விஜய் டிவி பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேன்.. விஜே பாவனாவின் அதிரடிக்கு என்ன காரணம்?
சென்னை: விஜய் டிவி பக்கமே நான் வரமாட்டேன் என ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த விஜே பாவனா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சேனலிலும் செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என நியமிக்கப்படுவர். இவர்களின் பணியே செய்தியை தவறின்றி வாசிப்பதும், நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்வதும்தான்.
அந்த வகையில் சன் டிவியின் பெப்சி உமா தொடங்கி இன்று விஜய் டிவி ரக்ஷன் வரை பல்வேறு தொகுப்பாளர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்கள் என்றால் அவர்கள் பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்டோர்தான்.

விஜய்
அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து வரும் தொகுப்பாளர்களில் பாவனாவும் ஒருவர். இவர் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவின் தோழியாவார். முதலில் இருவரும் சகோதரிகள் என கருதப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அக்கம்பக்கம் வீட்டில் வசித்தவர்களாம்.

ஜோடி நம்பர் 1
பாவனாவும் சிவகார்த்திகேயனும் இணைந்து விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். அது சூப்பர் டூப்பர் ஹிட். இந்த நிலையில் விஜய் டிவியிலிருந்து வெளியே வந்த பாவனா, கலர்ஸ் தமிழில் விளையாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பாவனா
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் விஜய் டிவிக்கு எப்போது வருவீர்கள் என கேட்டார். அதற்கு பாவனா, இனி விஜய் டிவி பக்கம் வரப்போவதில்லை, அவர்களின் ஸ்டைல் இப்போது மாறியுள்ளது. காமெடியாகவே நிகழ்ச்சியை கொண்டு செல்ல அவர்கள் இப்போது வழக்கமாக வைத்துள்ளார்கள்.

பாவனா
அது எனது ஸ்டைலுக்கு மாறாக உள்ளது என பாவனா கூறியுள்ளார். விஜய் டிவியில் இருந்து பாவனா ஏன் வெளியே வந்தார் என தெரியவில்லை. இவரை போல் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த ரம்யா இன்று சில படங்களில் நடித்து வருகிறார். அது போல் அர்ச்சனாவும் தற்போது ஒரு படத்தில் சப்போர்டிங் ரோல் செய்துள்ளார்.