உங்களுக்கு ஆங்கரிங் தெரியுமா? சினேகா கேட்ட கேள்வி.. மணிமேகலை சொன்ன பஞ்ச்.. சிக்கிய பாபா மாஸ்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவரிடம் சினேகா உங்களுக்கு ஆங்கரிங் தெரியுமா? என்று கேட்க, அதற்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை மணிமேகலை சொல்லி இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவரான மணிமேகலை ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கி அதற்கு பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பல சீசன்களாக கலக்கிக் கொண்டிருந்தார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

அசாத்திய திறமை

தனக்கு என்ன கேரக்டர் கொடுத்தாலும் அதை அசத்திவிடும் மணிமேகலைக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. வேஷ்டி கட்ட வேண்டும் என்று சொன்னால் உடனே அடுத்த வாரம் வேஷ்டியோடு வந்துவிடுவார். அதுபோல மீசை வரைய வேண்டும் என்று சொன்னால் அதற்கும் சரி என்று அந்த கெட்டப்பில் கலக்கி விடுவார்.

குக் வித் கோமாளி தொகுப்பாளினி

இப்படி எந்த கெட்டப் கொடுத்தாலும் அதில் சிறப்பாக செய்து வந்த மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று வெளியேறி இருந்தார். அதோடு நான் இந்த நிகழ்ச்சியிலும் இனி தொடர மாட்டேன் என்று அறிவித்திருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதை தொடர்ந்து ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

மணிமேகலை திடீர் விலகல்

ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில் கடைசியில் நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். அப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பு ஏற்படுத்திவிட்டது.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

மணிமேகலை குற்றச்சாட்டு

அதாவது இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். நான் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் அதை செய்யவிடாமல் தடுக்கிறார். எனக்கு சுய கௌரவம் முக்கியம். அதனால் நான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்திருந்தார்.

பதில் கொடுக்காத பிரியங்கா

அதனால் மணிமேகலை ரசிகர்கள் பிரியங்காவை திட்டி வந்தனர். அந்த நேரத்தில் மணிமேகலையின் குற்றச்சாட்டுக்கு பிரியங்கா எந்த பதிவுகளும் வெளியிடவில்லை. டைட்டில் வின்னரான பிரியங்கா சுற்றுலா போகிறேன் என்று ஒரு போஸ்ட் போட்டுவிட்டு கிளம்பி விட்டார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் மணிமேகலை குறித்து எந்த இடத்திலும் பிரியங்கா பேசவில்லை. ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் பிரியங்காவிற்காக மணிமேகலையை திட்டி போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட்

இந்த நிலையில் ஜீ தமிழில் வரும் சனிக்கிழமை தொடங்க இருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் சீசன் 3ன் தொகுப்பாளினியாக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த நிகழ்ச்சியை இரண்டு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த விஜயிடம் இரண்டு நபர்கள் வந்து எங்களுடைய தலைவி வரப் போறாங்க அவங்கள பத்தி சும்மா சொன்னா வரமாட்டாங்க பில்டப் பண்ணி சொல்லணும் என்று சொல்ல அதற்கு பாபா பாஸ்கர் வேண்டாம்பா வேண்டாம் அப்பா அந்த தலைவி எங்களுக்கு வேண்டாம்பா வெளியே போங்க என்று சொல்கிறார்கள்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

மணிமேகலை இப்போ தலைவி

பிறகு அந்த நபர்கள் எம்எம் வாங்க என்று கூப்பிட கையில் சுத்தியலோடு மணிமேகலை என்ட்ரி கொடுக்கிறார். அப்போது விஜய் தலைவி வர போறாங்கன்னு சொன்னீங்க இங்க ஆணி அடிக்க யாரையோ கூட்டிட்டு வந்து இருக்காங்கப்பா என்று கலாய்க்கிறார். அதற்கு மணிமேகலை நான் ஆங்கரிங் பண்ண வந்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

சினேகா கேட்ட கேள்வி

அப்போது சினேகா ஒரு சின்ன கொஸ்டின் என்று சொன்னதும் மணிமேகலை நீங்க ஒரு பெரிய செலிபிரட்டி கிட்ட பேசுறமேன்னு பதட்டப்பட வேண்டாம், கூச்சப்பட வேண்டாம் என்று சொல்ல.. அதற்கு சினேகா உங்களுக்கு ஆங்கரிங் பற்றி என்ன தெரியும்? என்று சொல்ல உடனே கோபமான மணிமேகலை விஜய் என்று விஜயை அடிக்கப் போக விஜய் நியாயமான கேள்வி தானே என்று சொல்கிறார்.

மணிமேகலையின் பஞ்ச் டயலாக்

அப்போது பாபா பாஸ்கர் இந்த ஸ்டேஜ் எத்தனை டான்சரை வாழ வைத்திருக்கிறது தெரியுமா? என்று கேட்க அதற்கு மணிமேகலை நான் ஒரு டான்ஸரை கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுத்திருக்கேன் அது உங்களுக்கு தெரியுமா? என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மற்றும் மணிமேகலையின் காம்போ பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது. அதே காம்போ இப்போது ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தொடர்கிறது இந்த நிகழ்ச்சி இனி களைகட்டுமா? இல்லையா? உங்க கருத்து என்ன? பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+