இனி அப்படி பேசினா வெளியே அனுப்பிவிடுவேன்... "அந்த” போட்டியாளருக்கு எச்சரிக்கை விடுத்த பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 96 வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் எவிக்டட் போட்டியாளர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
வெளியே சென்று விட்டு மீண்டும் வந்த போட்டியாளர்கள் செய்யும் செயல்களை பார்த்து கடுப்பான பிக் பாஸ் அவர்களை கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

மீண்டும் வந்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவாணன் 7 போட்டியாளர்கள் மட்டும்தான் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இந்த சீசனில் ஆரம்பத்தில் விளையாடி பின்பு எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் உள்ளே வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் மணிகண்டன், தனலட்சுமி, மெட்டிஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து, அசல் கோலார், நிவாஷினி, குயின்சி போன்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பலரும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக சில டாக்ஸ்குகளை விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸில் எச்சரிக்கை
முதல் நாளில் கதிரவன் ஒரு நாள் பிக்பாஸாக இருந்து அனைவரிடமும் பல வேலைகளை செய்ய சொல்லி இருந்தார். அப்போதுதான் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். அதற்கு முன்னரே தனலட்சுமி, அசல் கோலாரும் வந்திருந்தனர் .இந்த நிலையில் மணிகண்டன் அசீமை அழைத்து பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் ரசிகர்கள் அவருக்காக வீடியோ எடிட் செய்து அவரை எவ்வாறு ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும் அசீம் முன்பு போல விளையாடி இருந்தால் போதும் என்று அசீம் செல்வாக்கு குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிகண்டனை வெளிப்புற தகவல்களை கசிய வைக்க வேண்டாம் என்று பிக் பாஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தனலட்சுமியின் செயல்பாடு
அது மட்டுமில்லாமல் அதற்கு முன்பு வந்த தனலட்சுமி ஆரம்பத்தில் அசீம் வெளியே நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு அசீமுடைய கையை தர தரவென இழுத்து வெளியே வந்து கேட்டை திறங்க இவர் வெளியே சென்று நிலவரத்தை பார்க்க வேண்டுமாம் என்று கலாய்த்தார். அதை பிக் பாஸ் பாராட்டினார். ஆனால் சில மணி நேரம் கழித்து வெளியில் நடக்கும் பல விஷயங்களை கூறி இருக்கிறார். தனலட்சுமி மட்டுமல்லாமல் ராபர்ட் மாஸ்டரும் அசீம் வெளியே 91 வது நாளில் நின்று வானத்தைப் பார்த்ததை ரசிகர்கள் எப்படி எடிட் செய்து அனுப்பினார்கள் என்று இருவரும் சக போட்டியாளர்களிடம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இறுதியான எச்சரிக்கை
அப்போது உள்ளே வந்த மணிகண்டன் தனலட்சுமி வாயை மூடி இருக்கும்படி கூறினார். ஆனாலும் தனலட்சுமி தொடர்ந்து சில விஷயங்களை கூறிக்கொண்டு இருந்தார். இதனால் பொறுமை இழந்த பிக்பாஸ் உள்ளே வந்த போட்டியாளர்களிடம் நீங்கள் எந்த காரணம் கொண்டும் யார் கேட்டாலும் வெளியில் நடக்கும் விஷயத்தை போட்டியாளர்களுக்கு கூறக்கூடாது எனவும் அப்படி கூறினால் இனி சொல்லமாட்டேன் முன்பக்க கதவை திறந்து விடுவேன் என்று இறுதியாக அதுவும் கடுமையான முறையில் எச்சரித்து இருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications