வெண்பாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி.. பாரதியின் நிலைமை தான் கடைசியில் பரிதாபமாக முடிச்சிட்டாங்க
சென்னை: பாரதி கண்ணம்மா முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிய இருக்கின்றது.
இரண்டாவது பாகம் தொடர இருப்பதால் முதல் பாகம் எப்படி முடியப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.
கடைசியில் வெண்பாவிற்கு ரோகித்தோடு திருமணம் நடைபெற்றாலும் பாரதியை குடும்பத்தினர் அனைவரும் வெறுத்து ஒதுக்கியதால் அவருடைய நிலைமை தான் பரிதாபமாக இருக்கப் போகிறது.

வெண்பாவின் சூழ்ச்சிகளை தெரிந்து கொண்ட பாரதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் முதல் பகுதி முடிய இருக்கும் நிலையில் பல உண்மைகள் அனைவருக்கும் தெரிய வருகிறது. குறிப்பாக பாரதிக்கு வெண்பாவை பற்றியும் அவருடைய சூழ்ச்சிகள் எல்லாம் முழுமையாக தெரிந்து விட்டது. இந்த நிலையில் பாரதி தன்னுடைய குடும்பத்தினர் அனைவரும் வெறுத்து ஒதுக்கி விட்டதால் தனி மரமாக மாறி இருக்கிறார். டி என் ஏ டெஸ்ட் முடிவுக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் பல ட்விஸ்ட்டுகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஷர்மிளா செய்த சிறப்பான செயல்
வெண்பா அவருடைய அம்மாவின் மிரட்டலால் ரோஹித்தை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு சொத்துக்கள் எல்லாமே ரோஹித்தின் பெயரில் மாற்றி ஷர்மிளா எழுதிவைத்து விடுகிறார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த வெண்பா இனி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் நீ ,ரோஹித்தை விவாகரத்து செய்தால் உனக்கு சொத்தில் சல்லி காசு கூட எடுக்க முடியாது. ரோஹித்தோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் தான் உன்னால் இந்த சொத்தை அனுபவிக்க முடியும் என்று அதிர்ச்சியை ஷர்மிளா கடைசியில் வெண்பாவிற்கு கொடுத்து விடுகிறார்.

கண்ணம்மாவின் கறார் பேச்சு
அதே நேரத்தில் இதுவரைக்கும் பாரதி செய்த தப்புகளை எல்லாம் நான் மன்னித்து விட்டேன் ஆனால் இப்போது பாரதி செய்த தப்பை என்னால் மன்னிக்கவே முடியாது. எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டேன் என்று கண்ணம்மா கூறி இருக்கிறார். அதேபோல லட்சுமி மற்றும் ஹேமாவும் நாங்கள் இனி பாரதியை அப்பாவாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் வெளியாக இருக்கிறது. அதில் பாரதியின் குழந்தைகள் தான் ஹேமா மற்றும் லட்சுமி எனும் உண்மை அனைவருக்கும் தெரிய போகிறது. ஏற்கனவே அனைவரும் இதை நம்பி கொண்டு இருந்தாலும் பாரதி மட்டும் சந்தேகத்தில் இருந்த நிலையில் பாரதிக்கு குற்ற உணர்ச்சியில் இனி தவிக்கப் போகிறார்.

முதல் பாகம்
தன்னுடைய தப்பை எண்ணி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு பாரதி குடும்பத்தோடு சேர்ந்து விடுவது போன்று முதல் பாகம் முடிவடைந்தாலும், பாரதி தன்னை ஏமாற்றி மீண்டும் குடும்பத்தோடு சேர்ந்து விட்டதால், தனக்கு திருமணம் ரோகித்தோடு நடந்து விட்டதே என்று ஏமாற்றத்திலும், கோபத்திலும் இருக்கும் வெண்பா இனி இரண்டாவது பாகத்தில் மொத்தமாக வைத்து வில்லத்தனம் செய்ய இருக்கிறாராராம். ஏற்கனவே லட்சுமிக்கு பாரதி தான் தன்னுடைய அப்பா என்பது தெரியும் இந்த நிலையில் இனி ஹேமாவிடமும் லட்சுமி தன்னுடைய அப்பா பாரதி தான் மற்றும் இதுதான் நம்முடைய குடும்பம் என்பதையும் கூற இருக்கிறாராம். இரண்டாவது பாகத்தில் குழந்தைகள் வளர்ந்தது போல சீன்கள் வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.












Click it and Unblock the Notifications