பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் மனைவி திடீர் மரணம்... 43 வயதில் மரணத்திற்கான கொடுமையான காரணம்!!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் விக்ரம் என்கிற பெயரில் நடித்து வரும் பரத் கல்யாண் மனைவி தற்போது இன்று அதிகாலை இயற்கை எய்துள்ளார்.
பரத் கல்யான்க்கு பிரபலங்கள் பலர் ஆறுதல் கூறி சமூக வலைத்தளத்தில் போஸ்ட் வெளியிட்டு வருகின்றனர்.
பரத் கல்யாண் மனைவி திடீரென இறப்பதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது.

90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் நடிகர்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜமீலா சீரியலில் கதாநாயகியின் அப்பா கேரக்டரில் நடித்து வரும் பரத் கல்யாண் பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக 90 கிட்ஸ்களின் பேவரைட் நடிகராக இவர் இருந்து வருகிறார். விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல்களிலும் இவருடைய சீரியல்கள் நடித்து வருகிறார். சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பரத் கல்யாண் நடித்திருக்கிறார். இவருடைய மனைவியின் பெயர் பிரியா மற்றும் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

டயட்டால் சர்க்கரை நோய்
பரத் கல்யாண் மகிழ்ச்சியான குடும்ப புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருவர் இந்த நிலையில் பரத் கல்யாணின் மனைவி திடீரென உயிரிழந்து இருக்கிறார் .இவர் டயட்டால் அதிகரித்த சர்க்கரை நோய் காரணமாக ஒரு சில நாட்கள் கோமாவில் இருந்து இப்போது 43 வயதிலேயே இயற்கை எழுதி இருக்கிறார்.

ஒரு சில நாட்கள் கோமாவில்
பரத் கல்யாண் மனைவி, தற்போது பலரும் பாலோ செய்து வரும் போலியோ டயட் பாலோ செய்திருக்கிறார். அதனால் இவருடைய உடலில் திடீரென டயாபட்டிக் அதிகமாயிருச்சாம். அதற்காக ஒரு சில மாதங்களாகவே இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். இந்த நிலையில் ஒரு சில நாட்களாக கோமாவில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு இயற்கை எய்து விட்டாராம்.

ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில்
43 வயதில் இவருடைய இறப்பு சின்னத்திரையில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பரத் கல்யாண் மனைவியான பிரியாவின் சகோதரி வெளியூரிலிருந்து வந்துகிட்டு இருக்கிறதனால நாளைக்கு காலை அவங்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டு இருக்காங்களாம். இந்த நிலையில் பரத் கல்யாணத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல்களை கூறி வருகின்றனர். பரத் கல்யாண் மனைவியின் திடீர் மரணம் அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications