தல தீபாவளி மட்டுமல்ல ரொம்ப ஸ்பெஷலான நாள்... ராஜா ராணி சீரியல் கதாநாயகனின் மகிழ்ச்சியான பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் கதாநாயகன் சித்து ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரை நடிகையான ஸ்ரேயா அச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சித்து, மனைவியோடு தல தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஹனிமூன் சென்றிருந்த இந்த ஜோடி தற்போது மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம்
தற்போது தான் தீபாவளி பண்டிகையை முடிவடைந்து இருக்கிறது .ஆனாலும் இன்னும் ஒரு சிலர் அந்த பண்டிகையின் மகிழ்ச்சியிலிருந்து வெளியே வராமல் இருந்து வருகின்றனர் .ஒரு சிலர் ஐயோ கையில் வைத்திருந்த பணமெல்லாம் செலவழிந்து விட்டதே என்று சிறிது வருத்தத்துடன் இருந்து வருகின்றனர்.தற்போது சின்னத்திரை தம்பதிகளான ஸ்ரேயா அச்சன் மற்றும் சித்து தாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடிய தீபாவளியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்கள். பிறந்தநாள் திருமண நாள்கள் போன்றவற்றை சிறப்பாக கொண்டாடி வரும் இந்த ஜோடி இப்போது தீபாவளியை வெகு விமர்சனமாக கொண்டாடி இருக்கின்றனர்.

திருமணத்தில் முடிவான திருமணம்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் கதாநாயகனாக நடித்த சித்து அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஸ்ரேயாவை திருமணம் சீரியல் முடிவடைந்ததும் திருமணம் செய்து கொண்டார். இந்த சீரியலில் இவர்கள் இருவரும் நடிக்கும்போது இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி தாறுமாறாக இருக்கிறது. அதனால் இவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தொடர்ந்து இவர்களுக்கு கருத்துக்களை அனுப்பி இவர்கள் மனதிற்குள்ளும் காதல் பூ பூக்க வைத்து விட்டனர். இருவரும் காதலித்து, தங்கள் காதலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஒரு சில மாதங்கள் கழித்து திருமணமும் செய்து கொண்டனர்.

எளிமையான திருமணம்
இந்த ஜோடி இருவரும் காதலிக்கும் போதே ஒருவருடைய பிறந்த நாளை மற்றொருவர் வெகு விமர்சனமாக கொண்டாடி மகிழ்ந்து வருவார்கள். அதனால் இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பிரமாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்து இருந்தனர். ஆனால் திடீரென்று திருமணத்தை அறிவித்த ஒரு சில நாட்களில் திருமணத்தை எளிமையாக முடித்து விட்டனர். தங்களுடைய மனதிற்கு பிடித்த நடிகர்கள் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு மேலும் வியப்பை கொடுத்தது. வாழ்த்துக்களை பலரும் கூறி வந்தனர்

ஸ்பெஷலான நாள்
திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாகவும், சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார். சீரியலில் இவர்கள் இரண்டு பேரும் பிஸியாக இருந்தாலும், கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி சுற்றுலா கிளம்பி விடுகிறார்கள். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். இந்த வகையில் இவர்களுக்கு தற்போது தல தீபாவளி அதனை இருவரும் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கின்றனர் .இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதில் சித்து எங்களுக்கு தல தீபாவளி மட்டுமல்லாமல் ஒரு ஸ்பெஷலான நாளும் என்று கூறி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் விரைவில் உங்களுடைய வாரிசு வரப்போகிறதா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அதனை குறித்து இவர்கள் இருவரும் எந்த பதிலையும் கொடுக்கவில்லை.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications