ்வொரு உதவிகளை செய்து அதை வீடியோக்களாகவும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி ஆன நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பாலாவும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பாலா பேசுகையில் நான் இந்த அளவிற்கு தர்மம் செய்வதற்கு விதை போட்ட வரை விஜயகாந்த் தான்.

அவரின் இன்ஸ்பிரேஷனால் தான் நானும் பல உதவிகளை செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு விஜய பிரபாகரன் அப்பா பெயரை சொல்லி என்னை சென்டிமெண்டாக டச் பண்ணி விட்டீங்க. அதனால உங்களால் முடியாத பட்சத்தில் என்னிடம் வந்து கேளுங்கள் நான் உங்களோடு சேர்ந்து உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதில் மக்கள் மத்தியில் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications