நடிகர் ராஜ்கிரணின் மனைவி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம்... இரு தரப்பினருக்கும் போலீஸ் அறிவுரை
சென்னை: சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நடிகர் ராஜ்கிரணின் மனைவி மற்றும் அவருடைய மகள் பிரச்சனைக்கு காவல்துறை அறிவுரை கூறி அனுப்பி இருக்கிறது.
இருதரப்பிலும் அடிக்கடி மாறி மாறி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் காவல்துறையின் அறிவுரை இனி எடுபடுமா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு
சின்னத்திரை நடிகர் ஆன முனீஸ் ராஜா நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதல் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறி இருக்கிறது. இருவரும் வெவ்வேறு மதமாக இருந்ததால் இர வீட்டாரும் ஆரம்பத்தில் சம்மதிக்காத நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து இருந்தனர். பின்பு முனீஸ் ராஜாவின் வீட்டினர் இவர்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் .இந்த நிலையில் ராஜ்கிரண் தன்னுடைய வளர்ப்பு மகளை சின்னத்திரை நடிகர் ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறார். அவர் தன்னிடம் இருக்கும் நகை பணத்திற்காக தான் இப்படி ஒரு காதல் நாடகம் நடத்தி இருக்கிறார். என்றும் தன்னுடைய பெயரை கெடுக்கும் விதமாக முனீஸ் ராஜா இப்படி செய்திருக்கிறார் என்று facebook பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ராஜ்கிரணின் முடிவு
அதுமட்டுமல்லாமல் இனி எனக்கும் என்னுடைய வளர்ப்பு மகள் பிரியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் என்னுடைய பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஒரு சில மாதங்கள் கடந்து பிரியா தன்னுடைய அம்மாவிடம் தனக்கு சேர வேண்டிய நகைகளை கேட்டு இருந்தாராம். அதனைக் குறித்து பிரியாவின் அம்மாவான பத்மஜா இப்போது பிரியா மற்றும் முனீஸ் ராஜாவின் குடும்பத்தின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். தன்னுடைய வீட்டில் இருந்து 17 பவுன் நகைகளையும் தன்னுடைய குடும்ப சொத்தான தாலியையும் பிரியா எடுத்து சென்று விட்டார் என்று அந்த கம்ப்ளைன்டில் இருக்கிறதாம்.

இரண்டாவது மனைவியின் மகள்
முனீஸ் ராஜாவின் மனைவியான பிரியா ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆவார். வளர்ப்பு மகள் என்றால் ராஜ்கிரணின் இரண்டாவது மனைவியின் மகள்.திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த இளங்கோவன் பத்ம ஜோதி தம்பதியரின் மகள் பிரியா கடந்த 2014ஆம் ஆண்டு இளங்கோவனை பிரிந்த பத்மஜோதி நடிகர் ராஜ்கிரணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பத்ம ஜோதியை கதீஜா என்றும் வளர்ப்பு மகளான பிரியாவை ஜீனத்பிரியா என்றும் அழைத்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு முனீஸ் ராஜாவோடு திருமணத்தை செய்து கொண்டு வீட்டை விட்டு பிரியா வெளியேறி இருக்கிறார் இந்த நிலையில் பிரியாவோடு தான் அவருடைய சொந்த அப்பா இளங்கோவன் இருந்து வருகிறாராம்.

புகார் மனு
இந்த நிலையில் தற்போது ராஜ்கிரண் இரண்டாவது மனைவி கதீஜா சென்னையில் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார்.இந்நிலையில் ராஜ்கிரண், கதீஜா ஆகியோர் குறித்து ஜீனத்பிரியா சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கதீஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.இந்த புகாரை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழியாக முசிறி துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் கமிஷ்னர் அனுப்பினார். இதனையடுத்து துணை சூப்பிரண்டு யாஸ்மின் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவிரி முன்னிலையில் ஜீனத் பிரியாவிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினார்.

போலீஸ் அறிவுரை
இதை தொடர்ந்து இருதரப்பினரும் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக துணை சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன் பேரில் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் கதிஜா, ஜீனத் பிரியா உள்ளிட்ட இரு தரப்பினரும் துணை சூப்பிரண்டு யாஸ்மின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இரு தரப்பினரும் சமூக வலைத்தளங்கள் வழியாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வீடியோ, ஆடியோ வெளியிடக்கூடாது. இரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டால் போலீசார் மற்றும் நீதிமன்ற வாயிலாக தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு போலீசாரின் அறிவுரைப்படி செயல்படுவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். இந்த சம்பவம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications