விஜயகுமார் வீட்டில் மகிழ்ச்சி திருவிழா! குடும்பமே இப்போ சந்தோஷம்! உருக்கமாக மகள் வெளியிட்ட பதிவு!
சென்னை: தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான விஜயகுமாரின் குடும்பத்தில் தற்போது கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. விஜயகுமாரின் மகளும், டாக்டரும் ஆன அனிதா (anits1103), தனது மகன் மருத்துவர் பட்டப்படிப்பை முடித்த மகிழ்ச்சியைச் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவுடன் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜயகுமார் குடும்பம் - ஒரு பார்வை
நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். இவருக்கு இரண்டு மனைவி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். முதல் மனைவி முத்துக்கண்ணு தம்பதிக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற பிள்ளைகள் இருந்தனர் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்த விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்து தம்பதிக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர்
இவர்களுடைய குடும்பத்தில் நடிகை வனிதா மட்டும் இப்போது குடும்பத்தை பிரிந்து தனியாக தன்னுடைய மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதாடாக்டராக வெளிநாட்டில் பணியாற்றி வந்தார் சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய வேலையை டிசைன் செய்து விட்டு சென்னைக்கு குடும்பத்துடன் வந்து தங்கி இருக்கிறார். அவருடைய மகளுக்கு கடந்த வருடத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது அனிதாவிற்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் இப்போது அவருடைய மகன் பற்றி வெளியிட்ட பதிவு இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

தாய் அனிதாவின் பெருமித பதிவு
அனிதா குமார், தனது மகன் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் மகிழ்ச்சியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்ப புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தில், டாக்டர் பட்டம் பெற்ற மகன், அனிதா, அவரது கணவர், மற்றும் விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.
இந்தப் படத்தைப் பகிர்ந்து அனிதா உருக்கமாகப் பதிவிட்டிருப்பதாவது: "மகிழ்ச்சியின் குறிப்பு, பெருமையின் குறிப்பு, நன்றியின் குறிப்பு, மகிழ்ச்சிக் கண்ணீரின் குறிப்பு! இன்று, இரண்டு மருத்துவர்களின் (doctors) பெற்றோராக, நான் எனது தலையை உயர்த்திப் பெருமையுடன் நிற்கிறேன். பல ஆண்டுகளாக என் குழந்தைகள் செய்துள்ள கடின உழைப்பும், தியாகங்களும் எனக்குப் பெருமை சேர்த்துள்ளன.

எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்கும் எனது குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கல்லூரிச் சேர்க்கையின் முதல் நாளில் இருந்து இப்போது வரை இந்தப் பயணத்தை அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.
அனிதாவின் இந்தக் குடும்பப் பதிவு, விஜயகுமார் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது வாழ்த்துகளையும் பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வளவு வருட உழைப்புக்குப் பலனாகத் தனது மகன் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதை எண்ணி, தாய் அனிதா அடைந்திருக்கும் மகிழ்ச்சி அலாதியானது.












Click it and Unblock the Notifications