இறுதி கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியல்.. லீக் ஆனது கிளைமாக்ஸ் கதை.. கடைசியில் இப்படி ஒரு முடிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகம் முடிவடைய இருக்கும் நேரத்தில் அதனுடைய கடைசி நேர கிளைமாக்ஸ் புகைப்படங்களும், கதையும் வெளியாகி இருக்கிறது.
ரசிகர்கள் பல வருடம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாரதிகண்ணம்மா சீரியலின் முடிவு வந்துவிட்டாலும் கடைசி நேரத்தில் வெண்பாவின் மாஸ்டர் பிளான் அனைத்தும் முடிக்கப்பட்டு அடுத்த சீசனுக்கு தயாராக முடிந்து இருக்கிறது.

உண்மையை கூறும் வார்டு பாய்
பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் பாகம் கடைசி கட்டத்தில் நெருங்கி விட்டது .இந்த நிலையில் இந்த சீரியலில் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிஎன்ஏ டெஸ்ட் தற்போது வெளியாக இருக்கிறது. இதுவரைக்கும் இரண்டு முறை டிஎன்ஏ டெஸ்ட்டை மாற்றி வைத்தது நான்தான் என வார்ட் பாய் உண்மையை கூற இருக்கிறாராம். ஏற்கனவே இரண்டு முறை வெண்பாவின் சதிக்கு இதுவரைக்கும் உடந்தையாக இருந்த வார்டு பாய் தற்போது உடல்நலம் குறைவாக இருப்பதால் பாரதியின் மருத்துவமனையில் அவருக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து அதுமட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்திடமும் பாரதி நல்ல விதமாக நடந்து கொள்வதை பார்த்து வார்டு பாய் உண்மையை கூறப் போகிறாராம்.

வெளியானது டெஸ்ட் ரிசல்ட்
அதே நேரத்தில் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வரப்போகிறதாம். அதில் கண்ணம்மாவின் இரு குழந்தைகளும் பாரதியின் குழந்தைகள் தான் என்பது தெரிய வந்ததும் குற்ற உணர்ச்சியில் பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழ இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் மொத்த உண்மையையும் தெரிந்து விட்டது என்று ஹேமாவை கடத்தி வைத்துக் கொண்டு வெண்பா நாடகத்தை நடத்த இருக்கிறாராம். மொத்த குடும்பமும் ஹேமாவை தேடி அலைந்து கொண்டிருக்கும்போது வெண்பா தற்கொலை நாடகம் நடத்த இருக்கிறாராம். மாடியிலிருந்து நான் கீழே விழுந்து விடுவேன் என்று வெண்பா மிரட்ட இருக்கிறாராம்.

ஹேமாவுக்கு தெரியவரும் உண்மை
வெண்பாவின் மொத்த பிளானையும் தெரிந்து கொண்டு அவர் மீது கடும் கோபத்தில் இருக்கும் பாரதி வெண்பாவிடமிருந்து ஹேமாவை கடைசியில் காப்பாற்றி மீண்டும் கண்ணம்மாவுடன் சேர இருக்கிறாராம். ஹேமாவுக்கு பாரதி தான் தன்னுடைய சொந்த அப்பா என்பது கடைசியில் தெரியப் போகிறதாம், வழக்கம்போல என்னிடம் என்னுடைய அப்பா யார் என்பதை நீங்க சொல்லவில்லையே என்று மீண்டும் கோபப்பட்டாலும் கடைசியில் குடும்பத்தினர் அனைவரும் சமாதானம் செய்து ஹேமா பாரதியை ஏற்றுக்கொள்ள இருக்கிறாராம்.

எதிர்பாராத முடிவு
அதுமட்டுமல்லாமல் கிளைமாக்ஸ்சில் ஹேமா மற்றும் வெண்பாவிற்கு தலையில் காயம் ஏற்பட இருக்கிறதாம் ஆனாலும் இறுதியில் வெண்பா இதுவரைக்கும் செய்த வந்த குற்றங்களுக்கு எல்லாம் மொத்தமாக ஜெயிலுக்கு செல்ல இருக்கிறார். இத்துடன் இந்த முதல் பாகம் முடிவடைய இருக்கும் நிலையில் இரண்டாவது பாகத்தில் மீண்டும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் பழிவாங்கும் நோக்கத்தில் வெண்பா புது அவதாரம் எடுக்கும் வகையாக இருப்பதாக தகவல்கள் இணையதளத்தில் கசிந்து இருக்கிறது .அதை உறுதி செய்யும் வகையில் தான் ஒரு சில கிளைமாக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றது. எப்படியோ ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு வழியாக முடிவடைந்து விட்டது என்று ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வந்தாலும் இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாளுக்கு இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்றும் இதில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications