வீடு சிறுசு தான் ஆனால் மனசு பெருசு.. விஜே தீபிகாவுக்கு வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள்
சென்னை: தொகுப்பாளராக அறிமுகமான விஜே தீபிகா பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலமாக பலருக்கும் அறிமுகமாகி இருந்தார். அவர் தற்போது தன்னுடைய புது வீட்டைப் பற்றிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
விஜே தீபிகா என்னதான் நான் ஒரு நடிகையாக இருந்தாலும் தான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் தற்போது அவருடைய நிலைமையை பார்த்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கிராமத்து பின்னணியை கொண்ட விஜே தீபிகா தற்போது எளிமையாக கட்டி இருக்கும் வீட்டை பார்த்து ரசிகர்கள் பலர் மேலும் சிறப்பாக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

திருநெல்வேலி பொண்ணு
திருநெல்வேலியின் அருகில் சிறு கிராமத்தை சேர்ந்த வி ஜே தீபிகா சிறுவயதிலிருந்தே தொகுப்பாளராகவும், நடிகையாகவும் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தாராம். ஆனால் வீட்டில் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் தன்னுடைய ஆசையை அப்படியே மூடி வைத்திருந்தாராம். ஆனால் அவருடைய காலேஜில் பரியேறும் பெருமாள் திரைப்படம் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கயல் ஆனந்தியின் தோழியாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆடிசன் நடைபெற்றிருக்கிறது. அப்போது அதில் தீபிகாவும் வீட்டிற்கு தெரியாமல் கலந்து கொண்டிருந்தாராம். அதற்குப் பிறகு அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி கேட்டதற்கு ஆரம்பத்தில் யாருமே ஒத்துக்கொள்ளவில்லையாம். அதற்கு பிறகு சரி காலேஜில் வைத்து தானே என்று அவருடைய அம்மா பச்சைக்கொடி காட்டி விட்டாராம்.

தொகுப்பாளராக அறிமுகம்
முதல் முதலாக பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஒரு சில சீன்களில் இவர் நடித்திருந்தாலும் இந்த திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கு விஜே ஆக தான் அதிக அளவில் ஆசை இருந்ததாம். அதற்கு பிறகு சென்னைக்கு படிக்க வந்த தீபிகா பல சேனல்களுக்கு ஆடிஷன் சென்று இருந்தாராம். ஆரம்பத்தில் தொகுப்பாளராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கு ஆடை, அணிகலன்கள் எதுவுமே இவரிடம் இல்லாததால் போகுமிடமெல்லாம் இவருக்கு டாட்டா சொல்லி தான் அனுப்பி வைத்தார்களாம். அதற்குப் பிறகு ஒரு தனியார் தொலைக்காட்சிகள் இவருக்கு தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்து இருந்ததாம்.

பாண்டியன் ஸ்டோர் ஐஸ்வர்யா
தொகுப்பாளராக இருக்கும் போது இவர் சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க தீபிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் இவர் நடித்து அனைவருடைய மனதையும் கவர்ந்து விட்டார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் ஜோடியாக தீபிகா ஐஸ்வர்யா கேரக்டரில் அறிமுகம் ஆனதும் இவருடைய முகத்தில் அதிகமான முகப்பருக்கள் இருக்கிறது என்று பல நெகட்டிவ் கருத்துகள் இவருக்கு எதிராக வந்து கொண்டே இருந்தது. இதனாலே இவரை சீரியல் தரப்பில் இருந்து முகத்தை சரி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி கொண்டே இருந்தார்களாம். ஆனால் இவர் தன்னால் முடியவில்லை என்று இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதற்குப் பிறகு கலர்ஸ் தமிழில் ஒரு சில சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அழகான வீடு
என்னதான் இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தான் செய்யும் சின்ன சின்ன செயல்களை கூட வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார். அந்த மாதிரி தான் தற்போது இவர் புதியதாக கட்டியிருக்கும் வீட்டை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். அந்த வீடு சின்ன வீடாக இருந்தாலும் அந்த வீட்டை தீபிகா தன்னுடைய அம்மா அப்பாவின் ஆசைக்கு ஏற்ப கட்டிக் கொடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இவர் ஒவ்வொரு இடத்திலும் அவருடைய அம்மா மற்றும் அப்பாவின் மீது இருக்கும் பாசத்தையும் அவர்களின் கனவுகளையும் அந்த வீடியோவில் விவரித்து வருவதை பார்த்து ரசிகர்கள் பலர், நீங்கள் கட்டியிருக்கும் வீடு சிறுசு தான் ஆனால் உங்களுடைய மனசு பெருசு. அம்மா அப்பாவை எப்போதும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். என்றெல்லாம் இவருக்கு வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications