லோ பட்ஜெட் மரியான், பனிமலராக மாறிய பாண்டியன் ஸ்டோர் ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலமாக பிரபலமடைந்த விஜே தீபிகா மற்றும் சரவணன் இருவரும் தற்போது வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த வீஜே தீபிகா இந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகி விட்டார்.
சீரியலில் இருந்து விலகிய பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா மற்றும் சரவணன் இணைவரும் தனுஷ் பட கெட்டப்பில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை மட்டுமல்லாமல் நெட்டிசன்களையும் கவர்ந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அறிமுகம்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் விஜய் தீபிகா நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய முகத்தில் அதிகமாக முகப்பரு இருந்ததாகவும் அதனை சரி செய்து கொள்ள வேண்டி பலமுறை சீரியல் தரப்பில் இருந்து சொன்ன பிறகும் தன்னுடைய முகத்தில் இருக்கும் முகப்பரு தழும்புகளை சரி செய்ய டிரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்த தீபிகா சீரியல் தரப்பில் சொன்ன நாட்களுக்கு முன்பாக தன்னுடைய முகத்தில் மாற்றம் ஏதும் நடைபெறவில்லை என சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக அந்த சீரியலில் வேறு சில நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தீபிகாவுக்கு ஜோடியாக நடித்த சரவணன் உடன் சீரியலை தாண்டியும் பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சந்தேகமாகத்தான் இருக்கிறதாம்
தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் தீபிகா, பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகியதும் அவருக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தீபிகாவின் பனிமலர் கெட்டப் பலரையும் ஈர்த்துள்ளதாம். அவருக்கு ஜோடியாக சரவணன், மரியான் கெட்ட பில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளியிட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தாலும் ஜோடியாக இவர்கள் பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கேள்விகளும் பரவி வருகிறது.

குழப்பமாகத்தான் இருக்கிறதாம்
ரசிகர்கள் பலர் இவர்களுடைய வீடியோவை பார்த்ததும் நீங்கள் காதலிக்கிறீர்களா? ? திருமணம் எப்போது? ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அதற்கு இதுவரைக்கும் வாயை திறக்காத இந்த ஜோடி யூடியூப் சேனல்களில் பல நகைச்சுவை வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் கேரக்டரில் வீட்டில் கடைசி பையனாகவும் துறுதுறுப்பான கேரக்டரில் பார்த்து பழகிய ரசிகர்கள் இவருடைய இன்னொரு முகத்தை பார்த்து இவரா அவர் என்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

உண்மையை சொல்லலாமே
தற்போது ஒரு சில நாட்களாக பாவாடை தாவணியில் விஜே தீபிகாவும், லுங்கியை மடிச்சு கட்டி கிராமத்து கெட்டப்பில் சரவணன் எடுத்த பல ரீல்ஸ் வீடியோக்கள் வலம் வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்ததும் ரசிகர்கள் உங்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் மட்டுமல்லாமல் கெமிஸ்ட்ரி சூப்பராக செட்டாகிறது. அதனால் இருவரும் ஜோடியாக சீரியலில் நடித்தால் நன்றாக இருக்கும். மீண்டும் தீபிகா பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு வரவேண்டும் என்றெல்லாம் தங்களுடைய அன்பை கமெண்டுகளில் காட்டி வருகிறார்கள். ரசிகர்கள் என்னதான் தோண்டி தோண்டி தோண்டி கேள்வி கேட்டாலும் அதற்கு வாய் திறக்காத தீபிகா, தன்னுடைய வீடியோவிற்கு கேப்ஷன் மட்டும் ரசிகர்களை குழப்பும் வகையில் மீண்டும் மீண்டும் வைத்து வருகிறார். தற்போதைய வீடியோவில் கூட மரியான் பனிமலர் என்ற பெயரை வைத்து அதற்கு ஹாட்டின் எல்லாம் பறக்க விட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications