பிக் பாஸ் ராமுக்குள் இத்தனை சோகங்களா? "இதய பிரச்சனை” இவருடைய அமைதிக்கு காரணம் இருக்காம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அனைவரையும் விட உயரமான மனிதராக இருக்கும் ராமை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

படிப்பில் கெட்டிக்காரராக இருக்கும் இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது 1200 மதிப்பெண்களுக்கு 1187 மதிப்பெண்கள் பெற்ற இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

உயரமான மனிதன்

உயரமான மனிதன்

பிக் பாஸில் இருக்கும் ராம் பற்றி ரசிகர்கள் பலரும் அவர் எந்த விளையாட்டிலும் ஈடு கொடுக்க மாட்டேன் என்கிறார். பிரச்சனைகளில் தலையிடாமல் அமைதியாகவே இருக்கிறார் என்று போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இவருடைய உண்மையான குணமும் இதுவாகத்தான் இருக்கிறதாம். ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே இவர் அமைதியாக தான் இருக்கிறாராம். இவருடைய உருவத்தைப் பார்த்து பலரும் மிரண்டு போய் இருந்தாலும் இவருடைய கேரக்டரை பார்த்தால் அவரா இவர்? என்று நினைத்து விடுவார்களாம் .

ஹாட் ப்ராப்ளம்

ஹாட் ப்ராப்ளம்

ராமின் சொந்த ஊர் சேலம் தானாம் இவருக்கு ஒரு அண்ணனும் இருக்கிறாராம். இவருடைய அப்பாவின் பெயர் தான் ராமசாமியாம். இவருடைய நெருங்கிய நண்பர்கள் இவருடைய குடும்பத்தினர் தானாம். இவருடைய அப்பா, தாத்தா ,அம்மா என குடும்பத்தினரிடம் தான் இவர் அதிகமாக நெருங்கி பழகி வருவாராம். இதை மாற்றிக் கொள்வதற்காகத்தான் இவர் பிக் பாஸ் வந்திருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் உள்ளே யாரிடமும் அதிகமாக இவர் பழகவில்லை என்று பலரும் கூறி வந்தாலும் இவர் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் இவருடைய தாத்தா தானம். சிறுவயதிலே இவருக்கு ஹார்ட் ப்ராப்ளம் வந்திருக்கிறது. இவருடைய தாத்தா ஒரு டாக்டராக இருப்பதால் எந்த டாக்டராலும் சரி செய்ய முடியாத இவருடைய ஹாட் பிராப்ளத்தை சரி செய்திருந்தாராம்.

பத்து வயதில் கிரிக்கெட்

பத்து வயதில் கிரிக்கெட்

அவருடைய தாத்தா உடல்நிலை சரி இல்லாமல் இருந்த நேரத்திலும் ராம் தான் கூடவே இருந்து பார்த்து வந்ததாராம். படிப்பில் கெட்டிக்காரராக இருந்து வந்திருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும், இவர் இவர் சினிமாவுக்கு வருவதற்கான காரணம் என்னவென்றே குடும்பத்தினர் தெரியாமல் தான் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர் பத்தாம் வயதில் கிரிக்கெட்டில் அதிகமாக ஆர்வம் இருப்பதால் கிரிக்கெட் பிளேயராக இருந்திருக்கிறார் .இவருடைய அப்பாவும் பிசினஸ்மேனாக இருந்தாலும் அவரும் ஆரம்பத்தில் ஒரு கிரிக்கெட் விளையாடுவதில் ஆரம்பமாக இருந்ததால் இவருடைய குடும்பத்தினர் விளையாட்டுக்கு ஆதரவு கொடுத்து வந்திருக்கின்றனர்.

மாறிப்போகும் ஆசைகள்

மாறிப்போகும் ஆசைகள்

இந்த நிலையில் 15 வது வயதில் கிரிக்கெட் பிடிக்கவில்லை டென்னிஸ் பிடிக்கிறது என்று சொல்லி இருக்கிறார். சரி ஓகே அதுவாது இருக்கட்டும் என குடும்பத்தினர் சம்மதம் சொன்ன ஒரு சில வருடங்களில் அதுவும் பிடிக்கவில்லை எனக்கு ஸ்விம்மிங் பிடிக்கிறது என அடுத்த ஆசையை சொல்லிவிட்டாராம். சரி அதில் சிறப்பாக வந்தால் ஓகே என்று குடும்பத்தினர் ஓகே சொன்ன ஒரு சில வருடங்களில் அதையும் நன்றாக கற்று விட்டு விட்டாராம். இப்படி ஒவ்வொன்றாக இவர் கற்றுக்கொண்டு அதற்குப் பிறகு அதை விட்டுவிட்ட நிலையில் இப்போது இவர் நன்றாக ஓவியம் வரைவாராம். வீட்டிலும் தனியாகவே தான் எப்போதும் இருப்பாராம். அமைதியாகவே வீட்டில் இருந்து கொண்டு அனைவரிடமும் பாசமாக இருப்பாராம். தெருவில் போகும் ஆடு மாடுகளை எல்லாம் உணவு வைத்து அனுப்பி வைப்பாராம் .காலேஜ் படித்து முடித்த பிறகு இவர் உயரமாக இருப்பதையும் ஒல்லியாக இருப்பதையும் பலர் கிண்டல் செய்திருக்கிறார்களாம். அப்போதுதான் இவர் மாடலிங் கற்றுக்கொண்டு மாடலின் மூலமாக தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்று தன்னை மெருகேற்றிக் கொள்வதற்காக ஜிம் சென்று அதிகமாக வொர்க் அவுட் எடுத்து தன்னுடைய உடலை அவருக்கு பிடித்த மாதிரி மாற்றி இருக்கிறாராம்.

இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்

இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்

மாடலின் மூலமாகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ராமுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும் இவர் இதற்கு முன்பு வீட்டினரால் செய்து கொடுத்த பல வேலைகளை உதறிவிட்டு வந்துவிட்டதால் இவருடைய அம்மா இண்ணமும் இவர் மீது வருத்தத்தில்தான் இருந்து வருகிறாராம் .ஆரம்பத்தில் பிக் பாஸில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று இவருடைய பாட்டி எல்லாம் கூறிக் கொண்டிருந்த நிலையில், இவர் செலக்ட் ஆனதும் அவர்கள் எல்லாம் வாழ்த்தி அனுப்பி இருக்கின்றனர். ஆனாலும் இவர் எண்ணமும் ஓபன் ஆக விளையாட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்களும் அதைத்தான் கூறி வருகின்றனர் .இந்த நிலையில் இந்த வார வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இவர் இருப்பதால் தொடர்ந்து இவர் விளையாடுவாரா? அல்லது வெளியேறுவாரா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+