14 வயதில் தாலியோடு படித்த எதிர்நீச்சல் பட்டம்மாள்.. நிஜ வாழ்க்கையில் இத்தனை தடைகளா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் அப்பத்தாவாக வரும் பாம்பே ஞானம் அவருடைய சிறு வயதிலிருந்து பட்ட கஷ்டங்களை முதல் முறையாக கூறி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டிவரும் நிலையில் இவருடைய நிஜ வாழ்க்கையிலும் இதே நிலைமையில் தான் இருந்து வந்து இருக்கிறாராம்

எதிர்நீச்சல் பட்டம்மாள் எம் ஏ
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர் அந்த வகையில் தற்போது பலராலும் பாராட்டப்படும் ஒரு கேரக்டராக பட்டமாள் அப்பத்தா இருந்து வருகிறார். இதுவரைக்கும் அமைதியாகவே கையில் புத்தகத்தோடு வளம் வந்து கொண்டிருந்த அப்பத்தா முதல்முறையாக தான் பட்டம்மாள் எம் ஏ என்று மாசாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் .வீட்டை விட்டு வெளியேறிய ஜனனியை வீட்டிற்குள்ளே கூட்டி வந்து தனக்கு இந்த சொத்தில் 40% ஷேர் இருக்கிறது என அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தி இருக்கிறார். அதற்கு பிறகு ரசிகர்கள் பலரும் அவர் யார் என்று அதிகமாக தேடி வருகிறார்கள். இதுவரைக்கும் ஆட்டம் போட்டு அனைவரையும் மிரட்டி கொண்டிருந்த ஆதி குணசேகரனின் ஆட்டத்தை அடக்கி விட்டாரே என்று ஒரு பக்கம் பட்டம்மாள் அப்பத்தாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

14 வயதில் திருமணம்
பட்டம்மாள் அப்பத்தாவின் நிஜ பெயர் பாம்பே ஞானம் தான் இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு எதிர்நீச்சல் சீரியல் ரொம்பவே ஸ்பெஷல் ஆனது என்று கூறி இருக்கிறார். காரணம் தன்னுடைய நிஜ வாழ்க்கையை அப்படியே இந்த சீரியலில் ஜனனி பிரதிபலித்து வருவதாகவும் கூறி இருக்கிறார். தன்னுடைய 14 வது வயதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இவருக்கு திருமணம் முடிந்திருக்கிறது. பள்ளிக்கு சீருடை அணிந்து அதில் தாலி கயிற்றோடு தான் இவர் செல்வாராம் .இவருடைய கணவருக்கும் 10 வயது வித்தியாசமாக இருந்திருக்கிறது. கணவர் அதிகமாக படித்திருந்ததால் ஒரு ஹெட் மாஸ்டர் போல இவரிடம் நடந்து கொள்வாராம்.

சாமர்த்தியமான முயற்சி
இவருக்குள் பல திறமைகள் இருந்தாலும் இவருடைய நாற்பது வயதிற்கு பிறகு தான் அவருடைய ஆசைகள் நிறைவேற தொடங்கியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு பல சோதனைகளைத் தாண்டி இவர் கணவரையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு நாடகத் தொழிலை செய்து வந்திருக்கிறார். பெண்கள் திறமை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே பெண்களை வைத்து ஒரு நாடக கம்பெனி தொடங்கி இருக்கிறார். அதில் ஒரு வீட்டில் ஒருவர் நடிக்கிறார் என்றால் அவருடைய மாமியார் என முக்கியமான ஒரு சிலரையும் சேர்த்து இழுத்து விடுவாராம். அப்படி என்றால் தான் அந்த பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்பதற்காக இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறாராம். சாமர்த்தியமாக தன்னுடைய முயற்சியின் மூலமாக பலருடைய கனவுகளை நிறைவேற்றி வந்திருக்கிறாராம்.

நிஜத்தைப் போலவே சீரியலிலும்
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவாக அறிமுகமான பாம்பே ஞானம் எதிர்நீச்சல் சீரியலின் கதை இவரை வெகுவாக பிடித்து விட்டதாம் .அதுவும் இந்த சீரியலின் கதாநாயகி ஜனனியின் கதையும் தன்னுடைய கதையும் ஒன்றாகவே இருப்பதாகவே இவர் பல முறை பீல் பண்ணி இருக்கிறாராம். தன்னுடைய கணவரின் சப்போர்ட்டினால்தான் இவர் நாடகத்திலும் அதற்குப் பிறகு நடிப்பிலும் தனது திறமையை நிரூபிக்க தொடங்கினாராம். ஆரம்பத்தில் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் கணவர் இவருக்கு உறுதுணையாக இருந்த நிலையில் அவருடைய கணவரின் இறப்பு வெகுளவில் அவரை பாதித்த தாம். கணவரின் இறப்புக்கு பிறகு இனி வாழ்க்கையே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இதற்கெல்லாம் சோர்ந்து போகக்கூடாது என புத்தகத்தை கையில் எடுத்து புத்தகத்தை நண்பராக்கி கொண்டு தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதைத்தான் இந்த சீரியலிலும் இவர் செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications