ரட்சிதாவுக்கும் எனக்கும் இதுதான் பிரச்சனை.. ஆனால் இப்போ இதுதான் என்னுடைய முடிவு..தினேஷ் கூறிய பதில்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரட்சிதாவை பற்றி அவருடைய கணவர் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சின்னத்திரை தம்பதிகளாக இருக்கும் ரட்சிதா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் பரவி வந்தது. தற்போது அதை குறித்து அதற்கான காரணங்களை குறித்து ரட்சிதாவின் கணவரான தினேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

காதல் திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக சின்னத்திரையின் மீனாட்சி ஆக வலம் வந்து கொண்டிருக்கும் ரட்சிதா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் .இவர் ஆரம்பக் காலத்தில் முதல் முறையாக நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கதாநாயகனாக நடித்த கணேஷ் கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக சின்னத்திரை வாழ்க்கையில் தங்களுடைய பயணங்களை தொடர்ந்து வந்தனர்.

கருத்து வேறுபாடு
கடைசியாக ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் நாச்சியார்புரம் என்ற சீரியலில் ஜீ தமிழில் நடித்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் இந்த சீரியல் பாதியிலே முடிக்கப்பட்டது. அதற்கு பிறகு தினேஷ் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார் . தற்போது தான் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் நடித்து வருகிறார் .அதுபோல ஜீ தமிழிலும் புது சீரியலில் விரைவில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் திணேஷ் மற்றும் ரட்சிதாவிற்கு இடையே கருத்து வேறு காரணமாக பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் பரவி வந்தது. அதுபோலத்தான் இருவரும் எந்த நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா இருக்கும்போது அவருடைய கணவர் தினேஷ் தங்களுடைய பிரிவிற்கான காரணம் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கோபத்தால் இழந்து விட்டேன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ரட்சிதாவை பற்றி பல நெகட்டிவ் கருத்து வருகிறது .ஆனால் அதை எல்லாம் நான் நம்பவே மாட்டேன் எங்கள் இருவருக்கும் இருப்பது ஒரு சின்ன கருத்து வேறுபாடு தான். அது எப்போ வேணுணாலும் எங்களுக்குள் மாறிவிடும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரட்சிதா செல்கிறார் என்று தெரிந்த போது கூட நான் அவருக்கு வாழ்த்து கூறி மெசேஜ் செய்தேன். ஆனால் ரட்சிதா எனக்கு ரிப்ளை செய்யவில்லை ஆனால் என்னுடைய மெசேஜை அவர் பார்த்து இருக்கிறார். ஆனாலும் வெளியே வந்த பிறகு நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசினால் பிரச்சனை தீர்ந்து விடும். என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய கோபத்தால் நான் பல விஷயங்களை இழந்து விட்டேன். இப்போதுதான் அது புரிகிறது என்று கூறி இருக்கிறார்.

ரட்சிதாவை பற்றி எனக்கு தெரியும்
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ரட்சிதா நடந்து கொள்வது தவறு என்று பலர் நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அது முற்றிலும் உண்மை இல்லை .ரட்சிதாவை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர் அவராகத்தான் இந்த நிகழ்ச்சியில் விளையாடி வருகிறார். பொய்யாக நடிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டுவது எல்லாம் பார்க்கும்போது சிரிப்பாக தான் வருகிறது .அதுபோல ராபர்ட் மாஸ்டர் இவரிடம் நடந்து கொள்ளும்போது இவர் ஏன் மறுப்பு தெரிவிக்காமல் அவர் மீது கோபப்படாமல் இருக்கிறார் என்று பல கருத்து தெரிவித்து கேட்டு வருகிறார்கள். அப்படி ரட்சிதா செய்தால் அந்த இடத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் நடக்கும், ஒரே வீட்டில் இருக்கும் போது தன்னுடைய வேலையில் கவனமாக இருக்க வேண்டும். அதுபோல அடுத்தவருடன் பிரச்சனை வேண்டாம் என்று ரட்சிதா நினைத்துக் கொண்டிருக்கிறார். அது எனக்கு புரிகிறது ஆனால் ரட்சிதாவை பற்றி வேண்டாத விதமாக பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications