"அப்படி மட்டும் நான் செய்யாமல் இருந்திருந்தால்” பிரச்சனையே வந்திருக்காது..ரட்சிதாவின் கணவர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரட்சிதாவை பற்றி அவருடைய கணவர் உருக்கமாக பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ரட்சிதா மற்றும் அவருடைய கணவருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது சமூக வலைத்தளத்தில் சின்னத்திரை ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் அதைப்பற்றி அதற்கான காரணத்தை பற்றியும் தினேஷ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

காதலும் பிரிவும்

காதலும் பிரிவும்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமாகி அந்த சீரியலில் கதாநாயகன் தினேஷை திருமணம் செய்து கொண்ட ரட்சிதா மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு காதல் கணவரோடு சின்னத்திரை வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையில் வெற்றி நடை போட்டு வந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர். தற்போது ரட்சிதா பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டிருக்கிறார்.

பேசினால் தீரும் பிரச்சனை தான்

பேசினால் தீரும் பிரச்சனை தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ரட்சிதாவோடு ராபர்ட் மாஸ்டர் பழகி வருவது குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ரட்சிதாவுக்கும் அவருடைய கணவர் தினேஷுக்கும் பிரச்சனை என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் அந்தப் பிரச்சனை நடக்கும் நேரத்தில் தான் கொஞ்சம் கோபத்தை குறைத்து இருந்தால், இவ்வளவு பெரிய பிரச்சனை பிரிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. இதை நினைத்து நான் பலமுறை வருத்தம் அடைந்து இருக்கிறேன் அன்று நான் கோபத்தை குறைத்து இருந்தாலோ அல்லது கோபத்தில் பல வார்த்தைகளை பேசாமல் இருந்திருந்தாலோ இந்த பிரிவை தவிர்த்து இருக்கலாம் என்று மனம் நொந்து போய் இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரட்சிதா வெளியே வந்த பிறகு சேர்ந்து வாழ்வதற்காக என்னுடைய முயற்சியை நான் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறேன். அதுபோல ரட்சிதாவும் ஒருவேளை முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கலாம் ஆனால் வெளியே வந்து இருவரும் பேசினாலே தீர்ந்து கொள்ளும் பிரச்சனை தான் எங்களுக்குள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

குடும்பத்தினரிடம் பேச்சி இருக்கு

குடும்பத்தினரிடம் பேச்சி இருக்கு

அதுபோல தற்போதும் கூட ரட்சிதாவின் குடும்பத்தோடு தினேஷ் பேசிக்கொண்டுதான் இருக்கிறாராம். ரட்சிதாவின் அம்மா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா இருப்பதால் அவரோடு பேச முடியவில்லை என்ற வருத்தத்தை தினேஷிடம் பேசி இருக்கிறார். அப்போது இதற்கு முன்பு சூட்டிங்கில் இருக்கும்போது கூட உங்களால் நினைத்த நேரம் பேச முடியாது. பார்க்க முடியாது, ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் உங்களால் ரட்சிதாவை பார்க்க முடியும் என்று ஆறுதல் கூறினாராம். அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரட்சிதா செல்கிறார் என்ற தகவல் வெளியானதும் அவருக்கு வாழ்த்து கூறி மெசேஜ் அனுப்பி இருந்தாராம். ஆனால் அதற்கு ரட்சிதா எந்த பதிலும் அனுப்பவில்லையாம். ஆனால் தினேஷின் மெசேஜை ஓப்பன் செய்து பார்த்து இருந்தாராம். ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கோரன்ட் டைமில் இருக்கும்போது கூட ரட்சிதாவின் அம்மா தினேஷுக்கு போன் செய்து ரட்சிதா பிக்பாஸுக்கு போக இருக்கிறார். நீங்கள் அவரிடம் ஃபோன் செய்து பேசி விடுங்கள் என்று கூறியிருந்தாராம். நான் ஏற்கனவே பேசிவிட்டேன் ஆனால் அங்கே இருந்து எந்த ரெஸ்பான்ஸ் இல்லை என்று கூறியதாகவும் கூறி இருக்கிறார். பல்வேறு சோதனைகளையும் பிரச்சனைகளையும் தாண்டி தான் ரட்சிதா இந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடினால் முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்க காரணம்

பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்க காரணம்

ரட்சிதாவுக்காக தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் பார்த்து வருவதாகவும் கூறி இருக்கிறார். இதற்கு முன்பு ரட்சிதாவை பார்க்க வேண்டும் என்றால் சூட்டிங் ஸ்பாட்டில் எங்கே இருக்கிறார் என்று தேட வேண்டும். சில நேரங்களில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இதற்கு முன்பு ரட்சிதா நடித்து வந்த சீரியல் டைரக்டர் என்னுடைய பிரண்டாக இருப்பதால் அவரிடம் போன் செய்து நான் போய் சூட்டிங் ஸ்பாட்டில் பார்ப்பேன் ஆனால் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது .அதனால் அப்படி செய்ய முடியாது. தற்போது எப்போது எல்லாம் ரட்சிதாவை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது 24 மணி நேர எபிசோட் பார்த்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.

அந்த வேதனை கடினமானது தான்

அந்த வேதனை கடினமானது தான்

ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவருடைய ரட்சிதாவின் அம்மாவிடம் தினேஷ் பேசினாலும், அவர்களைப் பார்ப்பதற்காக அவர்களுடைய வீட்டுக்கு செல்ல மாட்டாராம் .காரணம் இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனையில் இவர் அவருடைய குடும்பத்தோடு சேர்ந்து விட்டால் தான் மட்டும் தனியாக இருக்கிறோமா என்று ரட்சிதா பீல் பண்ணி விடக்கூடாது என்பதற்காகத்தான் அதுபோல செய்யவில்லை என்று கூறி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு எப்படியும் பல நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை முழுக்க பார்ப்பார். அதுபோல நான் பேசிய இந்த வீடியோவையும் பார்ப்பார் எல்லோரையும் நன்றாக புரிந்து கொண்டு இனி ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று தினேஷ் கூறியிருக்கிறார். பல நேரங்களில் நம்முடைய மனதிற்கு பிடித்தவர்கள் அருகில் இருக்கும் போது அதோட அருமை தெரியாது ஆனால் பிரிந்து சென்ற பிறகுதான் வலி வேதனை அதிகமாக இருக்கும். அந்த வேதனையை நான் அனுபவித்து விட்டேன் என்று உருக்கமாகவும் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+