பாரதி கண்ணம்மா சீசன் 2 நடிகர்கள் யார்? இயக்குனர் வெளியிட்ட பதிவு.. குவியும் கருத்துகள்.. இவர்கள் தானோ?
பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டாவது பாகத்தில் யார் ஜோடியாக நடிக்க வைக்கலாம் என ரசிகர்களிடம் இயக்குனர் பிரவீன் பென்னட் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பகுதி இறுதி அத்தியாயத்தை நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பகுதி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் இரண்டாவது பகுதி தொடங்கலாமா என அந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பெண்ணட் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பகுதியில் யார் கதாநாயகன் கதாநாயகி யாராக இருக்கும் என பிரவீன் பெண்ணட் புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நெட்டிசங்களின் ஆசை நிறைவேற போகிறது
விஜய் டிவியில் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்த சீரியல் எப்போது முடிவடையும் என்று நெட்டிசன்கள் ஆரம்பத்தில் இருந்தே கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சீரியலின் கதை ஒரே ஒரு மையக்கருத்தைக் கொண்டே இருந்து வருகிறது என்று அதிகமானோர் இதை கலாய்த்து கொண்டிருந்தாலும், இந்த சீரியலுக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து தான் வந்தனர். அதனால்தான் இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது நெட்டிசன்கள் எதிர்பார்த்தபடியே இந்த சீரியல் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது.

இயக்குனர் வெளியிட்ட பதிவு
முதல் பாகம் முடிவடைய இருக்கும் நிலையில் இரண்டாவது பாகம் தொடங்க இருக்கிறது என்ற தகவல்களும் தற்போது பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து இந்த சீரியலில் இயக்குனர் பிரவீன் பெண்ணட் இரண்டாவது சீசனின் கதையையும் இயக்குனராக தொடங்க இருக்கிறார் என்பதை தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாகவும், பதிவு மூலமாகவும் ரசிகர்கள் உறுதி செய்திருக்கின்றனர். பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது சீசன் தொடங்கலாமா? என்று இயக்குனர் பிரவீன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசிகர்களின் கேள்வி
அது மட்டுமில்லாமல் பிரவீன் பென்னட் ஒரு நடிகரும் நடிகையும் இருக்கும் புகைப்படத்தை பிளர் செய்து வெளியிட்டு, பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது சீசனின் ஜோடி யாராக இருக்கும் கண்டுபிடிங்கள் என்று பதிவிட்டு சில நிமிடங்களில் அந்த புகைப்படத்தையும் டெலிட் செய்திருக்கிறார். ஆனால் இதை ஒரு சில ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தற்போது அது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எதற்காக இயக்குனர் பிரவீன் பதிவிட்ட புகைப்படத்தை டெலிட் செய்தார் என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப இன்னும் ஒரு சில ரசிகர்கள் இது அவராக இருக்குமோ அல்லது இவராக இருக்குமோ என்று பல்வேறு நடிகர் நடிகைகளின் பெயர்களை கூறி வருகின்றனர்.

அது யாராக இருக்கும்
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கேரக்டரில் நடித்த சிபி மீண்டும் இந்த இரண்டாவது சீசனில் கதாநாயகனாக இருப்பாரோ என்றும் அல்லது சீரியல் நடிகர் விஷ்ணு இருக்குமோ என்றும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப, அந்த பிளர் செய்யப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் நடிகையின் சாயல் பார்ப்பதற்கு ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகி பவித்ரா ஜனனி போல இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். அல்லது சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலின் கதாநாயகியாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பலர் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications