அப்போ இருந்தே "அந்த” பிரச்சனையை அனுபவித்து வருகிறார்.. விக்ரமனின் வேதனைகளை பகிர்ந்த பெற்றோர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விக்ரமனின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை பற்றி அவருடைய பெற்றோர் பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலரும் விக்ரமனின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டிருக்கும் போது இதுவெல்லாம் விக்ரமனுக்கு புதியது அல்ல .ஏற்கனவே சொந்த வாழ்க்கையில் இதைவிட பல கஷ்டங்களை அனுபவித்து விட்டார் என்று வேதனையோடு அவருடைய அம்மா பேசியிருக்கிறார்.

படிப்பில் கெட்டிக்காரர்

படிப்பில் கெட்டிக்காரர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான விக்ரமன் ஒரு ஜர்னலிஸ்ட் என்பது பலருக்கும் தெரியும் வீசிக கட்சியின் இருப்பவர் என்பதும் அனைவருக்கும் தெரியும் ஆனால் இவர் அதிகமாக கூச்ச சுபாவம் கொண்டவர் தானாம். வீட்டில் அமைதியாக தான் இருப்பாராம். யாரிடமும் டக்கென்று பழகி விடாதாவராக தான் இருந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சிறுவயதிலிருந்தே படிப்பில் கட்டிகாரராக இருந்திருக்கிறார். அதனால் பள்ளியில் இருக்கும் போதே பல மாணவர்களால் இவர் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறாராம். நன்றாக படிப்பதால் இவரை சிலர் ஓரம் தள்ளியே வைப்பார்களாம் அப்போது வேதனையோடு பல முறை அம்மாவிடம் கூறி இருக்கிறாராம்.

குறும்படம் வெளியிட்ட ரசிகர்கள்

குறும்படம் வெளியிட்ட ரசிகர்கள்

இவர் நன்றாக படிப்பதால் பள்ளியில் மாணவர்கள் ஒரு சிலர் இவரை அவமானப்படுத்தியதால் நான் இனி அந்த பள்ளிக்கு செல்லவில்லை என்று கூட அவருடைய அம்மாவிடம் கூறி அழுது இருக்கிறாராம். அதே நிலைதான் இப்போதும் கூட பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் விக்ரமனுக்கு நடந்து கொண்டிருக்கிறது. விக்ரமனின் செயலை கமல் பாராட்டுவதாலே பலர் அவர் மீது கோபப்பட்டு இவரை அவமானப்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர் என்று வேதனையோடு கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நேற்று எபிசோடில் கூட விக்ரமனின் மீது ஜனனி தப்பான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அதை குறித்து ரசிகர்கள் பலரும் விக்ரமன் பேசிய பழைய வீடியோவை பகிர்ந்து குறும்படங்களாக பகிர்ந்து விக்ரமன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இந்த ஜனனிதான் இப்படி சொல்கிறார் என்று நிரூபித்திருக்கின்றனர்.

அதிகமான மதிப்பெண்கள்

அதிகமான மதிப்பெண்கள்

மட்டுமல்லாமல் விக்ரமன் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது 1200 மதிப்பெண்களுக்கு 1194 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக வெற்றி பெற்றிருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பிலும் அவர் முதல் மதிப்பெண் பெற்று பள்ளியில் மெடல்களில் வாங்கியிருக்கிறாராம். படிக்கும்போதே படிப்பது மட்டுமல்லாமல் எழுதுவதிலும் அதிகமான ஆர்வத்தோடு இருப்பாராம். காலேஜில் படிக்கும் போதே இவர் அதே போலத்தான் நன்றாக படித்துக் கொண்டு இருக்கும்போது சக மாணவர்களின் தொந்தரவினால் அப்போது நான் படிக்க போக மாட்டேன் என்று படிப்பை நிறுத்திவிட்டு தான் நடிக்க செல்ல போகிறேன் என்று முடிவெடுத்து இருந்தாராம்.

சொல்ல விடாத கதை

சொல்ல விடாத கதை

அந்த கதை என்னவென்றால் 11ஆம் வகுப்பு படிக்கும் போது விக்ரமனுக்கு மிலிட்டரியில் சேர வேண்டும் என்பது ரொம்ப ஆசையாக இருந்திருக்கிறது. அதை அவருடைய அம்மாவிடம் தெரிவித்த போது அவருடைய அம்மா அதுவெல்லாம் நமக்கு செட்டாகாது நான் உன்னை பிரிந்து இருந்து விடமாட்டேன் என்று கூறியிருந்தாராம். அதனால் தான் அதைத்தான் அங்கே சொல்ல வந்திருப்பார் என்று கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இதுவரைக்கும் விக்ரமனின் உற்ற நண்பன் என்று யாருமே இல்லை இதை பார்க்கும் போதே என்னுடைய பையன் எவ்வளவு சரியாக இருந்தாலும் வெளியிடங்களில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று தங்களுடைய வேதனைகளை விக்ரமனின் பெற்றோர் பகிர்ந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+